(Reading time: 25 - 49 minutes)

யாரோ ஒரு பொண்ணா இருந்தாலே இதையெல்லாம் நாம யோசிக்கனும்... யுக்தா நம்ம சுஜாவோட பொண்ணுங்க... அவ என்னோட ஃப்ரண்டா இருந்தாலும்... நீங்க என்ன சொல்லுவீங்க... அவ என்னோட தங்கச்சி.. இது அவளுக்கு பொறந்த வீடுன்னு சொல்ல மாட்டீங்க.."

"ஆமா மதி... நாம தான் இதை சரி பண்ணனும்... அதுக்கு முன்னாடி பிருத்வியை கூப்பிடு... அவன்கிட்ட கொஞ்சம் பேசனும்.."

அப்பா அழைத்ததாக மதி கூறியதும் செந்திலிடம் வந்தான் பிருத்வி..

"பிருத்வி... நாங்க ஒரு முடிவெடுத்திருக்கோம்... உனக்கும் யுக்தாவுக்கும் கல்யாணம் செஞ்சு வைக்கறதா... நீ என்ன சொல்ற..??"

"நீங்க என்ன முடிவெடுத்தாலும் எனக்கு சம்மதம் அப்பா.."

"அப்போ அந்த சப்னா... அவளுக்கு என்ன சொல்லப் போற..??"

"அவளுக்கு நான் ஏத்தவன் இல்லைப்பா... அந்த தகுதியை நான் இழந்துட்டேன்... அவளுக்கு நான் சொல்லி புரிய வைக்கிறேன் ப்பா.."

"அப்போ இதுல உனக்கு சம்மதம் தானே...?? நாங்க நாளைக்கு அவங்க வீட்டுக்குப் போய் பேசலாம் இல்ல...??"

"ம்ம்.. சரிப்பா"

பிருத்வியின் சம்மதம் கிடைத்ததும்... தாம்புல தட்டோடு மறுநாளே யுக்தா வீட்டுக்குச் சென்றனர் மதியும் செந்திலும்... அவர்களை ஏறிட்டு பார்க்க கூட முடியவில்லை அனைவராலும்... இருந்தாலும் வரவேற்றனர்... கவியும் அங்கு தான் இருந்தாள்...

வந்த காரணத்தை மதியும் செந்திலும் கூறினர்... சுஜாதாவுக்கும் சாவித்திரிக்கும் இந்த முடிவு நல்லதாக தான் பட்டது... ஆனால் மாதவன் அமைதியாக இருந்தார்... கணவனின் முடிவை எதிர்பார்த்து சுஜாதா அமைதியாக இருந்தாள்..

மாதவனின் அமைதிக்கான காரணத்தை செந்திலால் புரிந்து கொள்ள முடிந்தது...

"மாதவன் நீங்க என்ன யோசிக்கிறீங்கன்னு எனக்கு புரியுது... தப்பு ரெண்டுபேர் மேலயும் இருந்தாலும்... வேறொரு பொண்ணை காதலிச்சிட்டு... யுக்தா கிட்ட அப்படி நடந்துக்கிட்டது... பிருத்வியை பத்தி நீங்க நினைக்கறது புரியுது...

ஆனா பிருத்வி அவ்வளவு மோசமானவன் இல்ல... ஏன் இப்படி நடந்துக்கிட்டான்னு தெரியல... ரெண்டுபேரும் குற்ற உணர்வோட இருக்காங்களே தவிர காரணத்தை சொல்ல மாட்டேங்கிறாங்க... நம்மலாலேயும் எதுவும் கேக்க முடியல... ஆனா இந்த கல்யாணம் நடந்தா பிருத்வி ஒரு நல்ல கணவனா இருப்பான் அதுக்கு நாங்க பொறுப்பு... நீங்க ஒத்துகங்க மாதவன்.."

"என்னங்க இந்த முடிவுதாங்க சரி... யுக்தாவுக்கு இதுதாங்க நல்லது... ஒத்துக்கோங்க..." சுஜாதா கணவனிடம் கூறினாள்...

"ஆமாம் தம்பி அதுதான் சரி... இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கோங்க..." சாவித்திரியும் கூறினாள்... இதையெல்லாம் ஒரு காட்சி பொருளாக நின்று பார்த்து கொண்டிருந்தாள் கவி..

மாதவன் ஆமோதிப்பதாக தலையசைத்தார்... அவர் ஒத்துக் கொண்டதும் தாம்புல தட்டை மாற்றிக் கொள்ள முடிவு செய்தனர்... ஒரு நல்ல நாள் பார்த்து கல்யாண தேதியையும் முடிவு செய்வதாக இருந்தனர்.. தட்டை மாற்றிக் கொள்ளப் போகும் நேரத்தில் பிருத்வி அங்கு வந்தான்..

"அம்மா இப்போ தட்டை மாத்த வேண்டாம்" என்று தடுத்தான்... எல்லோரும் அதிர்ச்சியாகப் பார்த்தனர்.

வரவேற்பரையில் நடப்பது யுக்தா இருக்கும் அறைக்கு கேட்காமல் இருக்க அது ஒன்றும் பெரிய வீடு இல்லை... நடுத்தர குடும்பங்கள் வசிக்கும் அளவிற்கான வீடுதான்...

ஆனால் ஒரு வாரமாக வெளி உலகில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் தான் இருந்தாள் யுக்தா... இன்றும் வெளியில் என்ன நடக்கிறது என்பதை அவள் அறியவில்லை... அது அவளுக்கு தெரிய வந்தால் என்ன நடக்கும்..??

பிருத்வியை கல்யாணம் செய்துக் கொள்ளும் கனவோடும் ஆசையோடும் இருக்கும் யுக்தாவிற்கு செந்திலும் மதியும் திருமணத்தை முடிவு செய்ய வந்திருப்பது தெரிந்தால் சந்தோஷப்படுவாளா...?? அதற்கு தடங்கல் ஏற்படுத்த பிருத்வி வந்திருப்பதை நினைத்து கவலை கொள்வாளா...?? அவள் என்ன தான் செய்யப் போகிறாள்..?? அவள் மனசுக்குள் என்ன தான் இருக்கிறது..??

தொடரும்

Episode # 12

Episode # 14

{kunena_discuss:933}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.