(Reading time: 21 - 42 minutes)

க நீங்கள் இருவருமே உங்களின் மூளை சொல்வதையே உண்மை என உறுதியாக நம்புகிறீர்கள்.

அதுதான் உண்மையுங்கூட. எனவே..பெண்ணே ஹேமாவதி..இதோ குணசேகரனின் சிரசோடும் சுந்தரேசனின் உடலோடும் இருக்கும் இவரே உன் கணவர்.மற்றொருவர் உன் அண்ணன் சுந்தரேசன்.

இதுவே எனது தீர்ப்பு.எனவே இவரையே நீ உன் கணவராய் ஏற்று மனமொத்து வாழ்வாயாக என்றான்.

ஆடாமல் அசையாமல் புதிய மன்னர் என்ன விடையைத் தரப்போகிறாறோ என்று குதிரைவீரன் முகத்தையே பார்த்தபடி இருந்த அங்கிருந்தோர் ஆஹா..ஆஹா..பிரமாதமான முடிவு..இதுபோன்ற ஓர் அறிவார்ந்த நல்ல விடையை நம் புதிய மன்னர் குதிரை வீரனாலன்றி வேறு யாரால் கொடுத்திருக்க முடியும்..?வாழ்க நம் மன்னர்..வளர்க அவர்தம் புகழ்..என்றும் குதிரைவீரர் வாழ்க!மன்னர் குதிரைவீரர் வாழ்க என்று கோஷமிட்டனர்.வாழ்த்தொலியும், கைதடட்டல்களுமாய் அவ்வரங்கமே அதிர்ந்தது.

குதிரைவீரன் அளித்த பதிலால் மகிழ்ந்து போன ஹேமாவதி.மன்னன் குதிரை வீரனைக் கரங்கள் கூப்பி வணங்கி நா தழுதழுக்க...அரசர்க்கரசே..மதினுட்பம் உடையேவரே..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

ஜெய்யின் "ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

யாராலும் பதில் தரவொண்ணா கேள்விக்கு மிகுந்த அறிவோடு ஆழ்ந்து சிந்தித்து அற்புதமான பதில் ஒன்றினை ஈந்து என் வாழ்வை மீண்டும் மலரச் செய்து விட்டீர்.என் மனம் அமைதியுற்றது.இனி எவ்வித சஞ்சலமும் இன்றி என் கணவரோடு வாழ்வேன்.என் கேள்விக்கான உங்களின் பதிலை இவ்வுலகம் எவ்வித சந்தேகமுமின்றி ஏற்கும் என நம்புகிறேன்..என்றாள்.அவள் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வடிந்தது.

இவ்வுலகம் உங்கள் பதிலை ஏற்கும் என அவள் சொன்னபோது அங்கு குழுமியிருந்த மக்கள் அனைவரும் ஆம்..ஆம்..மன்னரின் தீர்ப்பு..அவரின் பதில் ஆண்டவனின் தீர்ப்புக்கு அவனின் பதிலுக்கு நிகரானது.அதில் எள்ளளவும் சந்தேகமில்லை என உரக்கச் சப்தமிட்டனர்.

தனது கணவன் குணசேகரனின் சிரசோடும் அண்ணனின் உடலோடும் நின்றிருந்தவனைக் கரம் பற்றித் தன்னருகே நிறுத்திக்கொண்ட ஹேமாவதி பழைய மன்னர்,மகாராணி,புதிய மன்னன் குதிரைவீரன், ராணி அபரஞ்சிதா ஆகியோரை வணங்கி தர்மத்தைக் காக்கும் அரச குலத்தோரே..நாட்டு மக்களையும் தாம் பெற்ற மக்களாய்க் கருதி அவர்களுக்கு ஏதும் தீங்கு நேருங்கால் அதனைக் களைந்து ஆதரவு காட்டும் அன்புள்ளம் கொண்டோரே..இனி இவரே என் கணவர்..எம்மை ஆசிவதியுங்கள் என்றாள்.குணசேகரனும் ஹேமாவதியின் கூற்றை ஆமோதிப்பவன் போல தானும் அவர்களை நோக்கித் தலை வணங்கினான்.

வாழ்வாங்கு வாழ்வீர்களாக..என வாழ்த்தினர் மன்னர் குடும்பத்தினர்.சுந்தரேசனும் தன் பங்குக்கு ராஜ குடும்பத்தினரை வணங்கினான்.பிறகு மூவருமாக குழுமியிருந்த மக்கள் அனைவரையும் வணங்கினர்.

கடைசியாய் மன்னன் குதிரை வீரனையும் பெரிய ராஜா,ராணியையும் அபரஞ்சிதாவையும் வணங்கி நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினர் மூவரும்.

விடைபெற்றுக் கிளம்பிய மூவரையும் பார்த்து..அன்புடையீர் நீங்கள் மூவரும் எங்கும் செல்ல வேண்டாம்.

காரணம் ஆண்களாகிய உங்கள் இருவரையும் கழுத்தறுத்துக் கொன்ற பாதகன் நீங்களிருவரும் இன்னும் உயிரோடுதான் உள்ளீர்களென்பதனை அறிந்தால் மீண்டும் உங்களுக்குத் துன்பம் கொடுக்க முயலலாம்.

அது ஹேமாவதியை மேலும் துன்பத்திற்கு ஆளாக்கும்.எனவே நீங்கள் நான் தரும் பாதுகாப்போடு இவ்வரண்மனை அருகிலேயே வசிப்பீராக என்றான் குதிரைவீரன்.

அவனின் கனிவான கருணையான சொல் கேட்டு அங்கிருந்த மக்கள் அனைவரும் அவனைப் போற்றிக் கொண்டாடினார்கள்.

அரண்மனைக்கருகிலேயே ஹேமாவதி-குணசேகரனின் இன்ப வாழ்க்கை சகல வசதியோடும் மகிழ்ச்சியோடும் ஆரம்பமாயிற்று.

ரவு.ஆளுயர குத்துவிளக்கின் ஒரு முகம் மட்டுமே முத்துப்போல் எரிந்து கொண்டிருந்தது.அதன் இதமான கண்களை உறுத்தாத வெளிச்சம் அறையெங்கும் லேசாகப் பரவியிருக்க அப்படி எரியும் விளக்கில் உள்ள எண்ணை சூடாகி ஒருவித நறு மணத்தைக் கொடுக்க சாரளத்தின் வழியே உள்ளே நுழைந்த தென்றல் அவ்வறையின் அருகே அமைந்திருந்த நந்தவனத்தில் அப்போதுதான் பூத்திருந்த மல்லி,குண்டு மல்லி, ஜாதி மல்லி,முல்லை,சந்தன முல்லை,மகிழம் பூ ஆகிய நறுமணப் பூக்களின் வாசத்தையும் தன்னோடு அள்ளிக்கொண்டு வர அவ்வறையே மணத்தால் நிரம்பி மனதைக் கிறங்க அடித்தது.மஞ்சத்தில் இடது காலை குத்திட வைத்து வலது காலை நீட்டி கைகளால் குத்திட வைத்திருந்த இடது காலை சுற்றி வளைத்தபடி  அமர்ந்திருந்தான் குதிரைவீரன்.

அவன் அருகே மல்லாந்த நிலையில் கண்களை மூடிப் படுத்திருந்தாள் அபரஞ்சிதா.அவள் தூங்கி விட்டாளா?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.