(Reading time: 25 - 49 minutes)

ப்போது கூட பிருத்வியுடன் தனியாக இவ்வளவு நேரம் இருக்கிறாளே என்று எந்த சந்தேகமும் படவில்லை சுஜாதா... செந்திலும் வளர்மதியும் கூட நீ கவலைப்படாத சுஜா... பிருத்வி யுக்தாவை பத்திரமா வீட்டுக்கு கூட்டிட்டு போவான் என்று தைரியமூட்டினர்...

தொடர்ந்து இருவருக்கும் அலைபேசியில் தொடர்பு கொண்டனர்... இருவருமே அழைப்பை ஏற்கவில்லை... அப்போது கூட ஏதாவது விபத்து ஆகியிருக்குமா... அப்படிதான் பயந்தார்கள்... மருத்துவமனையில் கஸ்தூரி அம்மாவை பார்த்ததும்... ராத்திரி நேரத்தில் செல்ல வேண்டாம் என்று அங்கேயே தங்க முடிவெடுத்திருந்தனர்... ஆனால் இப்போதோ அவர்கள் இருவருக்கும் என்ன பிரச்சனையோ என்று நினைத்து உடனே கிளம்பினர்...

வீட்டிற்கு வந்து காலிங்பெல் அடித்தும் திறக்காமல் இருந்த போதும் கூட யாராலும் அவர்கள் இருவரையும் சந்தேகிக்க தோன்றவில்லை... பிருத்வி வந்து கதவை திறந்து அவன் அறையில் யுக்தா இருப்பதாக சொன்னபோது கூட ஒரு ஆடவனின் அறையில் தன் மகளா..?? என்று சிந்திக்காமல்... அய்யோ என் மகளுக்கு ஏதாவது உடம்பு சரியில்லையா...?? என்று தான் நினைக்க தோன்றியது சுஜாதாவிற்கு..

இவளைப் பார்த்ததும் யுக்தா "அம்மா நான் தப்பு பண்ணிட்டேன்... என்ன மன்னிச்சுடுமா" என்று கட்டிப்பிடித்துக் கொண்டு அழும்போது கூட இவள் என்ன தப்பு செய்தாள்... எதற்கு மன்னிப்பு கேட்கிறாள் என்று தான் மனம் நினைத்தது... ஆனால் சில நிமிடங்களில் ஏதோ புரிய ஆரம்பித்தது...

நெடு நேரம் காலிங்பெல் அடித்தும் திறக்காத கதவு... நேருக்குநேராக பார்த்து பேசாத பிருத்வி... வீட்டில் இத்தனை அறை இருந்தும் பிருத்வியின் அறையில் தன் மகள் இருப்பது... இதெல்லாம் என்ன தவறு நடந்திருக்கும் என்பதை புரிய வைத்தது...

அங்கே கூட இருந்த மற்ற மூவருக்கும் கூட என்னாவாக இருக்கும் என புரியத்தான் செய்தது...

என்ன தவறு நடந்திருக்கும் என புரிந்தாலும்... தன் மகள் மேல் ஒரு நம்பிக்கை இருந்தது சுஜாதாவிற்கு... ஆனால் பிருத்வியையும் தவறாக நினைக்க முடியவில்லை... அப்படியே பிருத்வி மேல் சந்தேகம் வந்தாலும்... மதி செந்தில் முன்னே எதுவும் கேட்க முடியவில்லை... இருந்தாலும் கேட்டாள்...

"யுக்தா... பிருத்வி ஏதாவது தப்பா நடந்துக்கிட்டானா.. உன்கிட்ட.."

உடனே அவசரமாக பதில் சொன்னாள்.."இல்லம்மா என்னோட அனுமதியோட தான் நடந்தது..." என்று அழுது கொண்டே...

அதற்கு மேல் அங்கே நிற்க முடியவில்லை சுஜாதாவால்... இதற்கு மேல் யுக்தாவை என்ன நினைப்பார்கள் மதியும் செந்திலும்... இதில் பிருத்வியின் தவறு இருந்தாலும்... ஆணை விட பெண்ணுக்கு தானே இதில் பாதிப்பு... அவள் கையை பிடித்து இழுத்துக் கொண்டு போனாள்...

சுஜாதாவின் நிலை புரிந்தது மதிக்கும் செந்திலுக்கும்... இந்த நேரத்தில் எப்படி இருவரும் வீட்டுக்கு போவார்கள்... செந்தில் காரில் அழைத்துப் போவதாக கூறினார்... சுஜாதாவும் அமைதியாக ஏறிக் கொண்டாள்.... அவள் தோளில் சாய்ந்து அழுதுக் கொண்டு வந்தாள் யுக்தா...

ஒன்றுமே புரியவில்லை சுஜாதாவிற்கு... தன் மகள் இப்படி நடந்துக் கொண்டிருப்பாள் என்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை அவளால்... எப்படி இது நடந்தது... பிருத்வி வேறு ஒரு பெண்ணை காதலிப்பது இவளுக்கு தெரியுமே... யுக்தா ஒன்றும் ஒரு ஆடவனிடம் எல்லை மீறி பழகும் பெண்ணல்லவே.... செந்தில் முன் எதையும் பேசவில்லை சுஜாதா...

அப்போது தான் மாதவனிடம் இருந்து அழைப்பு வந்தது சுஜாதாவிற்கு... சுஜாதாவும் பாண்டிச்சேரி சென்றிருக்கிறாள்... மாதவனும் செங்கல்பட்டு வரை ஒரு வேலையாக வந்தார்... அதுமுடிய நேரமாகும் என்பதால்... காலையில் வருவதாக இருந்தார்... சாவித்திரியும் யுக்தாவும் தனியாக இருப்பதால் விசாரிப்பதற்கு ஃபோன் செய்தார்...

யுக்தா இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்று மாதவனிடம் எப்படி சொல்வது என்று சாவித்திரி யோசித்தாள்... ஆனால் யுக்தாவுக்கு ஏதாவது பிரச்சனையாகி என்னிடம் ஏன் இதை இரவே சொல்லவில்லை என்று அவர் கோபப்படக் கூடாதே என்று விஷயத்தை சொல்லிவிட்டாள் சாவித்திரி...

விஷயம் கேள்விப்பட்ட அவர் பதட்டமாக கிளம்பினார்... வரும் வழியிலேயே சுஜாதாவிற்கு ஃபோன் செய்தார்... அவளும் வந்து கொண்டிருப்பதாக கூறினாள்... இப்போது அவர் ஃபோன் செய்தது வீட்டிற்கு வந்துவிட்டதாகவும் யுக்தா பற்றி தெரிந்ததா...?? இல்லை வரவா என்பதை கேட்பதற்கும் தான்... யுக்தா தன்னுடன் இருப்பதாகவும்... அவளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்துக் கொண்டிருப்பதாகவும் சுஜாதா கூறினாள்...

ஃபோனை வைத்ததும் அவளுக்கு ஒரு புது பயம் வந்தது... தன் கணவனிடம் இந்த விஷயத்தை எப்படி சொல்வாள்... இதுவரை எதையும் அவரிடம் மறைத்ததில்லை... யுக்தா பிருத்விக்கு திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசையை கூட யுக்தா சிறு வயதாக இருக்கும்போது சொல்லியிருக்கிறாள்... ஆனால் மாதவனோ... இப்போதே இதைப்பற்றி பேசவேண்டாம் அவள் திருமண வயது வரும் போது அதைப் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறுவார்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.