(Reading time: 17 - 33 minutes)

'க்கா டெல்லி போயிருக்கான்னு சொல்லு. ஏதோ மீட்டிங் வர நாலு நாள் ஆகும்னு சொல்லு...' என்றான் முரளி.

தயங்கி தயங்கித்தான் தலையசைத்தாள் கோதை...' அப்பாவிடம் பொய் சொல்லி பழக்கம் இல்லை அவளுக்கு.

.'வரேண்டா. எதையும் ரொம்ப யோசிக்காதே. நாளைக்கு பார்ப்போம். சரியா??? அவளிடம் கோகுல் சொல்ல... இருவரும் வீட்டுக்கு கிளம்ப உள்ளுக்குள் கொஞ்சம் பயம் பரவ ஆரம்பித்தது அவளுக்கு.

காலை ஒன்பது மணி.

கோதையின் அத்தை அத்திம்பேர் என எல்லாரும் வீட்டுக்கு வந்திருக்க அத்தையின் கைப்பேசிக்கு அழைத்தார் அப்பா,

'ஆத்திலே தான் இருக்கேளா எல்லாரும்???'

'இங்கேதான் இருக்கோம். நீ ஊருக்கு போய் என்னடா பண்ணிண்டிருக்கே' என்றார் அத்தை. அப்பாவின் அக்கா அவர்.

'நாளைக்கு நிச்சியதார்த்தம். நீ ஒரு பக்கம் ஊருக்கு போய் உட்கார்ந்திண்டு இருக்கே. உன் பெரிய பொண்ணு டெல்லில போய் உடகார்ந்துண்டு இருக்கா!!!!'

'டெல்லிக்கா???' அப்பாவின் குரலில் அதிர்ச்சி மட்டுமே இருந்தது.' கோதை கிட்டே குடு...'

'அப்பா... சொல்லுங்கோ ...'

'என்னமா... நேத்துலேர்ந்து போனே எடுக்கலை. நான் என் போன் தொலைச்சிட்டேன். நேக்கு ஆத்து நம்பர் தான் பார்க்காம தெரியும். வேறே போன்லேர்ந்து அதுக்கு ட்ரை பண்ணிண்டே இருக்கேன். ரிங் போயிண்டே இருந்தது. யாருமே எடுக்கலையே??? அத்தை நம்பர் தெரியும் அதுதான் இப்போ அதுக்கு கூப்பிட்டேன் '

'அ... அது அவுட் ஆஃப் ஆர்டர் பா. இங்கே ரிங்கே வரலை...'

'அது சரி விடு... அக்கா எங்கே???'

'டெ...ல்...லி போ... யி..ரு..க்கா....பா..'  ஒவ்வொரு எழுத்தாக அவள் உச்சரித்து முடிப்பதற்குள் பல முறை செத்து பிழைத்திருந்தாள் கோதை.

அங்கே கோகுலின் வீட்டிலும் உறவினர்கள் வர ஆரம்பித்திருந்தனர். காலை உணவை முடித்துவிட்டு கோகுலும், முரளியும் தனியே அமர்ந்திருக்க ஏனோ வேதாவின் ஞாபகம் வந்தது முரளிக்கு.

'நான் அவகிட்டே பேசும்போதானும் ஒரு வார்த்தை ஹின்ட்டாவது கொடுத்திருக்கலாம் வேதா. நான் கண்டிப்பா ஏதானும் பண்ணி இருப்பேன். இப்படி சொல்லாம ஓடிப்போயிருக்க வேண்டாம்...' அவன் குரலில் கொஞ்சம் ஆதங்கம் கலந்திருந்தது.'

'என் மனசுக்கு ஏதோ ஒண்ணு தப்பா பட்டுண்டே இருக்கு முரளி. வேதா எங்கேயாவது மாட்டிண்டு இருப்பாளோன்னு தோண்றது'

'ஏன்டா??? அவளா விரும்பி தானே போயிருக்கா..'

இல்லடா நேத்து ராத்திரி ஒரு போன் வந்தது. வேதாதான் பேசினா. ஆனா... என்னமோ ஒண்ணு சரியில்லைடா' என்று சொன்னவனுக்கு கோதை கொடுத்த கவிதாவின் எண் நினைவுக்கு வந்தது..

என்கிட்டே வேதாவோட ஃப்ரெண்ட் நம்பர் இருக்குடா. பேசிப்பார்ப்போமா????'

'சரி... நீயா எதுவும் சொல்லாம ஏதாவது டீடைல்ஸ் தெரிய வருதான்னு பாரு...' முரளி சொல்ல கோகுல் கவிதாவின் எண்ணை அழைத்தான்.

'ஹலோ...'

'ஹலோ... திஸ் இஸ் கோகுல் ஹியர்...' அவன் சொல்லி முடிக்கவில்லை மறுமுனையில் குரல் படாரென வெடித்தது.

'டேய்... என்ன தைரியம் இருந்தா எனக்கு போன் பண்ணுவே நீ.??? உன்னை பத்தின உண்மை எல்லாம் எனக்கு தெரிஞ்சு போச்சுடா. உன் உண்மையான பேர் என்னடா?? ஜி.கே க்ரூப்ஸ் ஓனர்ன்னு யாரை ஏமாத்தறே. இனிமே நீ வேதாவை ஏமாத்த முடியாது. நான் விட மாட்டேன். உன்னை சும்மா விட மாட்டேன்...'

'எக்ஸ்க்யூஸ் மீ கவிதா. நீங்க ஏதோ தப்பா புரிஞ்சுண்டு பேசறீங்க. ஒரு நிமஷம் நான் சொல்றதை...'

'தப்பா இல்லை. சரியா புரிஞ்சுகிட்டேன் உன்னை. வைடா போனை...' துண்டித்து விட்டாள் அழைப்பை.' அவளெங்கே அறிந்தாள் இவன் தான் உண்மையான கோகுல் என.

'என்னாச்சுடா???' என்றான் முரளி.

சில நொடிகள் நெற்றியை தேய்த்தபடியே அமர்ந்திருந்தவன் சட்டென சொன்னான். 'என் பேரை வெச்சு வேதாவை எவனோ ஏமாத்திண்டு இருக்கான்டா.

'வாட்???'

'எஸ்.!!!! வேதா நிஜமாவே யார்கிட்டயோ மாட்டிண்டு இருக்கான்னு தான் தோண்றது...' என்றபடி மறுபடியும் கவிதாவுக்கு முயன்றான் கோகுல். அதே எண் என்பதால் சட்டென அழைப்பை துண்டித்தாள் அவள். மறுபடி முயன்றான். மறுபடி கட்.

'இரு நான் கூப்பிடறேன். என் மொபைல்லேர்ந்து' என்றபடி முயன்றான் முரளி. தலை வரை ஏறி இருந்த கோபம் கவிதாவை யோசிக்க விடவில்லை.

'இந்த பொறுக்கி இன்னொரு நம்பரிலிருந்து அழைக்கிறானா என்ன??' மறுபடி கட். மறுபடியும் முரளி அழைக்க, அழைப்பை துண்டித்து விட்டு  தனது கைப்பேசியை அணைத்திருந்தாள் கவிதா.

கீதம் தொடரும்.....

Episode # 09

Episode # 11

{kunena_discuss:890}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.