(Reading time: 17 - 33 minutes)

கொஞ்ச நேரம் சென்றதும் மாயக்கண்ணனிடமிருந்து அழைப்பு.

'அவங்க போன் சென்னை வேளச்சேரிலே சுவிட்ச் ஆஃப் ஆகி இருக்குடா.... அண்ட் அவங்க இப்போ ஃபோன் பண்ணது சென்னை பெங்களூர் ஹை வேலே இருக்கிற ஒரு பப்ளிக் போன்லேர்ந்து...' என்றான் அவன். 'வேறே ஏதாவது இன்ஃபார்மேஷன் தெரிஞ்சா சொல்றேன்'

'நான் இப்போ மதுரையிலே இருக்கேன் என்றாளே வேதா???' பல நூறு அதிர்வுகள் கோகுலினுள்ளே. எதற்காம் இந்த பொய்???

நேரம் காலை ஐந்தை நெருங்கிக்கொண்டிருக்க... கோதையின் வீட்டில் அவர்கள் இருவரின் எதிரிலும் அமர்ந்திருந்தான் முரளி. சென்னை ஏர்போர்டில் வந்து இறங்கியவன் நேராக இங்கே வந்திவிட்டிருந்தான். கோதை கொடுத்த சூடான காபியை குடித்தபடியே நிமிர்ந்தான் அவன்.

கோதையும் கோகுலும் அருகருகே அமர்ந்திருக்க தன்னாலே புன்னகை பூத்தது அவன் இதழ்களில். 'மேட் ஃபார் ஈச் அதர்..' என்றான் அவன் வாய்விட்டு. சின்ன மென்னகை இருவர் இதழ்களிலும்.

கோதைக்கு ஏதோ ஒன்று உறுத்தி இருக்க வேண்டுமோ??? 'சாரிண்ணா...' சற்றே தழைந்து ஒலித்தது கோதையின் குரல்.

'எதுக்கும்மா???'

'அக்கா... பண்ணதுக்கு...' அவள் விழிகள் தாழ்ந்தன.

கோதை... அதை விடு .... இப்போ நான் ஒண்ணு சொன்னா கேப்பியா??? அவளை பார்த்தப்டியே கேட்டான் முரளி.

'சொல்லுங்கோ...' நிமிர்ந்தாள்

'உங்க அக்கா பத்தி ரெண்டு நாளைக்கு யாருக்கும் தெரிய வேண்டாம். உங்க அப்பா உட்பட...'  அவன் உறுதியாக சொல்ல மொத்தமாக பயந்து போனாள் கோதை.

'அது எப்படி... முடியும்... அப்பாவுக்கு தெரியாம எப்படி??? நேக்கு பயமா இருக்கு.. ரொம்ப பிரச்சனை வரும் ...'

'இப்போ நாம எல்லாத்தையும் எல்லார் கிட்டேயும் சொல்றோம்ன்னு  வெச்சுப்போம்... அப்போ என்ன ஆகும்னு நினைச்சு பார்த்தியா???. முதல்லே உங்க அப்பா ரொம்ப துவண்டு போயிடுவார். எங்க அப்பா தாம் தூம்னு குதிப்பார். இவன் அப்பா அண்ணா சொல்றது தான் வேத வாக்குன்னு சொல்லிண்டிருப்பார். வரவா எல்லாரும் அவாளுக்கு தெரிஞ்சதை பேசுவா. எங்க அம்மாவும் ,இவன் அம்மாவும் அழுவா அதோட எல்லாம் முடிஞ்சிடும். எப்போனாலும் இதுதான் நடக்க போறது!!! . நடக்கட்டும். ஆனா  உங்க கல்யாணம் முடிஞ்சதும் நடக்கட்டுமே...'

இருவரும் இமைக்க மறந்து முரளியையே பார்த்திருந்தனர்.

