(Reading time: 21 - 42 minutes)

று நாள் காலை.சுறுசுறுப்பானது அரணனை. உடற்பயிற்சி கூடம் சென்று சிறிது நேரம் பயிற்சி செய்து விட்டுத் திரும்பிய குதிரைவீரனை பெரிய மன்னர் சந்திக்க விரும்புவதாய் பணிப்பெண் ஒருத்தி சொல்ல அவரின் இருப்பிடம் நோக்கிச் சென்றான் .அங்கே பெரியமன்னர், பெரிய ராணி, அபரஞ்சிதா அனைவருமே இவனுக்காக காத்திருந்தனர்.

மாமா..மகா ராஜா,, அவர்களே வணக்கம்..என பெரிய மன்னரை வணங்கிவிட்டு மகாராணியையும் வணங்கினான் குதிரைவீரன்.

வாருங்கள்..மருமகனே..அமருங்கள்.

அங்கிருந்த ஆசனமொன்றில் இவன் அமர அவனின் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள் அபரஞ்சிதா.

பொதுவாய் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர் அனைவரும்.அப்படி பேசிக்கொண்டிருந்தாலும் தான் எதைத் தெரிந்து கொள்ள இங்கு வந்தோமோ அதற்கான வேலையை எப்படித் தொடங்குவது என்றே அவன் மனம் யோசனையில் இருந்தது.நல்ல வேளையாய் அதற்கான நேரமும் வந்தது.

மாமா...அழைத்தான் குதிரைவீரன்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

சித்ரா V யின் "காதலை உணர்ந்தது உன்னிடமே..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்... 

சொல்லுங்கள் மருமகனே..

மாமா..அவர்களே..சிங்கபுரி எனும் இன்னாடு பாண்டிய நாட்டுக்கு உட்பட்டது தானே..?

அதில் என்ன சந்தேகம்?பாரத பூமியின் தென் திசை நாடுகளாகிய சேர, சோழ, பாண்டிய நாடுகளில் நம் பாண்டிய நாடு பரந்து விரிந்து பார்போற்றும் பல மாமன்னர்களால் ஆளப்பட்டது.அவர்களெல்லாம் எப்பேர்ப்பட்ட பராக்ரமசாலிகள்?.அவர்களின் காலத்தில் அறமும் வளமும் செழித்திருந்தது.பக்கத்து நாட்டு மன்னர்களெல்லாம் நம் இந்த நாட்டுக்குக் கப்பம் கட்டி வந்தார்கள்.அதனால் அரசாங்க கஜானா எப்பொழுதுமே நிரம்பி வழியுமாம்.என் தந்தை அடிக்கடி சொல்லுவார்.ஆனால் அவரின் காலத்தில் இதெல்லாம் நின்றுவிட்டதாம்.இதை மிகுந்த வருத்தத்தோடு சொல்லுவார் என் தந்தை.

அது சரி மாமா..எதற்காக என்னைச் சந்திக்க விரும்பினீர்கள்?

ஓ..அதுவா?சொல்லும்போதே அவரின் முகத்தில் மகிழ்ச்சி பளீரிட்டது.மருமனே..இன்று விடிகாலை நான்

ஒரு கனவு கண்டேன்.

என்ன கனவா?அது என்ன மாமா?

சொல்கிறேன்....என் கனவில் என் தந்தையும்,என் தந்தையின் தந்தையுமாகிய என் தாத்தாவும் வந்தார்கள்.

எனது இத்தனை வருட வாழ்க்கையில் என் தந்தை இறந்த பிறகு இதுவரை அவர் என் கனவில் வந்ததே இல்லை.கனவில் வந்த என் தந்தையும் தாத்தாவும் மிக மகிழ்ச்சியோடு சிரித்த முகத்தோடு காணப்பட்டார்கள்.

அப்படியா..?அவர்கள் ஏதும் சொன்னார்களா மாமா அவர்களே?

இல்லை..அவர்களைக் கண்டதும் தந்தையே என்றபடி நான் அவர்கள் அருகில் சென்றேன்.ஆனால் அவர்கள்

தங்களின் கரங்களை உயர்த்தி ஆசி கூறுவது போல் செய்துவிட்டு மறைந்துவிட்டார்கள்.இனி இன் நாட்டுக்கும் நம் குடுபத்திற்கு ஏதோ நல்லது நடக்கப் போவதாகவே எனக்குத் தோன்றுகிறது மருமகனே.... என்றார் பெரிய மன்னர் மிகுந்த மகிழ்ச்சியுடன்.அவர் முகமெங்கும் சந்தோஷம் தெரிந்தது.

அங்கிருந்த அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி பரவியது.

இதுதான் தக்க சமயமென்று கருதிய குதிரைவீரன்..மாமா அவர்களே நானும் அபரஞ்சிதாவை மணந்ததன் மூலம் அரசனாகிவிட்டேன் இன்னாட்டுக்கு.எனவே நானும் இக்குடும்பத்தில் ஒருவனாகிவிட்டேன் இல்லையா மாமா?

அதிலென்ன சந்தேகம்..நீங்கள் என் மகளின் கணவர்.. இன்னாட்டு மன்னர்.இக்குடும்பத்தில் முக்கியமானவர். அப்படியிருக்க இதில் உங்களுக்கென்ன சந்தேகம்..?

நன்றி..மாமா அவர்களே...அப்படியாயின் இவ்வரச குடும்பத்து முன்னோர்கள் அதாவது இன்னாட்டின் அரியணையில் அமர்ந்து கோலோச்சியவர்களின் உருவ ஓவியங்கள் இருக்குமல்லவா?அவர்களின் ஓவியங்களைக் காணவும் அவ்வோவியங்களின் முன் நின்று ஆசி பெறவும் விரும்புகிறேன் மாமா என்றான்.

மிகச் சரியாகச் சொன்னீர்கள் மருமகனே..வாருங்கள் கொலு மண்டபம் செல்லலாம்.அங்குதான் உள்ளன இன்னாட்டு மாமன்னர்களின் ஓவியங்கள்..அங்கு செல்லலாம் வாருங்கள் என்றபடியே கிளம்பினார் பெரியமன்னர்.

பரபரப்பு தொற்றிக்கொண்டது குதிரைவீரனை.ஆர்ப்பரித்த உள்ளத்தை அடக்கினான் அமைதி அமைதி என்று சொல்லி.வெகு ஆவலோடு பெரிய மன்னரைத் தொடர்ந்தான்.கொலு மண்டபத்தில் கால் வைத்தான் மிகுந்த நபிக்கையோடு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.