(Reading time: 21 - 42 minutes)

தைக் கேட்ட சந்துருவின் முகம் கோவத்தில் சிவந்தது. விஷ்ணுவை மட்டம் தட்ட அவன் கூறியது கடைசியில் அவனுக்கே ஆப்பாக திரும்பியது.

சந்துருவின் முகத்தைக் கவனித்த விஷ்ணுவிற்கு அவன் கோபம் புரிந்து போக அவனைச் சமாளிக்க “அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை வித்யா நான் விளையாட்டாதான் சொன்னேன்” என்றான்.

“நீ எப்படிச் சொன்னால் என்ன விஷ்ணு, மூக்கு உடைந்தது உடைந்ததுதான்” என்று விஷ்ணுவை பார்த்துக் கூறிவிட்டு சந்துருவை பார்த்து “என்ன சந்துரு எதற்குமே லாயக்கு இல்ல னு சொன்னே பாத்தியா நாங்க யாரும் செய்ய முடியாத காரியத்தை எவ்வளவு ஈஸியா செஞ்சிடான்” என்று எரியும் கொள்ளியில் மேலும் எண்ணெய்யை ஊற்றினாள் வித்யா. பிறரை மோதவிட்டு அதில் குளிர் காய்வதில் வித்யாவிற்கு பேரானந்தம்.

சந்துருவின் கோபம் பருப்பு விலை போல் உயர்ந்து உச்சத்தில் நின்றது. வித்யாவை சுட்டெரிப்பது போல் ஒரு பார்வை பார்க்க, அவளும் அமைதியானாள். ஆனாலும் அவள் பற்ற வைத்த தீ கண்டிப்பாக விஷ்ணுவை சுட்டெரிக்கப் போகிறது என்ற சந்தோஷத்தில் அவள் மனம்த் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது.

அதே கோபத்தோடு வித்யாவை பார்த்து “அப்போ மட்டும் இல்ல இப்போவும் சொல்றேன் இவன் எதுக்கும் லாயக்கு இல்லாதவன்தான். பெருசா இவனுக்கு சப்போர்ட் பண்ற, உள்ள அந்த கிழம் கேட்டதற்கு, ஸ்விட்ச் போடாத ரோபோ மாதிரிதானே நின்னுக்கிட்டு இருந்தான்” என்று பொரிந்து தள்ளினான் சந்துரு.

திரும்பி விஷ்ணுவைப் பார்த்து “ஏண்டா ஒதவாகர, என்னை நோஸ் கட் பண்ற அளவிற்குப் பெரிய இவனா நீ. எங்க இப்போ பேசு பார்ப்போம்” கோவமாகக் கேட்டான்.

சந்துருவின் இந்தப் பேச்சுக்கள் வழக்கமான ஒன்றுதான். இப்படி அவன் பேசும் போது விஷ்ணுவிற்கும் கோபம் வரும், ஆனால் சந்துருவை எதிர்த்துப் பேச தைரியம் இல்லாமல் அமைதியாகிவிடுவான்.

இப்போதும் அவன் நிலைமை அப்படிதான், சந்துருவின் பேச்சு கோபத்தை தந்தாலும் பொறுமையாக பதில் கூறினான். “ப்ளிஸ் சந்துரு அப்படிச் செல்லாதே. நான் எந்தத் தப்பும் பண்ணலை. காலையில் நான் சும்மா வாய் தவறி சொல்லிட்டேன். ஆனால் இப்போ நீதான் அதைத் தேவை இல்லாமல் வித்யா கிட்டச் சொன்ன. நான் எதுவும் சொல்லவில்லை” என்று தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்பதை சந்துருவிடம் எடுத்துக் கூறினான்.

விஷ்ணுவின் அந்தப் பதில் மேலும் சந்துருவிற்கு எரிச்சலைத்தான் வரவழைத்தது. “ஓ இப்போ எனக்கே சரி தப்பு சொல்ற அளவுக்கு வந்துட்டியா நீ?. ரெண்டு தட்டு தட்டினா ஏன் னு கேட்க ஆளில்லாத அனாதை நீ, இவ எல்லாம் ஒரு ஆளு னு, இவ இருக்கிற தெம்பில் என்னை எதிர்த்து பேசுறியா?” இன்னும் கோபம் தலைக்கேறி கொஞ்சம் அதிகமாகவே பேசினான் சந்துரு.