'என்னடா அப்படி பார்க்கறேள் ரெண்டு பேரும்??? நீங்க ரெண்டு பேரும் பிரியறதிலே நேக்கு கொஞ்சம் கூட உடன் பாடு இல்லை. நீங்க என்னடா தப்பு பண்ணேள்.??? ஏற்கனவே பிளான் பண்ணா மாதிரி  நாளைக்கு கார்த்தாலே பத்து மணிக்கு ரிஜிஸ்டர் ஆஃபிஸ்லே ஒரு கையெழுத்து. அதோட  கதையே மாறிடும்.  அதுக்கு அப்புறம் கோதை  உரிமையோட நம்மாத்துக்கு வரலாம்.. யாரும் எதுவும் கேட்க முடியாது. அதுக்கு முன்னாடி இந்த விஷயம் வெளிலே வர வேண்டாமே!!!!'

..........................................

பிரச்சனை வரும்!!!! அதுக்கு அப்புறம் நிறைய பிரச்சனை வரும். அதை நாம எல்லாரும் சேர்ந்து ஃபேஸ் பண்ணலாம்'

'அது சரிடா... உன் கல்யாணம்???  ரெண்டு பேருக்கும் ஒண்ணா கல்யாணம் நடக்கணும்ன்னு தானே பிளான் பண்ணோம். நேக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடா.' சொல்லிவிட்டு ஒரு முறை கோதையை திரும்பி பார்த்துவிட்டு தொடர்ந்தான் கோகுல்

'வேதா .. இல்லேனா வேறே யாரானும் நல்ல பொண்ணா பார்த்துட்டு...'

'கண்ணா...' இடைமறித்தான் முரளி. 'கொஞ்சம் யோசனை பண்ணி பாருடா உன் கல்யாணத்துக்கு முன்னாடி  எல்லாருக்கும் விஷயம் தெரிஞ்சிடுத்துன்னா  நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கறது ரொம்ப கஷ்டம் பா. திரும்பவும் எல்லாரையும் சம்மதிக்க  வெக்க போராடணும்.... இந்த மாதிரி தேவை இல்லாத செண்டிமெண்ட் எல்லாம் வெச்சுக்காதே. என கல்யாணம் வேளை வந்தா தன்னாலே நடக்கும். நீ  பேசாம கல்யாணம் பண்ணிக்கோ ' கோகுலை பார்த்து சொன்னவன் கோதையின் பக்கம் திரும்பினான்.

'கோதை நான் உன்னண்ட ஒரே ஒரு கேள்வி கேட்பேன். மனசிலே இருக்கறதை அப்படியே சொல்லணும். நோக்கு கோகுல் நல்லவன், உன்னை கல்யாணம் பண்ணிண்டா சந்தோஷமா பார்த்துப்பான்ன்னு  நம்பிக்கை இருக்கா???'

சட்டென ஆமோதித்து தலை அசைத்தாள் கோதை.

'எப்படி சொல்றே அவன் நல்லவன்னு???'

'அதெல்லாம் சொல்ல தெரியலை நேக்கு. ஆனா என் மனசுக்கு நல்லவர்ன்னு தெரியும்...' இதழ்களில் சின்ன புன்னகையுடன் சொன்னாள் கோதை.

'குட். வெரி குட். இது போறும்...' என்றான் முரளி. 'நாளைக்கு சந்தோஷமா கை எழுத்து போடுவியோன்னோ??

'ம்...' மெல்ல தலை அசைத்தாள் கோதை. இன்னும் புன்னகை மாறவில்லைதான்.

'சரி அப்போ நாங்க கிளம்பறோம். உங்க ஆத்திலே கெஸ்ட் எல்லாரும் எப்போ வரா??

'ஏழு மணிக்கு வந்திடுவா ..' என்றவள் சட்டென ஏதோ தோன்ற கேட்டாள் இப்போ அப்பா கேட்டா நான் அக்கா பத்தி என்ன சொல்றது???'

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.