(Reading time: 17 - 33 minutes)

'ன்னடா பதிலே வரலை. யோசிடா குழந்தை யோசி. நான் வரவரைக்கும் யோசனை பண்ணிண்டே இரு. ஆனா வாயை திறந்து யார்ட்டேயும் எதுவும் சொல்லப்படாது. சமத்தோன்னோ...'

'டேய்.... '

'இதோ வந்துட்டேன். வந்துண்டே இருக்கேன். நேர்லே வந்து நோக்கு புரியற மாதிரி சொல்றேன். இப்போ வெச்சிடட்டுமா...' 

முரளி அழைப்பை துண்டித்த நொடியில் அவனது வீட்டில் இருந்து அழைப்பு. எதிர்முனையில் அம்மா.

'கண்ணா... எங்கேடா இருக்கே... நாழியாச்சேன்னு கூப்பிட்டேன்..'

'அதும்மா... இங்கே ஒரு ஃப்ரெண்டாத்திலே இருக்கேன் கார்த்தாலே வந்துடறேன்...'

'என்னடா இது  புதுசா இருக்கு. நீ எப்பவும் யாரத்திலேயும் தங்க மாட்டியே??? அம்மாவுக்கு கொஞ்சம் யோசனையும், வியப்பும். இதுவரை கோகுலும் இப்படி யார் வீட்டிலும் தங்கியது இல்லை தான். ஆனால் இன்று கோதையை தனியே விட கண்டிப்பாக மனமில்லை அவனுக்கு.

'ஒரு முக்கியமான வேலைம்மா.. கார்த்தாலே வந்துடறேன்.'

'அதுக்கில்லை டா ...'

'மா... நான் என்ன குழந்தையா மா??? என்னத்துக்கு தேவை இல்லாம கவலை படறே??? பேசாம படுத்துண்டு தூங்கு...'

'சரிடா... ஜாக்கிரதை...'  மனமில்லாமல் தான் அழைப்பை துண்டித்தார் அம்மா.

முரளி சொன்னவைகளே அவன் தலைக்குள் அலையடித்துக்கொண்டிருக்க...

''கோதைப்பொண்ணு...' என்றபடியே உள்ளே வந்தான் கோகுல். தவிப்புடன் அவன் முகம் பார்த்தாள் அவள்.

'அவர் என்ன சொன்னார். ரொம்ப கோவமா???'

சிரித்தான் கோகுல் 'நேக்கானும் கொஞ்சம் கோபம் வரும். அவனுக்கு கோபமே வராது...'

'ஒண்ணுமே சொல்லலையா அவர்?

'ம்ஹூம் ...' என்றபடியே அவள் முகத்தை ஆழ்ந்து ஊடுறுவினான் கோகுல்.

;நம்ம கல்யாணம் கூட நின்னு போயிடும் இல்லையா கோகுல்??? அவள் சற்று முன் கேட்டது நினைவுக்கு வர, முரளி சொல்வது ஒரு வகையில் சரிதானோ என்று தோன்றியது அவனுக்கு.

'நீங்க... இப்போ ஆத்துக்கு போகணுமா???' மெதுவாக கேட்டாள் அவள்.

'இல்லமா. கார்த்தாலே வரைக்கும் இருக்கேன். உன்னை தனியா விட்டுட்டு போக மனசு வரலை..' அவன் சொல்ல நிறையவே நிம்மதி பிரவாகம் அவள் முகத்தில்.

'அக்கா பத்திரமா இருப்பாளா கோகுல்???' அடுத்த கேள்வி.

அதுதான் அவனுக்கும் குழப்பமாக இருந்தது. அவள் தேர்ந்தெடுத்தவன் சரியானவனா??? அப்படி இல்லை என்றால் வேதா ஏதாவது பிரச்சனையில் மாட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறதே???

'உன்கிட்டே உங்க அக்கா ஃபிரண்ட்ஸ் நம்பர் ஏதானும் இருந்தா குடு. உங்க அக்கா எங்கே போயிருக்கா. என்ன ஏதுன்னு ஏதாவது டீடெயில்ஸ் கிடைக்காகறதான்னு பார்க்கறேன்.' என்றான் கோகுல்.

'அக்காக்கு நிறைய ஃபிரண்ட்ஸ் எல்லாம் இல்லை. கவிதா மட்டும் தான்'

'சரி அந்த கவிதா நம்பர் குடு...' என்று கேட்டவன் ஏதோ யோசனையுடனே தனது காவல்துறை நண்பனை அழைத்தான்.

'ஹலோ... மாயக்கண்ணன் ஹியர்!!!!

'நான் கோகுல் பேசறேன்டா ஒரு ஹெல்ப் வேணுமே'

'சொல்லுடா செய்யறேன்....

'தெரிஞ்ச பொண்ணுடா... ரொம்ப நல்ல பொண்ணு... இப்போ..' கோகுல் கொஞ்சம் தயக்கத்துடன் வார்த்தைகளை கோர்க்க

'புரிஞ்சது... நீ போட்டோ மட்டும் அனுப்பு. கொஞ்சம் டைம் குடு நான் ட்ரேஸ் பண்ணிட்டு சொல்றேன்... அப்படியே அவ மொபைல் நம்பர் அனுப்பு... அதை வெச்சு எதாவது ட்ரேஸ் பண்ண முடியுமான்னு பாக்கறேன்.

'இப்போ இங்கே லேன்ட் லைன்க்கு வேறே எங்கே இருந்தோ அவ கால் பண்ணாடா... நம்பர் என்னனு தெரியலை.'

'அப்போ உங்க லேன்ட் லைன் நம்பரும் அனுப்பு...'

'அப்புறம் ... இன்னொரு விஷயம்... இந்த விஷயம்...வெளியிலே தெரிய வேண்டாம்.... இது சம்மந்தமா எது தெரிய வந்தாலும் எனக்கு சொல்லு அது போறும்...''

'வெளியிலே வராது... நான் பெர்சனலா டீல் பண்ணிட்டு சொல்றேன். ஒகே வா??? உன்னோட கல்யாண வேலையெல்லாம் எப்படி போயிட்டிருக்கு???

'ஆங்... போயிண்டிருக்குடா... கோயிங் ஆன்..' என்றான் கோகுல். 'இப்போதிருக்கும் நிலைமைக்கு வேறே எப்படி சொல்வதாம்???.'

'ஒகே டா. சீக்கிரம் கூப்பிடறேன்..' துண்டித்தான் அழைப்பை.

அதற்குள் கவிதாவின் எண்ணுடன் வந்தாள் கோதை. நேரம் இரவு பதினொன்றை நெருங்கிக்கொண்டிருக்க இந்த நேரத்தில் ஒரு பெண்ணை அழைத்து பேசுவது அநாகரீகம் என்று தோன்ற, தனது கைப்பேசியில் அந்த எண்ணை மட்டும் பதித்துக்கொண்டான் கோகுல்.

'நீ தூங்குடா கொஞ்ச நாழி ....'

'தூக்கம் இப்போ வாராதே.. அப்பா ஏன் போன் ஆஃப் பண்ணி வெச்சிருக்கார்???'

'சார்ஜ் இல்லாம இருக்கும்மா... மார்னிங் பேசுவார். கொஞ்ச நாழி படுத்துக்கோ...' அவளை கட்டாய படுத்தி கொஞ்ச நேரம் உறங்க வைத்தான் கோகுல்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.