(Reading time: 23 - 45 minutes)

'ன்??? சினிமான்னா பிடிக்காதோ???' அவளே கேட்டாள்

'ம்? ஆங்.. ஆமாம்.. என் பொண்டாட்டி தான் சினிமாலே நடிக்கணும்ன்னு அலைஞ்சிட்டு இருக்கு. எனக்கு...  வேண்டாம்மா..'

'அப்படியா.. சரி ... வேண்டாம்னா விடுங்க. நான் வரேன்..' அவள் புன்னகையுடன் தலை அசைத்து விட்டு காரில் ஏற எத்தனிக்க...

'அம்மா... ' அவன் அழைப்பு அவளை திருப்பியது

'நீங்க தப்பா நினைக்கலைன்னா நான் ஒண்ணு கேட்கலாமா?'

'கேளுங்க...' நின்றாள்

'எல்லாரும் சொல்றா மாதிரி நீங்கதான் ரிஷியை கல்யாணம் பண்ணிக்க போறீங்களா? அவன் கேள்வி அவளிடம் புன்னகையை தோற்றுவிக்க மௌனமாய் நின்றாள் அவள்.

'இல்லை. ஏதோ ஒரு ஆர்வத்திலே கேட்டேன்... சொல்ல கூடாதுன்னா விட்டுடுங்க...'

எது செலுத்தியது என்று தெரியவில்லை. ஏன் சொன்னாள் என அவளுக்கே புரியவில்லை. ஆனால் சொன்னாள் அவனிடம் 'நான் கல்யாணம்ன்னு ஒண்ணு பண்ணிகிட்டா அது ரிஷியை மட்டும்தான்'

'ரொம்ப.. ரொம்ப சந்தோஷம்மா.. அவனை... மன்னிச்சுக்குங்க... அவரை நல்லா பார்த்துக்கோங்க... ரெண்டு பேரும் நல்லா இருக்கணும்...' கொஞ்சம் நெகிழ்ந்த குரலில் அவன் சொல்ல சின்ன புன்னகையுடன் தலை அசைத்து விட்டு கிளம்பிவிட்டாள் அருந்ததி.

அதன் பிறகு சில நாட்களில் அந்த சம்பவம் அவள் நினைவை விட்டு அகன்றும் விட்டது. இப்போது இந்த புகைப்படத்தை பார்த்த பிறகு......

'நீங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கணும்..' என்றானே நெகிழ்ச்சியுடன். அப்படி என்றால் ரிஷி அவனது தம்பி என அவனுக்கு தெரிந்திருக்க வேண்டுமோ??? இப்போது எங்கிருப்பான் அவன்???

'குழந்தைக்கு நான் தான்டா அப்பா ..' என்றானே சஞ்சா அப்படி என்றால் அவன் உயிருடன் இல்லை என்று அர்த்தமா???

இந்த விஷயத்தில் அருந்ததி கேட்டது சந்திரிக்காவின் பேச்சை மட்டும் தான் என்றபடியாலே இத்தனை கேள்விகள் அவளுக்குள்ளே !!!!!

அந்த நொடியில்... திடீரென்று அவள் உடலெங்கும் ஏதோ ஒரு சந்தோஷ மின்சாரம் பாய எதிரே பார்க்காமல் எப்படி என்றே அறியாமல் கணவனின் கைச்சிறையில் இருந்தாள் அவள்.

'பொண்....டா...ட்....டி' அவள் முகமெங்கும் அவனது முத்தமழை.

'மெனி மெனி மெனி மோர் ஹாப்பி ரிடர்ன்ஸ்டா ரோஜாப்பூ...' மறுபடியும் முத்த சங்கீதம். கொஞ்சம் திக்குமுக்காடித்தான் போனாள் அவள். அவள் மனமெங்கும் சந்தோஷ அருவி.

'எப்படி திடீரென ஞாபகம் வந்ததாம்???' அவள் யோசித்து முடிக்கும் சொல்லியும் விட்டான் அவன்.

'சாரிடா... ரொம்ப சாரி.. ராத்திரி மறந்திட்டேன்... இப்போ காலையிலே ஃபேஸ் புக் சொல்லிடுச்சு.. தப்புதான் உன் பிறந்த நாளை ஃபேஸ் புக் சொல்லி நான் தெரிஞ்சுக்க கூடாது தான் மன்னிச்சுக்கோ ப்ளீஸ்....'. இன்னொரு மழையும் அடித்து ஓய்ந்தது.  அவனிடம் அப்படி ஒரு உற்சாகம்

வசியின் கைச்சிறையில் வாழ வேண்டும் என்பது அவளது எத்தனை ஆண்டு தவம்.???? சற்று முன் மனதை உறுத்திய எல்லாவற்றையும் சில நொடிகள் மறந்து, மழையில் நனைந்து கரைந்து இமை தட்டாமல் கணவனையே பார்த்திருந்தாள் அவள். இப்போது ரசனையின் பாவம் அவன் முகத்தில்.....

'அழகி டி நீ...' விரலால் அவள் முகத்தில் கோலமிட்ட படியே அவன் சொல்ல, வெட்க சிரிப்புடன் இமை குடைகள் தாழ

'வெட்கமா? என் கிட்டே என்னடி வெட்கம் உனக்கு? என்றபடி அவளை மறுபடி இழுத்து தன்னோடு சேர்த்துக்கொண்டான் ரிஷி. அந்த புகைப்படம் இன்னமும் அவள் கையில். அவன் அவளை அணைத்துக்கொள்ள அவளது கை அவர்கள் இருவருக்கும் நடுவில்

'என்ன கிஃப்ட் வேணும்னு சொல்லு .உனக்கு ..' இப்பவே ..... இப்பவே.... சஞ்சாவிலே ஆரம்பிச்சு எல்லாரையும் கூப்பிட்டு இன்னைக்கு இங்கே ஒரு பார்ட்டி... கலக்கிடுவோம் விடு ...

'அதெல்லாம் எதுவும் வேண்டாம்.. வசி... சஞ்ஜா. இன்னைக்கு ஊருக்கு கிளம்பணும்..... தேவை இல்லாம யாரயும் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்.... இன்னொரு நாள் பார்த்துக்கலாம்    உன் கைக்குள்ளே இருக்கேனே.... அதுவே ரொம்ப சந்தோஷமா இருக்கு வசி.. லவ் யூ....' அவன் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டு 'அவள் சொல்ல இன்னும் அதிகமாக பொழிந்தான் அவனது அன்பு மழையை 

சில நொடிகள் கழித்து திடீரென நினைவு வரக்கேட்டான்

'ஹேய்... ராத்திரி அடி பட்டதே ... உன் கை இப்போ எப்படி இருக்கு??? எங்கே  காட்டு...' அப்போதுதான் தனது கையிலிருக்கும் புகைப்படம் நினைவுக்கு வர, குலுங்கியது அவளுக்குள்ளே......

'என்ன செய்வதாம் இப்போது???"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.