(Reading time: 14 - 28 minutes)

"மாமி.. இது என் குழந்தை நான் தர மாட்டேன்.. அம்பாள் எனக்காகவே குடுத்துருக்கா.. இதை கேக்காதேள்.. வேணும்னா ஒன்னு பண்ணுங்கோ.. அவளுக்கு வேற குழந்தை குடுத்துடுங்கோ..", என்று புரியாமல் பேசினாள் கமலா.

"அய்யோ பகவானே இந்த பொண்ணுக்கு பிரமை பிடிச்சுடுத்து போல இருக்கு.. புரியாம பேசறா.. குழந்தை என்ன பொம்மையா.. ஒருத்தர் கையிலிருந்து பிடுங்கி இன்னோருத்தருக்கு தர..என்ன சொல்லி புரிய வைப்பேன் இவா ரெண்டு பேருக்கும்..", என்று அந்த முதியவளும் அழ ஆரம்பித்தாள்.

அதற்குள் அறைக்குள் இதை கேட்டுக் கொண்டே வந்தனர் டாக்டரும் விஸ்வனாதனும்.. பின்னேயே நர்ஸ்..குழந்தையுடன் வந்தாள்.

ஒரு கணம் யோசித்து விட்டு..தயங்கியபடி.."மாமி நான் ஒன்னு சொல்லறேன் தப்பா நினைச்சுக்காதேள்.. இந்த சூழ்னிலையிலே, நிச்சயம் குழந்தை எங்கேன்னு தான் கேப்பார் உங்க மாப்பிள்ளை.... என்னோட குழந்தை அங்கே மூச்சு விடவே கஷ்டப் படறது..அது பிழைக்குமா பிழைக்காதான்னு கூட தெரியலை..உங்களுக்கு தேவை ஒரு ஆண் குழந்தை..நீங்க ஏன் இதை எடுத்துக்கக் கூடாது.. பிழைச்சாலும் சரி பிழைக்காட்டாலும் சரி.. சாரதாவின் வாழவும் வீணாகாது..என்ன சரியா..?", ஒரு விதமாய் ஒரு முடிவைத் தெரிவித்தார் விஸ்வனாதன்..

"சார்.. நீங்க சொல்லிட்டேள்..  நாளைக்கே குழந்தை பிழைச்சு வந்துதுன்னா?.. அப்போ திரும்பி கேட்டா நாங்க என்ன பண்ண முடியும்?", என்று சாரதாவின் தகப்பனார் கேட்டார்.

"நிச்சயமா கேட்கமாட்டேன் மாமா.. என்னை நம்புங்கோ.. நான் வேணா ஒரு பத்திரத்துலே எழுதி கையெழுத்து போட்டு தரேன்.. எந்த வித சொந்தமும் கொண்டாட மட்டோம்.. உங்களை திரும்பவும் பிரச்சனையிலே சிக்க வைக்க மாட்டோம்னு", என்று உறுதியளித்தார் விஸ்வநாதன்..

"நீங்க சொல்லறங்கோ.. உங்க மனைவி..அவாளும் ஒத்துக்கணுமே?".

சட்டென்று நிகழ்வுக்கு வந்த கமலா.. "மாமா சாரதா அம்பாள் மாதிரி எனக்கு ஒரு வரத்தை கொடுத்திருக்கா.. அவளை பிரச்சனையில் நான் நிச்சயம் சிக்க வைக்க மாட்டேன்.. அவர் கொடுத்த வாக்குப்படி நடப்பேன்.. என் குழந்தை பிழைச்சாலும் கூட நான் உரிமை கோர மாட்டேன்.. இது சத்தியம்.. எனக்கு பொண்ணு தான் பொறந்துருக்கு.. அவன் சாரதாவின் பிள்ளை... அவன் பிழைக்கனும்னு தான் என் மனசு வேண்டிக்கறது.. பிழைக்க வேண்டும்.. இனிமேலும்.. ஆனா அவன் சாரதாவின் பிள்ளையாதான் போவான் இனி..", என்று சொல்லிவிட்டு நர்ஸை அருகில் வரச் சொல்லியவள் குழந்தையை கையில் கூடத் தொடாமல் அதன் நெற்றியில் ஒரு முத்தம் பதித்தாள்.. பின்,

"இவனை தொட மாட்டேன்.. தொட்டால் குடுக்க மனசு வராது.. என் தாய் பாசம் கட்டி போட்டுடும் என்னை.. இவன் சாரதவின் பையன்.. என்ன சாரதா..சரிதானே?", என்று கண்ணீர் மல்க கேட்டாள்.

இன்றும் பேசாமல் கைகளை நீட்டினாள் சாரதா.. குழந்தை அவள் கைகளில் கொடுக்கப்பட்டது..

"அம்மா ராமர் நிச்சயம் மனசு இரங்கி தயை புரிஞ்சுட்டார்.. இதோ என் பையன் இவன்.. இவனுக்கு பேர் நான் வசந்த்னு வெக்கப்போறேன்.. என் வாழ்கையிலே வசந்தத்தை தரப் போறவன்.. இவன் நிச்சயம் பிழைப்பானான்னு கூட தெரியாது... ஆனாலும்.. எனக்கு நம்பிக்கை இருக்கு.. கமலா.. உன் பொண்ணுக்கு பைரவின்னு பேர் வை.. அது மட்டும் தான் என் கண்டிஷன்.. வசந்தபைரவி ராகத்திலே நீ தயராதான்னு பாடின போது பிறந்த இவள் நம் ரெண்டு பேருக்கும் வாழ்க்கையை திருப்பி தானமாக் கொடுத்துருக்கா.. சரியா.. காலம் என்னிக்காவது நம்மை அனுமதிச்சா.. விதி இருந்தா மறுபடியும் சந்திப்போம்..

என்று, சொல்லி முடித்தாள் சாரதா..

தான் அன்னிக்கு நடந்தது..

Episode 25

Episode 27

{kunena_discuss:909}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.