(Reading time: 21 - 42 minutes)

தற்கு மேல் விட்டால் சரிவராது என்று விஷ்ணுவை அடிக்கக் கையை ஓங்கினான் சந்துரு. அதற்குள் அவனைத் தடுத்து நிறுத்தினாள் வித்யா.

விளையாட்டாக இருக்கும் என்றுதான் தொடங்கினாள், ஆனால் அது இப்படிப் போய் முடியும் என்று அவள் எதிர் பார்க்கவில்லை.

எப்போதும் சந்துருவின் சிறு அதட்டலுக்கே பயந்துவிடும் விஷ்ணு இன்று அவன் அடிக்க கை ஓங்கிய பிறகு கூடப் பயப்படாமல் சிரித்துக் கொண்டிருந்தது, அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. “உனக்குள் இவ்வளவு வீரமா? சபாஷ் டா விஷ்ணு” என்று தனக்கு தானே தட்டிக் கொடுத்துக் கொண்டான்.

“என்ன சந்துரு இதெல்லாம். அமைதியா இரு” என்று சந்துருவை அமைதிப் படுத்திவிட்டு, விஷ்ணுவைப் பார்த்து “விஷ்ணு, அந்த போட்டோஸ் எல்லாம் சந்துரு எடுத்தது என்று எல்லோருக்கும் தெரியும். இப்போ நீ உன்னுடையது என்று சொல்ற? அதற்கு என்ன ஆதாரம். அது மட்டும் இல்லாமல் அப்போது எல்லாம் சும்மா இருந்துவிட்டு இப்போ வந்து என்னுடைய போட்டோ னு சொல்ற” என்றாள் வித்யா.

அவள் கேட்ட அத்தனை கேள்வியும் நியாயமான கேள்விகள். ஆனால் பயத்தினால்தான் அமைதியாக இருந்தேன் என்று கூற முடியாமல் தவித்தான் விஷ்ணு.

அதற்குள் தன்னை சற்று ஆசுவாச படுத்திக் கொண்ட சந்துரு, மீண்டும் விஷ்ணுவைப் பார்த்து “கேக்குற இல்ல, சொல்லுப் பதிலை” என்று கூறிவிட்டு வித்யா பக்கம் திரும்பி “அடுத்து என்ன பொய் சொல்லலாம் என்று யோசிக்கிறான் பார்” என்று தன் குட்டு உடைந்துவிடாமல் இருக்கப் போராடினான் சந்துரு.

ஏதோ சொல்ல வாய் எடுத்தவனை நிறுத்தும் விதமாக மீண்டும் பேச்சை தொடர்ந்தான் சந்துரு “அந்த போட்டோவை எடுத்தது நான்தான் னு பெரிய இவன் மாதிரி சொல்றியே உனக்கு இப்போ ஒரு சவால். அதில் மட்டும் நீ ஜெய்ச்சிடா? நீ சொல்றது எல்லாம் உண்மை னு நான் ஒத்துகிறேன். அது மட்டும் இல்லாமல் அந்தக் கதைக்கான போட்டோ வேலை முழுவதையும் நீயே பார்த்துக் கொள் நான் அதில் தலையிட மாட்டேன்” என்று விஷ்ணு எங்கே செய்ய போகிறான் என்று நினைத்து ஜம்பமாகப் பரிசுகளை அடுக்கிக் கொண்டே போனான் சந்துரு.

எமன் விட்ட சவாலையே பார்த்தவன் டா நான், நீ என்ன சுண்டக்காய் பய என்பது போல் “என்ன சவால் சொல்லு” என்றான் விஷ்ணு.

“பெருசா நீ ஒன்னும் செஞ்சி கிழிக்க வேண்டாம். அந்த கிழம் கேட்டுசே புதுசா ஒரு ஐடியா, எனக்கு முன்னாள் அதை நீ சொல்லி  விடுப் பார்க்கலாம். அப்போ ஒத்துகிறேன் நீ பெரிய ஜினியஸ் னு” என்று தனக்கு தானே குழி வெட்டுகிறோம் என்று தெரியாமல் சவால் விட்டான் சந்துரு.எப்படியும் சொல்லமாட்டான் என்ற நினைப்பில்தான் சந்துரு அதைக் கூறினான்.

ஆனால் விஷ்ணுவிற்கோ பழம் நழுவி பாலில் விழுந்தார் போல் இருந்தது. தான் பார்த்ததை சொல்லப் போகிறான் அவ்வளவுதானே. அது மட்டும் அல்லாமல் விஷ்ணு கூறுவது குமரனுக்குப் பிடித்திருந்தால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல் தனக்கு முறையாகக் கிடைத்திருக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கும் அது மட்டும் இல்லாமல் சந்துருவின் கர்வத்தையும் அடக்கலாம்.

ஆனாலும் அவன் தனக்கு தானே கேட்டுக் கொண்டான் “ஒரு வேளை நான் கூறியது அவருக்கு பிடிக்கலனா, எம்டி முன்னாடி பெரிய அவமானமாய் போய் விடுமே”. “ஹ்ம் இதற்கு மேல் என்னடா இருக்கு போவதற்கு, ஆனால் அதுவே அவர் ஓகே னு சொல்லிவிட்டர் என்றால் யோசித்துப் பார்” என்று அவனே அவன் கேள்விக்கு பதில் கூறிக் கொண்டான்.

அவன் சிந்தனையை கலைப்பது போல் சந்துரு “என்னடா அறிவு ஜீவி சவாலுக்கு ரெடியா. மண்டே வரைக்கும் தான் உனக்கு டைம். முடியுமா? என்று அதட்டலாகக் கேட்டான்.

விஷ்ணு அதற்கு “ சரி சந்துரு உன் சவாலுக்கு நான் தயார். நான் ஜெய்ச்சிடா, நீ சொன்னது போல் எல்லோரிடமும் உன்மையை சொல்லனும்” என்று கூறிவிட்டு தன் நாற்காலியை விட்டு எழுந்தான்.

வித்யா உட்பட அனைவருக்கு நடப்பது ஆச்சரியமாகவே இருந்தது. இருந்தாலும் நடப்பதைப் பொறுமையாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

தன் இடத்தை விட்டு எழுந்தவன் அனைவரையும் ஒரு முறை பார்த்து விட்டு நேராக எம்டி ரூமிற்கு சென்றான். சொல்வது என்று முடிவாகிவிட்டது அதை இப்போதே சொல்லி விடலாம் என்று ரூமிற்குள் சென்றான்.

அங்குச் சென்று குமரனிடமும், கதிரவனிடமும் தான் பார்த்த எம லோகத்தை, தானே யோசித்த கற்பனை போல் கூறினான். அவன் கூற கூறக் குமரனுக்கு தான் தேடிக் கொண்டிருந்த புதுமையான எம லோகம் கண்ணுக்கு தெரிந்தது. விஷ்ணு கூறி முடித்ததும் அவனை அப்படியே ஆர தழுவிக் கொண்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

கதிரவனுக்கும் விஷ்ணு கூறியது மிகவும் பிடித்திருந்தது. அது மட்டும் அல்லாமல் தன் ஊழியர்கள் சிறப்பாக செய்துவிடுவார்கள் என்று இவ்வளவு நேரம் குமரனிடம் அவர் கூறியதை உண்மையாக்கும் விதத்தில் விஷ்ணு நடந்து கொண்டது அவருக்கு மிகவும் பெருமையாக இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.