(Reading time: 21 - 42 minutes)

ள்ளே சென்ற அரை மணி நேரம் ஆகியும் விஷ்ணு வெளியே வராதது சந்துருவிற்கு ஒரு வகை கலக்கத்தை தந்தது. அவன் மனதில் ஓடிக் கொண்டிருந்த எண்ணம் எல்லாம் “கொஞ்சம் அடக்கி வாசிச்சிருக்கலாமோ. தேவை இல்லாமல் ஒரு புள்ள பூச்சியைச் சீண்டி விட்டுடோமோ” என்பதுதான். வித்யா மட்டும் எம்டி ரூமையும், சந்துருவை மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள் மற்ற அனைவரும் அவ்வப்போது எம்டி ரூமையே பார்த்த வாருதன் வேளையை பார்த்துக் கொண்டிருந்தனர்.

உள்ளே அறையிலோ, கதிரவனும், குமரனும் விஷ்ணுவிடம் அது எப்படி இருக்கும் இது எப்படி இருக்கும் என்று போலீஸ் விசாரணை போல் கேள்விகளை கேட்டுத் தள்ளினர்.

கடைசியாகக் குமரன் முழு சந்தோஷத்தோடு “கண்டிப்பாக இந்தக் கதை பெரிய வெற்றி பெரும் என்ற நம்பிக்கை எனக்கு வந்துவிட்டது. இன்றே கதைக்கு எழுத்து வடிவம் கொடுக்க தொடங்கி விடுகிறேன்” என்று கூறிவிட்டு கிளம்பத் தயார் ஆனார்.

கதிரவன் அவரை வழியனுப்ப அவருடன் செல்ல என்ன செய்வது என்று தெரியாமல் விஷ்ணுவும் அவர்களோடு நடந்தான். கதிரவனும் குமரனும் மகிழ்ச்சியாகப் பேசி முன்னே செல்ல அவர்கள் பின் தொடர்ந்தான் விஷ்ணு. அதைத் தூரத்தில் இருந்து பார்த்த சந்துரு, வித்யா, மற்ற அனைவருக்கும் உள்ளே என்ன நடந்திருக்கும் என்று ஓரளவு புரிந்து போனது. சந்துருவிற்கு வயிற்றில் புளியை கரைத்தது.

குமரனை வழி அனுப்பி விட்டு நேராக விஷ்ணுவின் தோளில் கையைப் போட்டவாறே அவனை அழைத்துக் கொண்டு அவன் வேளைச் செய்யும் கேபினுக்கு வந்தார்.

வந்தவர் அனைவரையும் பார்த்து “காய்ஸ், விஷ்ணு சொன்ன ஐடியா ஐயாவிற்கு ரொம்ப பிடிச்சிருச்சு. ஹிஸ் ஐடியா வாஸ் சிம்பிலி சூப்பர். ஸொ இந்தக் கதையின் முழு போட்டோ கிராபி வர்க்கை விஷ்ணுதான் ஹாண்டில் பண்ண போறான்” என்று கூறிவிட்டு வித்யாவை பார்த்து “வித்யா யு ஹவெ டு அஸிஸ்ட் விஷ்ணு இன் திஸ் பிராஜக்ட்” என்று கூற வித்யாவும் சரி என்பது போல் தலை அசைத்தாள்.

கதிரவன் சந்துருவை பார்த்து “சந்துரு, யு ஹவெ டு டேக் கேர் அதர் வர்க்ஸ்” என்று கூற அவனும் எதுவும் சொல்லாமல் சரி என்று தலை அசைத்தான். எப்படி பேச்சு வரும் சந்துருவிற்கு, ஏற்கனவே பேசிய பேச்சிற்கான பலனைத்தான் இப்போது அனுபவிக்கிறானே.

கதிரவன் மீண்டும் விஷ்ணுவிடம் திரும்பி “ வெல் டன் மை பாய். அம் ப்ரௌட் ஆப் யு. ஆல் த பெஸ்ட் ஃபார் திஸ் பிராஜக்ட். டு வெல்” என்று கூறிவிட்டு தன் ரூமிற்கு சென்றார்.

