(Reading time: 26 - 51 minutes)

ரி குழல்... நானும் போய் படுக்கபோறேன்... போய் தூங்கு.. குட் நைட்' என்றவள் அடுத்த நோடி அங்கே நிற்கவில்லை.

சற்று முயன்று பக்கதில் இருந்த சோப்பாவை தாங்கி பிடித்து மெல்ல நடக்க தொடங்கினாள் குழலீ. இரண்டு அடி எடுத்து வைத்து அவள் தடுமாற பிரபு அவளை வேடிக்கை பார்த்திருந்தான். அவன் கை அவளை பற்ற துடித்தாலும் அதை செயல்படுத்தவில்லை! தட்டுத்தடுமாறி அவள் படுக்கை அறையை அடைந்து கட்டிலில் படுத்துக்கொண்டாள். 

வெகு நேரம் விழித்து பார்த்தும் பிரபு வந்தபாடில்லை! என்ன நினைக்கிறான்?? என்ன செய்யப்போறேன்?? அவன் மனசை ஏன் படிக்கமுடியவில்லை நம்மால்?? உன் மனசில என்ன தாண்டா நினைக்கற?? காலையில தான் அடியேன் சரணாகதி...காலம் முழுக்க அடி வாங்க நான் தயார்... அப்படி இப்படினு சொன்னான்! பிரப்போஸ் தானே பண்ணினான்??? ஆனா இப்போ... ஏன் இப்படி நடந்துக்குறான்?? டேய் சத்தியமா என்னால முடியலடா... திரும்பவும் முதல்ல இருந்தா ஆரம்பிக்கனும்??? - என்று அவள் மனது அலைப்பாய்ந்து கொண்டிருந்தது.

று நாளும் இதே ஹைட் அண்ட் சீக் ஆட்டம் தொடர.. பொறுக்க முடியாமல் அன்று இரவு அவன் படுக்கை அறைக்குள் நுழையும்வரை விழித்து இருந்தாள் பூங்குழலீ! அவள் விழித்திருப்பதை பார்த்து ஒரு நிமிடம் அதிர்ந்து நின்று பின் கதவை தாளிட்டுவிட்டு உள்ளே வந்தான் பிரபு.

ஒரு நிமிஷம் நில்லுங்க! என்னதான் நினைச்சிட்டு இருக்கீங்க நீங்க?

அவன் சட்டை செய்யாமல் தண்ணீரை குடித்தான்...

உங்கள தான் கேட்கறேன்! எனக்கு ஒரு பதில் சொல்லுங்க...

லாப்டாப்பையும் ஒரு புத்தகத்தையும் எடுத்துக்கொண்டு அங்கே இருந்த கௌச்சில் அமர்ந்து படிக்க தொடங்கினான்.

இங்க ஒருத்தி உங்களுக்காக வெயிட் பண்ணறேன்...உங்ககிட்டதான் காட்டு கத்தல் கத்திட்டு இருக்கேன் பிரபு! நீங்க பாட்டுக்கு புக் படிக்க உட்கார்ந்துட்டுங்க... அதுவும் வேணுமும் செய்யறீங்க... உங்களுக்கு புக் படிக்க பிடிக்காது...யூ டோண்ட் ஹேவ் ரீடிங்க் ஹாப்பிட்!

அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு மறுபடியும் தொடர்ந்தான்.

அவள் உச்சக்கட்ட கோபத்தில் கொந்தளித்துக்கொண்டிருந்தாள். ஒரு கணம் 'சரிதான் போடா... நீயா வந்து பேசுற வரை நான் ஏன் உன்னை சட்டை செய்யனும்..நீ என்ன அவ்வளவு பெரிய ஆளா?? நீயா நானா பார்த்திடலாம்!' என்று எண்ணியவள்.. அடுத்த நிமிடம் 'இல்ல.. இவரை இப்படியே விட்டா சரிபடாது! இவர் தானே காதல் ஓவியமேனு உருகினார்.. பொறுமை... பொறுமை...குழல் டார்லிங்க்! இப்படியே யோசிச்சா வாழ்க்கை போராட்டம் தான். சோ ரிலாகஸ்...'

எழுந்து அவனருகில் சென்றவள் அவன் கையில் இருந்த புத்தகத்தை பிடுங்கி கீழே வைத்தாள். அவன் எழுந்து சென்று கட்டிலில் அமர்ந்தான். அவளும் சென்று அவனருகில் அமர்ந்தாள். என்னதாங்க உங்க பிரச்சனை? நேத்து இப்படியில்ல நீங்க! காலையில என்னனேனவோ சொன்னீங்க.. அப்புறம் அந்த மீட்டிங்க் அப்புறம் தான் இப்படியிருக்கீங்க! நான் தான் இந்த ஸ்டார்ட் அப் பின்னாடி இருக்கேனு உங்ககிட்ட சொல்லலைனு தானே உங்களுக்கு கோபம்?? சாரிங்க... சத்தியமா சாரிங்க... உங்ககிட்ட சொல்லவேனாமுனு நினைக்கல... ஆனா நமக்குள்ள எதுவுமே சரியில்லை... இப்போவரைக்குமே சரியானா மாதிரி தெரியல... அப்போ இந்த விஷயத்தை பத்தி எப்படி சொல்ல? தயவு செய்து பேசுங்க! எதுவாயிருந்தாலும் வெளிப்படையா பேசுங்க!'

முடிச்சிட்டியா?? சரிதான் போடாநு சொல்லுவனு நினைச்சேன்! பட் பரவாயில்லை...இவனை இப்படியே விட்டா சரிவர மாட்டான்.. நேத்துதான் அவனுடைய மனசை சொன்னான்...இவன்கூட டேய்லி போராட முடியாது..சோ பொறுமையா போகலாம்னு முடிவு செய்துட்ட..ஹம்ம்ம்... நல்லாதான் பேசுற! ஆனா... இதை... இந்த ஸ்டார்ட் அப் மட்டும் தான் என்கிட்டயிருந்து மறைச்சியா??சொல்லு? நீ சொன்னதை தான் நான் உனக்கு திரும்பி படிக்கறேன் குழலீ! வாழ்க்கைக்கு அடிப்படை நேசம்..அன்பு...நம்பிக்கை! அது உன்கிட்ட இல்ல... என்மேல அடிப்படை நம்பிக்கையில்ல!!! அது எப்போ வருதோ அப்போ சொல்லு... அப்போ பார்கலாம்! அப்போ பேசலாம்... இப்போ குட் நைட்.. நாளைக்கு இந்தியாவுக்கு பஃளைட்! கிளம்ப தயாராயிரு!

சரிதான் போடா பிகே!' என்று மனம் நொந்து படுத்துவிட்டாள்.

ஆச்சு.. இதோ இந்தியா வந்து இரண்டு நாட்கள் கடந்துவிட்டது...இன்னமும் இவர்கள் சண்டை ஓய்ந்தபாடு இல்லை. கீதா அதை கண்டுக்கொண்டாள்..எட்டாம் மாதம் நடந்துக்கொண்டிருந்தது. யோசித்தவள் செந்திலுக்கும் ஷாஜித்தாவுக்கும் அழைத்து விவரம் சொன்னாள்.

ஆனால் அதற்கு முன்னால் குழலீயே கன்வேஸ் செய்துவிட்டாள். அன்று அவர்கள் மாடி தோட்டத்தில் அமர்ந்திருந்தாள் குழலீ. பிரபு நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்...இப்படி உட்காருறீங்களா?

சரி சொல்லு!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.