(Reading time: 25 - 49 minutes)

தனால் தன் கணவனிடம் அதைப்பற்றி அவள் பேசுவதில்லை... தேவாவுக்கு யுக்தாவை கேட்பதாக லஷ்மி சொன்னதாக தன் கணவன் கூறும் போது தான் அவள் ஆசையை சொல்ல நினைத்தாள்... ஆனால் அதற்குள் யுக்தா வந்ததால் சென்னை போனதும் பேசிக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தாள்... ஆனால் இங்கு வந்து பிருத்வியின் காதல் பற்றி தெரிந்ததும் தன் கணவனிடம் இதைப்பற்றி பேசுவதில் எதுவும் ப்ரயோஜனம் இல்லை என்பதால் விட்டுவிட்டாள்...

ஆனால் தன் மகளை குறித்து வந்த சந்தேகத்தை தன் கணவனிடம் சொல்லியிருக்க வேண்டுமோ என்று இப்போது நினைக்கிறாள்... ஆனால் அதனால் இப்போது என்ன பயன்... இவள் யோசித்துக் கொண்டிருந்த போதே வீடு வந்தது... காரிலிருந்து இறங்கி செந்திலிடம் சொல்லாமலேயே யுக்தாவை கூட்டிக்கொண்டு வீட்டிற்குள் சென்றுவிட்டாள்..

எப்படி சொல்வது என்று யோசித்துக் கொண்டிருந்த சுஜாதா... தன் கணவனை பார்த்ததும் ஓ என்று அழுதுவிட்டாள்... அழுதுக் கொண்டே எல்லா விவரத்தையும் கூறிவிட்டாள்..

அவளது வேதனையை வெளிப்படுத்த அவளுக்கு என்று யார் இருக்கிறார்கள்... திருமணத்திற்கு முன் மதியிடமும்... திருமணத்திற்கு பின் தன் கணவனிடமும் தானே தன் மன வேதனைகளை இறக்கியிருக்கிறாள்... மாதவனும் அதை உணர்ந்து அவளுக்கு ஆறுதலாக இருப்பார்... ஆனால் இந்த வேதனைக்கு அவரால் எப்படி ஆறுதல் சொல்ல முடியும்... அவருக்கே அது பெரிய வேதனையல்லவா... அதை கேட்டு அவர் அதிர்ச்சி தான் அடைந்தார்...

ஆனால் தன் முன்னே கூனி குறுகி நிற்கும் மகளை அப்படி பார்க்க முடியவில்லை அவரால்... "அவளை அவள் அறைக்கு அழைத்து போ... எதுவாக இருந்தாலும் பிறகு பேசிக்கொள்ளலாம்" என்றார்.. அருகே இருந்த சாவித்திரிக்கும் அதிர்ச்சி... தானும் அவளுடன் சென்றிருக்கலாமோ என்று மனதிற்குள் புலம்பினாள்....

நியூயார்க்கில் இருக்கும்போது அவர்கள் இருந்தது பெரும்பாலும் தமிழர்கள் வசிக்கும் இடத்தில் தான்... அங்கிருப்பவர்கள் மாதவனிடம் யுக்தாவை பற்றி பெருமையாக சொல்வார்கள்... உங்க மகளை நீங்க எப்படி வளர்த்து இருக்கீங்க.. பார்க்கும் போதே வியப்பா இருக்கு... என்னோட பொண்ணுக்கு 16 வயசு தான் ஆகுது... நிறைய பாய் ப்ரண்ட்ஸ் இருக்காங்க...

