(Reading time: 8 - 15 minutes)

"ப்படி உட்காரு சதி!"-ஊஞ்சலில் தனக்கு சமமான இடத்தை காண்பித்தான்.அவள் தயங்கி நின்றாள்.அவன் அவளது கரத்தை பற்றி அமர வைத்தான்.

அவனது அச்செயலை எதிர்நோக்காததால் மெல்ல அவன் மேல் மோதினாள் அவள்.

அவன் அதை கண்டு கொண்டதாய் தெரியவில்லை.

சற்று ஒதுங்கியே அமர்ந்தாள் சதி!!

"அனு நம்ம எல்லாரையும் விட்டுட்டு போக போறால்ல!"

"என்னங்க நீங்க?இங்கே இருக்கு கௌதம் வீடு!பார்க்கணும்னு தோணுச்சுன்னா பார்த்துட்டு வர போறோம்!இல்லை ஒரு வார்த்தை சொன்னா அவன் கூட்டிட்டு வர போறான்!"

"இல்லை சதி!!என்ன இருந்தாலும் ஏதோ பெரிய பொக்கிஷத்தை இழக்க போறா மாதிரியே இருக்கு!"

".............."

"உன்னோட அண்ணனும் இப்படி வருத்தப்பட்டு இருப்பார்ல?!"-அவள் புரியாமல் விழித்தாள்.

"நாளைக்கு ரெடியாகு!உன் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்!"-அவளுக்கு பேச்சே வரவில்லை.

ஏனோ தன் உணர்வுகளை அவனுக்கு ஈடாக பாவிக்கின்றான் என்பதே அவள் வேதனைகளை குறைத்தது.

மனம் அவன் நெஞ்சில் சாய்ந்து தன் காதலை கரைக்க வேண்டியது!!

ஆனால்,அதற்கான காலம் கனியாமல் அவர்களுக்குள் கண்ணாமூச்சி ஆடியது.

"நான் போய் தூங்குறேன் சதி!காலையில கொஞ்சம் சீக்கிரம் எழுப்பி விடு!"

"சரிங்க..."-அவன் எழுந்து சென்றான்.

அவனது நடவடிக்கைகள் யாவும் புதிராய் இருக்க,அவன் காதல் வெளிப்படுவதை உணர தவறி இருந்தாள் அவள்.

"கு!"

"ம்?"

"நாளைக்கு அனுக்கு நகை வாங்க போறாங்களாம்!அவ உன்னையும் வர சொன்னா!"

"நானா?"

"ம்...."

"இல்லைடா!நான் வரலை!"

"ஏன்?"

"வரலை ஆதி!நீங்க போயிட்டு வாங்க!"

"ரகு...உனக்கு என்ன பிரச்சனை?ராகுலே இதுக்கு எதுவும் சொல்லலை!"

"அவன் வாழ்க்கையில பல அவமானங்களுக்கு காரணமாகிட்டேன்!மறுபடியும்,மறுபடியும் அவன் முன்னாடி வந்து அவனை வேதனைப்படுத்த விரும்பலை!வேணாம்டா!நான் எங்கிருந்தாலும் என் ஆசி என் பொண்ணுக்கு உண்டு!"-சரணால் அதற்கு மேல் பேச இயலவில்லை.

தேவையற்ற சங்கல்பங்கள் தந்தை,மகனின் உறவை உடைத்தது உண்மையில் நரகமே!!

றுநாள்...

அனுவிற்கு அணிகலன்களை மாற்றி மாற்றி தேடினர் பெண்கள்.

அவளோ யாரையோ தேடி கொண்டிருந்தாள்.

"அப்பா!"

"என்னடா?"

"ரகு அப்பா வரலை?"-அவர் முகம் வாடியது.

"அவனுக்கு உடம்பு சரியில்லைம்மா!அதான்..வரலை!"

"என்னாச்சு?"

"தெரியலை...நேற்றிலிருந்து ரொம்ப டயர்டா இருந்தான்!"-பொய் கூறியது உண்மையே!!!

அவள் முகம் வாடினாள்.

"மா!"

"என்னம்மா?"

"நீங்களே நகை எடுத்துட்டு வாங்க!நான் கிளம்புறேன்!"

"என்னம்மா?என்னாச்சு?"

"உடம்பு சரியில்லை!"-பதிலுக்கு காத்திராமல் சரணின் கார் சாவியை வாங்கி கொண்டு கிளம்பினாள்.

நேராக கெஸ்ட் ஹவுஸ்க்கு சென்றாள்.

"அப்பா!"

"............"

"அப்பா!"

"..........."

"அப்பா!"-ரகு கீழிறங்கி வந்தார்.அனுவை கண்டதும் திடுக்கிட்டார்.

"அனு?நீ இங்கே??நகை வாங்க போகலை?"

"நான் உங்க பொண்ணு தானே!"

"என்னம்மா?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.