அவர் நகர்ந்தவுடன் ஒவ்வெருவராய் வந்து விஷ்ணுவிற்கு வாழ்த்துகளைக் கூறினார். வித்யாவும் வேண்ட வெறுப்பாக தன் வாழ்த்துக்களைக் கூறி வைத்தாள்.

விஷ்ணுவிற்கு அவனைச் சுற்றி நடப்பது எல்லாம் ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. ஒரு சிறு அங்கீகாரம் கிடைக்காதா என்று பல நாட்கள் ஏங்கியிருக்கிறான். ஆனால் இன்றோ அவன் எதிர் பார்த்ததற்கு மேலாகவே கிடைத்துவிட்டது.

அனைவரும் வாழ்த்திவிட்டுச் சென்றவுடன் மெதுவாக சந்துரு பக்கம் திரும்பினான். அவன் இவனை எதிர் கொள்ள முடியாமல் மும்மரமாக வேலை செய்வது போல் பாவலா காட்டிக் கொண்டிருந்தான். சந்துரு விஷ்ணு ஜெயித்தால் செய்வதாகக் கூறியதை செய்யாவிட்டாலும்,  மற்றவர்களுக்கு விஷ்ணு சொல்லியது உண்மைதான் எனப் புரிந்திருக்கும்.

சந்துரு ஆட்சி இந்த நெடியோடு முடிவுக்கு வந்தது. செத்த பாம்பை எதற்கு மீண்டும் அடிக்க வேண்டும் என்று அவனை விட்டுவிட்டான் விஷ்ணு.

தன் இடத்தில் அமர்ந்து நடந்த அனைத்தையும் எண்ணிப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தவன் சுவரில் மாட்டப் பட்டிருந்த கடிகாரத்தைப் பார்த்தான். மணி 4.30. அவனது முக்கியமான பணிக்காக விழுந்தடித்து சென்று அனு பஸ் விட்டு இறங்கும் பஸ் ஸ்டாப்பிற்கு சற்று தொலைவில் நின்றான். அனு வந்தவுடன் ஓடிச் சென்று இன்று நடந்த அனைத்தையும் கூற வேண்டும் என்று அவனுக்கு ஆசை இருந்தாலும் வெறும் பார்க்க மட்டும்தானே அனுமதி.

அனுவும், திவ்யாவும் பஸ் ஐ விட்டு இறங்கினர். அதைத் தூரத்தில் இருந்துப் பார்த்துக் கொண்டிருந்தான் விஷ்ணு. அனுவும் திவ்யா பார்க்காத நேரமாகத் திரும்பி விஷ்ணு நிற்கின்றானா எனப் பார்த்து, அவன் கண்ணில் பட்டதும் தனக்கு தானே மகிழ்ந்து கொண்டாள். அவள் பார்வையில் இருந்து மறைந்ததும் விஷ்ணுவும் தன் வீட்டிற்குச் சென்றான்.

மறுநாள் சனிக் கிழமை. காலையில் அனுவைப் பார்த்துவிட்டு பின் ஆபிஸ்ச் சென்றவனுக்கு புது பிராஜக்ட்டின் வேளைச் சரியாக இருந்தது. அன்றும் குமரன் தன் முதல் பாகத்திற்கான கதையோடு வந்திருந்தார். அது சம்பந்தமான வேளையில் இருந்துவிட்டு மாலை அதே போல் சென்று அனுவை தூரத்தில் இருந்து தரிசித்தான்.

அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை என்பதால் அனுவை அவனால் பார்க்க முடியவில்லை அவனும் வேறு வேலை எதுவும் இல்லாததால் அவள் வீட்டின் முன்னல் காவல் காத்துப் பார்த்தான் ஆனாலும் ஒன்றும் நடக்கவில்லை.

மறுநாளில் இருந்து காலையில் அனு பார்த்துவிட்டு வேலைக்குப் போவான், அங்கு வேலையில் முழ்கி இருந்துவிட்டு மீண்டும் மாலை அனுவை பார்த்து விட்டு வீடு சென்று விடுவான்.அடுத்த 6 நாட்களும் இதுவே வாடிக்கையானது.

கதையின் முதல் பிரதியும் சனிக் கிழமை வெளியானது. விஷ்ணுவின் புகைப் படங்களுக்கு நல்ல பாராட்டுகள் கிடைத்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.