(Reading time: 25 - 49 minutes)

"ன்ன பேசுற... உன்னோட சம்மதமா..?? சம்யு அந்த பிருத்வி வேற ஒரு பொண்ணை காதலிக்கிறான்... உனக்கு தெரியுமில்ல... அப்புறம் எப்படி சம்யு..."

"......"

"நீ ஏன் அங்கப் போன.... நீ பிருத்வியை விட்டு ஒதுங்கி இருக்கப் போறன்னு தானே சொன்ன.... அய்யோ இப்படி நடக்கும்னு தெரிஞ்சிருந்தா... நான் உன் கூடவே இருந்திருப்பேனே... அந்த கடவுள் கிட்ட உனக்கு எந்த கஷ்டமும் வரக்கூடாதுன்னு தானே வேண்டிக்கிட்டு அங்க இருந்தேன்... வேண்டுதலையும் நிறைவேத்தினேனே...

அந்த கடவுளுக்கு கண்ணில்லையா...?? உன்னோட மனசுல இப்படி ஒரு காதல் இருக்கும்னு தெரிஞ்சிருந்தா... உன்னை இந்தியாக்கே வர வேண்டாம்னு சொல்லியிருப்பேனே... இப்படியெல்லாம் நடந்திருக்காதே..?? தன்னை கட்டிக் கொண்டு அழுதவளை அணைத்துக் கொண்டு புலம்பினாள் கவி...

விழித்தலிருந்தே தலை வலித்துக் கொண்டிருந்தது... மயக்கம் இன்னும் தெளியவில்லை... இதில் அழுதுக் கொண்டிருந்தது வேறு... எல்லாம் சேர்த்து அப்படியே கவி மீதே மயக்கமாகிவிட்டாள் யுக்தா.

ஒருவாரம் ஓடிவிட்டது.. யாருமே சகஜ நிலைமைக்கு வரவில்லை... மாதவன் யாரோடும் பேசவில்லை எப்போதும் அமைதியாக உட்கார்ந்திருந்தார்... சுஜாதாவும் அடிக்கடி அழுதுக் கொண்டிருந்தாள்... யுக்தா அந்த அறையிலேயே அடைந்து கிடந்தாள்... கவி தான் வேலாவேலைக்கு சாப்பாடு கொடுத்து கவனித்துக் கொண்டாள்... கவி வேலைக்குச் சென்ற சமயங்களில் சாவித்திரி கவனித்துக் கொண்டாள்...

யாருமே யுக்தாவிடம் எதுவுமே கேட்கவில்லை... கவிக்கூட யுக்தா கொஞ்சம் சரியானதும் தன்னிடம் என்ன நடந்ததென்று கூறுவாள் என்று காத்துக் கொண்டிருந்தாள்...

பிருத்வி வீட்டிலேயும் அதே நிலை... பிருத்வியும் கம்பெனிக்கு கூட போகாமல் வீட்டிலேயே அடைந்துகிடந்தான்..  செந்தில் தான் எப்போதாவது கம்பெனியை பார்த்துவிட்டு வருவார்... மற்ற நேரங்களில் அங்கு அலுவலகத்தில் உள்ளவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்தார்...

செந்திலும் குற்ற உணர்வில் தவித்துக் கொண்டிருந்தார்.... மதி யுக்தாவை இங்கு வரவைக்க வேண்டாம் என்று கூறிய போது இவர் தான் யுக்தாவை வீட்டுக்கு வரச் சொன்னார்... பிருத்வி, பிரணதியோடு சகஜமாக பழக வேண்டும் என்று நினைத்தார்... ஆனால் தன் மகன் இப்படி செய்வான் என்று நினைக்கவில்லை...

பஞ்சையும் நெருப்பையும் ஒன்னா வச்சா பத்திக்கும்னு சொல்வாங்களே.. அது நிஜமா..?? அந்த காலத்தில் ஒரு வயதுக்கு மேல் ஆணையும் பெண்ணையும் பழக விடமாட்டார்கள்... அப்போது அவர்கள் தனிமையில் சந்திக்கும் போது இப்படி நடக்க வாய்ப்பிருந்தது... ஆனால் இந்த காலத்தில் ஆண்களும் பெண்களும் சகஜமாக பழகுகின்றனர்... இருவரையும் நல்ல நண்பர்களாக தானே இவர் நினைத்தார்... அவர்கள் இருவரும் இப்படி... காதலிக்கும் பெண்ணிடமே வரம்பு மீறி நடக்கக் கூடாது... இதில் யுக்தாவிடம்... தன் மகன் இப்படி செய்பவனா...??

யோசித்துக் கொண்டு உட்கார்ந்திருந்த கணவனின் அருகில் வந்தாள் மதி...

"என்னங்க இந்த விஷயத்துக்கு ஒரு முடிவு யோசிச்சு வச்சிருக்கேங்க... அவங்க ரெண்டுப்பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சுடலாம்..."

"என்ன சொல்ற மதி... அப்போ அந்த சப்னா..."

"நம்ம பையன் இந்த தப்ப பண்ணிட்டான்... நான் ஒத்துக்கிறேன்... ஆனா அவன் மோசமானவன் இல்லங்க...

அந்த சப்னாவை காதலிப்பதாக பிருத்வி எந்த சூழ்நிலையில் வந்து சொன்னான்னு உங்களுக்கே தெரியுமில்ல... நாம என்ன சொன்னோம்... கோபத்துலேயும் அவசரத்துலேயும் இந்த முடிவெடுக்காதன்னு சொன்னோமில்ல..."

"......"

"அப்போ அவன் தெளிவா தான் இந்த முடிவெடுத்திருப்பதா சொன்னான் தான்... ஆனா அவனுக்கு சப்னா மேல காதல் இல்லையோன்னு தோனுதுங்க... அவனுக்கு ஒருவேளை யுக்தாவை பிடிச்சிருக்கோ..."

"நீ சொல்றதை நானும் ஒத்துக்கறேன்... இந்த காலத்துல பசங்களுக்கு காதல்ன்னா என்னன்னு தெரியல தான்... ஆனா யுக்தாவை பிடிச்சிருக்குன்னா... அதுக்கு எல்லை மீறி போனுமா..??"

"இது நடந்திருக்க கூடாது தான்... நடந்துடுச்சே... அதை சரி பண்ண வேண்டாமாங்க... அதுக்கு தாங்க சொல்றேன்... அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைப்போம்..."

"எப்படி மதி... மாதவனையும் சுஜாதாவையும் பார்த்து எப்படி இந்த விஷயத்தை பேசறது... சுஜாதாவோட ஆசை யுக்தாக்கும் பிருத்விக்கும் கல்யாணம் பண்ணி வைக்கனும் என்பது தான்... ஆனா அது நடக்கலன்னதும் சுஜாதா அதைப் பெருசா எடுத்துக்கல...

நம்ம மேல கோபப்படல... ஆனா இப்போ பிருத்வி செஞ்சு வச்சிருக்க வேலைக்கு எப்படி அவங்க முகத்துல முழிக்கிறது.."

"ஏங்க சுஜாதாவும் அப்படி நினைச்சு தானே நடுராத்திரில யுக்தாவை கூட்டிக்கிட்டு போனா... பையன பெத்த நமக்கே அப்படின்னா... பொண்ணை பெத்தவங்களுக்கு எப்படி இருக்கும்... நாம தாங்க இதை சரி பண்ணனும்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.