(Reading time: 21 - 42 minutes)

ல்லை..இல்லை சொல்கிறேன்..சொல்கிறேன்.என் தந்தைக்கு ஒரு தமக்கை உண்டு.என் தந்தையை விட ஏழு வயது மூத்த சகோதரி.அவரது பெயர்..பெயர்..சொல்வதா வேண்டாமா எனத் தடுமாறினார் பெரிய மன்னர்...

அப்புறம் என்ன நினைத்தாரோ என் தந்தையின் தமக்கையான என் அத்தையின் பெயர்..

மிகுந்த பரப்போடும் ஆவலோடும் அவரின் வாய் அசைவையே பார்த்துக்கொண்டிருந்த அதிவீரனான குதிரை-

வீரனின் மனம் மதிவதனி என்ற பெயரை பெரும் உவகையோடு உச்சரித்தது.

Related: You might also like... 

G Adarsha's "My really really really really really REALLY weird story" - Come let us sneak peek into the mind of a ten year old kid...

Don't miss it... 

என் அத்தையின் பெயர் மதிவதனி...பெரிய மன்னர் மதிவதனி என்ற பெயரை உச்சரிக்க அப்பெயர் அக்கொலு-மண்டபத்தின் பெருஞ்சுவர்களில் போய் மோதித் தெறித்து மீண்டும் மீண்டும் எதிரொலித்தது.

அவரின் வாயிலிருந்து அப்பெயர் வெளிவந்து அப்பெயர் குதிரைவீரனின் செவிக்குள் நுழைந்தபோது அப்பெயர் அவனிடம் ஏற்படுத்திய அதிர்வை அவன் மிகுந்த சிரமத்தோடு கட்டுப்படுத்தினான்.

மாமா...உங்கள் அத்தை இப்போது எங்கிருக்கிறார்?அவரின் ஓவியம் ஏதும் இங்குள்ளதா?..உங்களின் தந்தையின் ஓவியம் உள்ளது ஆனால் அவரின் சகோதரியான உங்கள் அத்தையின் ஓவியம் காணப்படவில்லையே..?

சட்டென பெரிய மன்னரின் பார்வை அவரையும் அறியாமல் அந்த நீண்ட மண்டபத்தின் வெகு கோடியில் இருந்த மூலைக்குச் சென்றது.அங்கே துணியால் மூடப்பட்டு தனியாய் ஒரு ஓவியம் நின்றிருந்தது.அவரின் பார்வை அந்த ஓவியம்வரை சென்று நின்றபொது அவ்வோவியம்தான் தன் பாட்டி மதிவதனியின் ஓவியமாக இருக்கவேண்டுமென யூகித்தான் குதிரைவீரனான அதிவீரன்.

பெரிய மன்னரின் அனுமதிக்காக காத்திருக்கவில்லை அவன்.தம்மை அறியாமல் அவ்வோவியம் நோக்கி ஓடின அவன் கால்கள். சற்றும் தாமதிக்காமல் மூச்சுவிடவும் மறந்து அவ்வோவியத்தை மறைத்திருந்த துணியை விலக்கினான்.அது அதிவீரனின் பாட்டியான மதிவதனியின் இளமைப் பருவ ஓவியம்.அவ்வளவுதான் அவ்வோவியத்தைக் கண்ட அடுத்த நொடி அவன் உடல் தடதடவென்று ஆடியது.கீழே விழுந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் சுவற்றில் சாய்ந்து கொண்டான் அவன்.

பாட்..டீ..எனக் கத்தவேண்டும் போல் இருந்தது அவனுக்கு.கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது.மிகுந்த ஆசையோடும் வாஞ்சையோடும் அவ்வோவியத்திலிருந்த தன் பாட்டியைத் தொட்டுப்பார்த்தான் அவன்.

அவ்வோவியத்தை திரும்பித் திரும்பி பார்த்தபடி பெரிய மன்னரை நோக்கி வந்தான்.

மாமா...

சொல்லுங்கள் மருமகனே...

அதோ அவ்விடத்தில் இருக்கும் உங்கள் அத்தையின் ஓவியத்தை மட்டும் ஏன் தனியா வைத்திருக்கிறீர்கள்?

அதற்கு ஏதும் காரணம் உண்டா மாமா?

அது பற்றிக் கேட்காதீர்கள் மருமகனே..அது..அது..மிகவும் கசப்பான விஷயம்..

உங்களுக்கு விருப்பமில்லையெனில் வேண்டாம் மாமா...நானும் உங்களில் ஒருவன் என நினைத்துதான் அறியக் கேட்டேன்..சொல்லக் கூடாதது எனில் வேண்டாம் மாமா..

பெரிய மன்னரின் முகத்தில் சோகம் அப்பியது..நீண்ட மௌனம் அங்கே நிலை பெற்றது.

சரி..வாருங்கள் அங்கே அமர்ந்து பேசுவோம்..சொல்கிறேன் அந்த சோகக் கதையை.இந்த பாண்டிய வமிசத்திற்கு ஏற்பட்ட அவமானத்தை,இழிவை,தலை குனிவை,பழியை,மீளமுடியாத துன்பத்தை...

அந்த கொலு மண்டபம் விட்டு வெளிவந்த அவர்கள் நால்வரும் அங்கிருந்த இருக்கைகளில் அமர்ந்தனர்.

பாண்டிய நாடு சந்தித்த அந்த பெரும் சோகத்தைக் கதையாய் சொல்ல ஆரம்பித்தார் பெரிய மன்னர்.

பெரிய மன்னர் சொல்லப் போகும் கதையைக் கேட்க ஆவலோடு காத்திருந்த அதிவீரனான குதிரைவீரனோடு நாமும் அக்கதையைக் கேட்கக் காத்திருப்போமா?நன்றி...

தொடரும்...

Episode 12

Episode 14

{kunena_discuss:956}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.