(Reading time: 26 - 51 minutes)

நீ குழலீயை கைதாங்கலா அந்த வீல் ல உட்கார வை டீனா... லிவிங்க் ரூமுக்கு கூட்டிடு போயிடலாம்...

ஏன்? அவ இங்க இருக்கட்டும் டேவிட்... நாம வேண்ணா லிவிங்க் ரூமுக்கு போகலாம்...

ஹலோ.. மேடம் தான் முக்கியமான ஆள்.. 'என்றான் டேவிட்

நான் இங்கேயே இருக்கேன் டேவ்... நாற்காலி வேணா இங்கேயே போட்டுக்கலாம்.. - குழலீ

அப்போ... நாங்க கொஞ்ச நேரம் வெளியே இருக்கோம்' என்றபடி எழுந்து வெளியே சென்றனர் அனைவரும்.

நீ எதுக்கு இந்த மீட்டிங்குக்கு??

ஹலோ... என்ன நக்கலா? நான் வராம இந்த மீட்டிங் நடக்காது... அதுக்கு முன்னாடி என்ன ரிங்க் டோன் அது? 

ஏன்? அந்த பாட்டுக்கு என்ன?? ஆமா நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு முதல்ல... அதுக்கு அப்புறம் உன் கேள்விக்கு பதில் சொல்லறேன்..' என்றுவிட்டு அந்த பாடலை சத்தமாய் பாடிக்கொண்டே சென்றான். மீண்டும் அவன் மொபைலில் அழைப்பு வந்தது..

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று..

ஏதோ...அது ஏதோ...

அடி எதோ உன்னிடம் இருக்கிறது...

அதை அரியாமல் விடமாட்டேன்..

அது வரை உன்னை தொடமாட்டேன்...

டேய்...பிகே... அந்த பாட்டை நிறுத்த போறியா இல்லையா? தயவுசெய்து அந்த ரிங்க் டோனை மாத்து!!

ஏய்...என்னது? என்ன சொன்ன?? கம் அகேயின்?

டேய்... ப்ளீஸ் டா...' என்று அவள் சினுங்க பிரபு மேலும் உற்சாகமானான். 

திரும்பவும் அதே வரிகளை அவன் ஹம் செய்ய அவனை அடிக்கும் நோக்கத்துடன் தட்டுதடுமாறி எழுந்து நின்று அவனை நோக்கி வந்தாள் குழலீ.

தடுமாறி அவள் அருகில் வரும் போதே கால்கள் இடற கீழே விழ போனவளை தாங்கி பிடித்தான் பிரபு! அவன் சட்டையை  பிடித்து குழலீ பேலன்ஸ் செய்ய அவளை இடையோடு இருக்கிகொண்டான் கணவன்.

கூந்தல் முடிகள்... நெற்றி பரப்பில்..

கோலம் போடுதே... அதுவா

கற்றைக்கூந்தல்.. இடையை தாண்டி

அசைந்துஆடுதே...அதுவா

சிரிக்கும் போது... கண்ணில் மின்னல்...

தெறித்து ஓடுதே...அதுவா

புருவத்தின் ஓரம்... நட்சத்திரம் போலே..

மச்சம் உள்ளதே...

அதுவா...அதுவா...அதுவா

மூக்கின் கீழே கவிதைகள் ரெண்டு

மிச்சம் உள்ளதே...

அதுவா...அதுவா...அதுவா..

அதை அறியாமல் விடமாட்டேன்...

அதுவரையும் உன்னை விடமாட்டேன்...

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று..

ஏதோ...அது ஏதோ...

அடி எதோ உன்னிடம் இருக்கிறது...

 

முல்லை நிறத்தில்... பற்களில் இரண்டு

தள்ளி உள்ளதே...அதுவா..

சங்கு கழுத்தை.. வெள்ளிச் சங்கிலி..

தடவுகின்றதே...அதுவா..

ஒவ்வொரு வாக்கியம் முடியும்போது..

முறைத்து பார்ப்பாய்...

அதுவா...அதுவா...அதுவா..

ஓரிரு வார்த்தை தப்பாய் போனால்

கண்ணை உருட்டுவாய்...

அதுவா...அதுவா...அதுவா...

அதை அறியாமல் விடமாட்டேன்...

அதுவரையும் உன்னை விடமாட்டேன்...

அதுவரையும் அவன் பாடுவதை கேட்டுக்கொண்டு நின்ற குழலீ அவன் கைகளில் இருந்து விடுபட்டு சமாளித்து நின்று பிரபுவின் சட்டையை கொத்தாக பிடித்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.