ஏதாவது கண்டிச்சு கேட்டா  இங்க இப்படி தான் இருக்கனும்ப்பா அப்படின்னு சொல்றா.... இங்க இருக்கும் பிள்ளைங்களுக்கு அவங்க பேரண்ட்ஸ் சில சுதந்திரம் கொடுத்துருக்காங்க... ஆனா நம்ம கலாச்சாரம் வேற இல்லையா... அது பசங்களுக்கு தெரிய மாட்டேங்குது... இங்க இருந்தா இப்படி தான் இருக்கனும்னு இஷ்டத்தக்கு இருக்குங்க... உங்க பொண்ணைப் பார்த்தா சே நம்ம பசங்க இப்படி இல்லையேன்னு நினைக்க தோனுது... நீங்க உங்க பொண்ணை நல்லா வளர்த்து இருக்கீங்கன்னு சொல்லும் போது மாதவனுக்கு பெருமையாக இருக்கும்...

அவரோ இல்லை சுஜாதாவோ இப்படி இருக்கனும்னு அவளுக்கு சொல்லி வளர்க்கலையே... அவளாக தானே அப்படி வளர்ந்தா... அதை  நினைச்சு அவர் எப்படி சந்தோஷப்பட்டாரு...

தப்புக்கும் எனக்கும்  ரொம்ப தூரம்... தப்பு நடக்கும் பக்கமே தலை வச்சு படுக்கமாட்டேன் என்று சொல்பவர்களை விட தப்பு நடக்கும் இடத்தில் இருந்துக் கொண்டே அதை செய்யாமல் இருப்பவர்கள் தான் மிகவும் மதிக்கப்படுபவர்கள்.. இந்த காலக்கட்டத்தில் இளைஞர்களை தவறான பாதையில் இழுத்துக் கொண்டு போகும் எத்தனையோ விஷயங்கள் இப்போது இருக்கிறது... ஆனால் அதையெல்லாம் கடந்து அவன் நல்ல மனிதனாக இருப்பது பெரிய விஷயம்..

அப்படி ஒரு பெண்ணாக தன் மகள் இருக்கிறாள் என்று மாதவன் சந்தோஷப்பட்டிருக்கிறார்...ஆனால் இன்று அவள் செய்திருப்பதை எப்படி எடுத்துக் கொள்வது... அந்த நியூயார்க் நகரில் இருந்த போது கூட அதையெல்லாம் கடந்து வந்த தன் மகள் இங்கு வந்து ஒரு மாதம் கூட முடியாத இந்த நிலையில் இப்படி ஒரு தவறை செய்திருப்பதற்கான காரணம் என்ன..?? காதலா..?? காதல் என்றால் எல்லை மீறும் அளவுக்கா..?? இப்போது அதற்கு என்ன செய்ய வேண்டும்... அவளை கண்டிக்க வேண்டுமா..?? இல்லை அடிக்கவோ... திட்டவோ வேண்டுமா...??

அப்படி செய்தால் அவள் தவறு சரியாகிவிடுமா..?? இதுவரை அவளை அடித்ததோ திட்டியதோ இல்லையே... அவள் அப்படி நடந்துக் கொண்டதும் இல்லையே... ஆனால் இன்று சுஜாதா சொல்லும் போது யுக்தா அதை மறுக்கவும்  இல்லையே...  ஒன்றும் புரியாமல் யோசனையிலேயே உட்கார்ந்திருந்தார் மாதவன்.

வாசலில் பைக் சத்தம் கேட்டது... செந்திலும் வளர்மதியும் ஆளுக்கொரு மூலையில் உட்கார்ந்திருந்தனர்...

பைக் சத்தத்தை கேட்டு அவள் அறைக்கு சென்றாள் பிரணதி... என்ன நடந்திருக்கிறது என்பதை அறிந்தாலும் இந்த நேரத்தில் அங்கு இருப்பது நல்லதில்லை என்பதால் அங்கிருந்து சென்றாள்... பிருத்வி வந்ததை அறிந்து கொண்டு எழுந்து வந்தார் செந்தில்...

அவர்களை நேருக்கு நேராக பார்க்கும் தைரியம் கூட இல்லாமல் வந்து நின்றான் பிருத்வி.. அவன் அருகில் வந்த செந்தில்..

"உன்னை பிள்ளையா பெத்ததுக்கு சந்தோஷப்பட்டோம்.. ஆனா இப்போ.."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.