(Reading time: 23 - 45 minutes)

தே நேரத்தில் வீடு வந்து சேர்ந்திருந்தான் சஞ்சா.... எல்லாரும் ஊருக்கு கிளம்பிக்கொண்டிருக்க, நேற்றே தங்கள் வீட்டுக்கு சென்றுவிட்டிருந்த அரவிந்தாட்சனை கைப்பேசியில் அழைத்தான்.

பேச்சினிடையே அவராகவே சொன்னார் 'நீ சந்தோஷமா போயிட்டு வா. மேகலாவும், திவாகரும் என்னை மீறி எதுவும் செய்ய முடியாது. நான் பார்த்துக்கறேன்.' சஞ்சாவுக்குள் நிம்மதி பிராவகம்.

அதே நேரத்தில் அருந்ததியின் கைப்பையை மேகலா  மெல்ல துழாவ தட்டுபட்டது அந்த புகைப்படம். வெளியே எடுத்தார் அதை. அதை பார்த்தவுடன் சற்று முன் அந்த அறையில் பார்த்த ஜானகியின் முகமும் நினைவில் வந்து போனது.

டேய்... அஸ்வத்... இந்த அருந்ததி எங்கே டா இங்கே திடீர்ன்னு வந்தா???' யோசனையுடனே கேட்க...

அங்கே சஞ்சா யாரையோ அட்மிட் பண்ணி இருக்கான் இல்ல. அவங்களை பார்க்க ரெண்டு பேரும் வந்திருக்காங்க.'

அப்படி என்றால்??? இது தான் ரிஷியின்  அம்மாவும் அண்ணனுமா??? அவனுக்கு ஒரு வேளை இந்த விஷயம் தெரியுமா??? சொல்ல வேண்டும். இவள் தான் என் அம்மா வென எல்லார் முன்னிலையிலும் சொல்ல வேண்டும் ரிஷி' உள்ளுக்குள் கொதித்தது மேகலாவுக்கு.

கொஞ்ச நேரத்தில் ஒரு நர்சின் மூலமாக அருந்ததியை அடைந்து இருந்தது அந்த கைப்பை. ஆனால் அதை மேகலா திறந்து பார்த்திருக்க கூடும் எனும் அளவுக்கு யோசிக்கவில்லை அருந்ததி.

விமான நிலையத்தில் கிடைத்த ரசிகர்களின் அன்பு கூச்சல்கள் வாழ்த்துகளில் மூழ்கி எழுந்து மனம் நிறைய மகிழ்ச்சியுடன் சஞ்சா விமானம் ஏறிவிட்டிருந்தான். அவன் அருகில் அஹல்யா. நேரம் மாலை ஆறு மணியை தொட்டு இருந்தது....

'சும்மா இரு சஞ்சா...' அவளது வெட்க சிணுங்கல்

'அதெல்லாம் முடியாது மரக்கட்டை. அப்புறம் எப்படி இந்த மரக்கட்டையை மறுபடியும் பூக்க வைக்கிறதாம் சொல்லு..'

'அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்..' அவள் சொல்லி முடிக்க இருவர் கண்ணிலும் பட்டான் அவன்.

தே நேரத்தில்... அங்கே மருத்துவமனையில்... ஜானகிக்கு அவ்வபோது நினைவு வந்து வந்து போய்க்கொண்டிருந்தது.

'இன்னைக்கு நைட் இங்கே இருக்கட்டும். நாளைக்கு சரியாயிடுச்சுன்னா டிஸ்சார்ஜ் பண்ணிடறேன்' என்றார் டாக்டர். 'நீங்க வேணும்ன்னா வீட்டுக்கு போயிட்டு வாங்க மிஸ்டர் ரிஷி. வீ வில் டேக் கேர்..'

'முடியவில்லையே. விட்டு போக மனம் வரவில்லையே???' அருந்ததியிடமும் சொன்னான் அதை. 'இது என்ன பந்தம்ன்னே புரியலை எனக்கு.'

புன்னகையே அதற்கு பதிலானது.

நேரம் இரவு பத்து மணியை தொட்டிருந்தது. அவன் எவ்வளவு சொல்லியும் வீட்டுக்கு போக மறுத்திருந்தாள் அருந்ததி. என்னதான் அவள் அவனுக்கு காவலாக இருப்பதாக நினைத்துக்கொண்டாலும் நடக்கபோவதை யாராலும் தடுக்க முடியாது என அறிந்திருக்க வில்லை அவள்.

கொஞ்ச நேரம் செல்ல அருந்ததியும் அசந்து உறங்கிவிட, இவன் மட்டும் நாற்காலியில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தான். ஜானகி அம்மா அரை மயக்கத்தில் ஏதேதோ புலம்பிக்கொண்டிருந்தார்.

ஒரு கட்டத்தில்... அவருடைய புலம்பலில் அவன் இதயம் ஒரு முறை நின்று துடிக்க திடுக்கிட்டு... அதிர்ந்து....  நிமிர்ந்தான் ரிஷி.

2/3 episodes to go....

Episode # 17

Episode # 19

மழைச்சாரல் தொடரும்......

{kunena_discuss:886}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.