அனாதை என்று சந்துரு கூறியதை விஷ்ணுவால் தாங்கி கொள்ள முடியவில்லை. பழி ஒரு இடம் பாவம் ஒரு இடம் என்பது போல் விஷ்ணுவின்ப் பெற்றோர் செய்த பாவத்திற்கு இவன் பழி சுமக்கிறான்.

விஷ்ணுவிற்கும் கோபம் ஏறத் தொடங்கியது. சந்துரு மீது கோபம் வரும்போது எல்லாம் அவனை அடக்கும் அவன் மனது இன்று வேறு மாதிரியாகப் பேசியது. “விஷ்ணு இனி நாம் பொறுமையா இருந்து எதுவும் சாதிக்க போவது இல்லை. அவனிடம் கோபப்பட்டு அவன் ஏதாவது செஞ்சிடுவான் என்ற பயத்தில் தானே இத்தனை நாள் பொறுமையா இருந்தோம். இனி அவன் எடுக்கிறதுக்கு நம்ம கிட்ட உயிர் மட்டும்தான் இருக்கு அது இன்றைக்குப் போனால் என்ன இல்ல 90 நாள் கழித்து போனால் என்ன. ஆனது ஆகட்டும் ஒரு கை பார் அவனை” என்று கொம்பு சீவியது அவன் மனம்.

“நிறுத்து சந்துரு. விட்ட ரொம்ப ஓவராகதான் பேசிக்கிட்டே பேர. அனாதை அது இது பேசின அவ்வளவுதான். யார் ஒதவாகரை? நீயா? இல்ல நானா?. நீ பெரிய போட்டோ கிராபர் னு எல்லோர் இடத்திலும் பேர் வங்கினது எல்லாம் என்னோட போட்டோஸ். நான் கஷ்டப்பட்டு எடுத்ததை, அதிகாரமா என் கிட்ட இருந்து பரிச்சு நீ பேர் வாங்கின. அதை மறந்திடாத” தன் முழு தைரியத்தையும் ஒன்று திரட்டி தன் கோபத்தை வெளிப் படுத்தினான் விஷ்ணு.

சந்துருவும் சரி, வித்யாவும் சரி இதை எதிர் பார்க்கவில்லை. வித்யா ஏதோ வேற்றுக் கிரக வாசியைப் பார்ப்பது போல் விஷ்ணுவை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தாள். எவ்வளவு அடிச்சாலும் தாங்கி கிட்டு இருந்த கை புள்ள திடீர் என்று கட்ட துறையா மாறின யாருக்குத்தான் ஆச்சரியமாக இருக்காது.

அதே சமயம் சந்துருவிற்கே இது பேர் அதிர்ச்சி. சுற்றும் முற்றும் பார்த்தான் அனைவரும் இவர்கள் இருவரையும்தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இப்படி பகிரங்கமாக விஷ்ணு உண்மைகளைக் கூறுவான் என்று அவன் எதிர் பார்க்கவில்லை. அப்போதுதான் அவனுக்குப் புரிந்தது, இன்று தான் ஓவராகத்தான் பேசிருக்கிறோம் என்று. ஆனாலும் அடங்கிப் போக அவன் ஈகோ ஒற்றுக் கொள்ளவில்லை.

“யாரோட போட்டோவையும் திருடி பேர் வாங்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அது அத்தனையும் என்னோட போட்டோஸ். இதுக்கு மேல ரீல் விட்ட, அடிச்சி முஞ்ச பேத்திடுவேன்” விஷ்ணுவை அடக்குவதற்காக அதட்டிப் பேசினான் சந்துரு.

 துணிந்தவனுக்குத் துக்கம் இல்லை என்பது போல் சிரித்துக் கொண்டே பதில் அளித்தான் விஷ்ணு “சந்துரு உன் மனசாட்சிக்கே தெரியும் நீ பேசுறது உண்மையில்லை என்று. நீ என்னை அடித்து உதைத்தாளும் உண்மை மாற போறது இல்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.