(Reading time: 8 - 15 minutes)

"தில் சொல்லுங்க?"

"ஆமா!"

"அப்பறம் உங்க பொண்ணு கல்யாணத்துக்கு நகை வாங்க போனா நீங்க வர மாட்டீங்களா?"

"ஏ...செல்லம்!அப்பாக்கு உடம்பு முடியலைடா!வயசாயிடுச்சுல்ல?"-அவர்கள் பேசி கொண்டிருக்க பதற்றத்தோடு சரணும்,ராகுலும் வந்தனர்.

"பொய் சொல்லாதீங்க!நீ அண்ணனுக்காக தானே வரலை?"

"இல்லைம்மா!!"

"சத்தியம் பண்ணுங்க?"-அவர் மௌனம் சாதித்தார்.

"உங்க இரண்டு பேர் பிரச்சனையில என்னை அழ வைப்பீங்களா?"-அவள் கண்கள் குளமாயின.

"அனு!ஏ...இங்கே பாரு!"-ரகு அவளை ஆதரவாக அணைத்தார்.

"எனக்கு நீங்களும் முக்கியம்பா!என்னால எந்த காரணத்துக்காகவும் உங்களை ஒதுக்க முடியாது!"-அவளது அந்த வார்த்தையே அவர் காயங்களுக்கு மருந்தானது.

உலகில் ஏன் புதல்வனை விட புதல்வியிடம் மகத்துவம் அதிகம் வாய்ந்தவள் என்கின்றனர் தெரியுமா?காரணம் தந்தை தாய் மற்றும் உறவுகளிடம் அவள் அன்பு நிர்மூலமானது.

திவ்யத்துவம் வாய்ந்தது.அவளால் தனது எந்த உறவுகளை விலக்கவோ வெறுக்கவோ இயலாது!அது பிறந்த வீடோ!புகுந்த வீடோ!எங்கும் அவள் அன்பு சுயநலமற்றது.நிர்மூலமானது!!

"இங்கேப்பாரும்மா!அழக்கூடாது!நீ அழுதா அப்பாக்கு பிடிக்காதுன்னு தெரியும்ல?"

"உங்களால தான் எல்லாம்!"

"சரி...ஸாரி!!நான் வேணும்னா தோப்புக்கரணம் போடுறேன்!"

"வேணாம்!"

"அப்போ சிரி!"

"மாட்டேன்!"

"நான் அழட்டா?

"வேணாம்!"

"அப்போ சிரி!"-அவள் முகத்தில் புன்னகை படர்ந்தது.

"என் செல்ல பிரிசன்ஸ்க்கு ஒரு கிப்ட் இருக்கு!"

"என்னது?"

"உட்காரு!காட்றேன்!"-என்று தன்னறைக்கு சென்றார்.சிறிது நேரத்தில் எதையோ எடுத்து வந்தார்.

"இந்தா!"-அது ஒரு நகை பெட்டி!

அதை பிரித்தவள் கண்கள் விரிந்தன.

அலங்கரிக்கும் விதமாக அழகிய தங்க அட்டிகை!அதற்கு தோதாக காதணி!

"அப்பா!ரொம்ப அழகா இருக்கு!தேங்க்யூப்பா!"-என்று ரகுவின் கன்னத்தில் முத்தமிட்டார்.

"சூப்பர் செலக்ஷன்!"

"அது கீதாவோட செலக்ஷன்!"-ராகுலின் செவிகள் கூர்மையாகின.

"கல்யாணம் ஆன புதுசுல வாங்கினா!"

"யாருக்காக?மகளுக்கா?மருமகளுக்கா?"-அவர் புன்னகைத்தார்.

"இரண்டு பேருக்கும்!"

"புரியலை!"

"மகன் பிறப்பானா?மகள் பிறப்பாளான்னு தெரியலை!எதுக்கு வம்புன்னு ஒரே மாதிரி இரண்டு வாங்கினா!இன்னொன்னு உன் அண்ணிக்காக இருக்கு!உன் அண்ணன் தான் வாங்குவானான்னு தெரியலை!"-பெருமூச்சு விட்டார்.

அனு அவர் அணைப்பினுள் சேர்ந்தாள்.

"நான் கல்யாணத்துல இந்த நகையை மட்டும் தான் போட்டுப்பேன்!என் அம்மாவோட செலக்ஷன்ல!"

"உனக்கு பிடிச்சிருக்கா?"

"ம்...ரொம்ப!"

"நல்லா இருக்கு உங்க நியாயம்!"-பொறுமையிழந்த சரண் கத்தினார்.அப்போது தான் அவர்களை கவனித்தவர்கள் எழுந்து நின்றனர்.

"இப்படியா கிளம்பி வருவ?உங்கம்மா அங்கே டென்ஷனாகிட்டா!"

"பாதியிலே வந்துட்டியா செல்லம்?"-அனு தலைகுனிந்தாள்.

"பண்றதையும் பண்ணிட்டு பார்க்கிறதை பாரு!"

"விடேன்டா!விளையாட்டுக்கு பண்ணிட்டா!"

"நீ...நீ கொடுக்கிற செல்லம் தான்!சப்போர்ட்டுக்கு ஆள் இருக்குன்னு ஆடுறா!செல்லமே...!!கல்யாணம் பண்ணிட்டு போனா அங்கே யார் வருவா சப்போர்ட்க்கு?"

"ஏன்??அந்த பையன் பெயர் என்னம்மா?"

"கௌதம்!"-தலைகுனிந்தப்படி கூறினாள்.

"ஆ..கௌதம்!அவர் வர மாட்டாரா?"

"என்னடா நக்கலா..!!அப்பாவும்,பொண்ணும் சேர்ந்து வாரி விடுறீங்க?"

"என் பொண்ணுக்கு நான் தான் முதல் சப்போர்ட்!தெரிந்துக்கோ!"

"டேய்!அப்போ நான்??"-ரகு அனுவை பார்க்க,

"நான் இரண்டு பேரோட டார்லிங் தான்!"என்றாள்.தந்தை,மகள் அரங்கேற்றம் அழகாய் அரங்கேறியது.அரங்கேற்றம் அல்ல அது சமர்ப்பணம்!!!

தொடரும்

Episode # 15

Episode # 17

{kunena_discuss:877}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.