(Reading time: 17 - 34 minutes)

வ்வூரில் இருக்கும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் சிறிது பணம் கிடைக்கும். அதை வைத்து தங்கையை படிக்க வைத்தான். காய்கறி வாங்கி வருவது, வீட்டை சுத்தம் செய்வது, மார்க்கெட்டிற்கு சென்று காய்கறி மூட்டைகளை குடோனில் அடுக்கி வைப்பது என அவன் வாழ்கையை நகர்த்திக் கொண்டிருந்தான். இரவில் இருவரும் சேர்ந்து உண்ணும் பொழுது பெற்றோரின் ஞாபகம் அதிகமாய் வரும். அதை வெளிக்காட்டாமல் சாப்பிடுவான். இன்றும் பழைய நினைவுகளோடு தங்கையுடன் உண்டு கொண்டிருந்தான்.

ரோந்து முடித்த ராணுவ ஜீப்புகள்  வரிசையாக அவர்களைக் கடந்து சென்றன. சாப்பிடுவதை நிறுத்திவிட்டு ஜீப்புகள் செல்வதை சிறிது நேரம் பார்த்தான். அதில் ஒரு ஜீப் நின்றது. ஒரு ராணுவ வீரன் இறங்கி வந்தான் . அவர்கள் இருவரும் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு தங்களை நோக்கி வரும் ராணுவ வீரனை மிரட்சியோடு பார்த்தனர். அவர்கள் அருகே வந்த ராணுவ வீரன் இருவரையும் நோக்கினான். பஹீரா தன் அண்ணனின் அருகே சென்று அவன் தோள்பட்டையை பிடித்துக்கொண்டாள்.

"பயப்படாதிங்க" என்ற ராணுவ வீரன் தன்னிடம் இருந்த உணவு பொட்டலத்தை அவர்களிடம் கொடுத்தான். ஹகீம் அந்த ராணுவ வீரனை முறைத்தான். அந்த ராணுவ வீரன் அவர்கள் முன் உணவுப்பொட்டலத்தை வைத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டான். சில அடிகள் தான் எடுத்து வைத்திருப்பான் ராணுவ வீரன்.கொடுத்த உணவுப்பொட்டலத்தை எடுத்து தெருவினில் வீசி எறிந்தான் ஹகீம். ராணுவ வீரனின் மனம் புண்பட்டது. தான் வந்த ஜீப்பில் ஏறி சென்றான். "எதற்காக நீ இவ்வாறு செய்கிறாய்?" என சக வீரர்கள் அவனைக் கடிந்து கொண்டனர். பஹீரா மீண்டும் தன் பழைய இடத்தில்  அமர்ந்து உணவை புசித்தாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

ஜான்சியின் "அமிழ்தினும் இனியவள் அவள்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

எதற்காக ஹகீம் ராணுவ வீரன் கொடுத்த உணவை வீசி எறிந்தான்? அதற்கான காரணம் என்ன? வாருங்கள், சில மாதங்கள் பின்னோக்கி சென்று பார்த்து வருவோம்.

ஹகீம் படிப்பில் கில்லாடி. எப்பொழுதும் வகுப்பில் முதல் மதிப்பெண் வாங்குவான். பெரிய மருத்துவராக வேண்டும் என்பது அவனுடைய ஆசை. அன்று பரிட்சை முடிவுகள் வந்தன. வழக்கம் போல ஹகீம் தான் முதல் மதிப்பெண். அந்த நற்செய்தியை தன் பெற்றோருக்கு தெரிவிக்க மதிய உணவு இடைவேளையில், இரண்டாம் வகுப்பு படிக்கும் தன் தங்கையை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு ஓடி வந்தான்.

வீடு பூட்டப்பட்டிருந்தது  அக்கம் பக்கத்தில் சென்று விசாரித்தான். திடீரென அவன் வீட்டின் முன் நான்கு சக்கர வாகனம் ஒன்று வந்து நின்றது. அதில் இருந்து துப்பாக்கி குண்டுகளால் சாகடிக்கப்பட்ட இரண்டு பிணங்கள் இறக்கி வைக்கப்பட்டன. ஹகீமிற்கு ஒன்றும் புரியவில்லை. பிணங்களின் முகங்களை மூடி இருந்த துணிகளை விலக்கினான். அதிர்ந்தான், பயந்தான், அவன் நெஞ்சு படபடத்தது. காலையில் உயிரோடு பார்த்த பெற்றோர் திடீரென பிணங்களாய் மாறினால் என்ன செய்வது?

தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் ஹகீமின் தாய் தந்தையர் பரிதாபமாக இறந்து போயினர். அவர்களை சுட்ட அமெரிக்க ராணுவ வீரன் மிகுந்த சோகத்தோடு ஹகீமையும் பஹீராவையும் பார்த்தான். பின்பு அங்கிருந்து புறபட்டான்.

அந்த ராணுவ வீரன் வேண்டுமென்றே அவர்களை சுடவில்லை . எதிர்பாராவிதமாக நடைபெற்று விட்டது. அவனால் அதைத் தாங்கமுடியவில்லை. மிகுந்த துயருற்றான். இனி, அந்த இளம் தளிர்களின் கதி என்ன என்று அவன் வேதனை அடைந்தான்.

பெற்றோருக்கு ஈமச்சடங்கு முடிந்ததும் ஹகீமிற்கு மேற்கொண்டு என்ன செய்வது என்றே தெரியவில்லை. பஹீரா வேதனையோடு தன் அண்ணனின் மடியில் படுத்துக் கொண்டிருந்தாள். இனி, உணவுக்கு என்ன செய்வது என்று யோசித்தான். படிப்பை நிறுத்திவிடலாம் என்று முடிவு செய்து வேலைக்கு சென்றான். பஹீராவை படிக்க வைத்தான். தன் தாய் தந்தையரைக் கொன்ற அமெரிக்கர்களை பழி வாங்கவேண்டும் என்று தீர்மானித்தான்.

அவர்களை எப்படி பழி வாங்குவது என்ற வழி தெரியவில்லை. அப்பொழுது தான் தீவிரவாதி ஒருவனின் தொடர்பு அவனுக்குக் கிடைத்தது. ஹகீமின் வறுமையையும் அமெரிக்கர்களின் மேல் இருக்கும் கோபத்தையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி சில வேலைகளை செய்யுமாறு சொன்னான். அமெரிக்கன் யாராவது தனியாக இருந்தால் உடனே தங்களுக்குத்  தெரியப்படுத்துமாறு சொன்னான். ஏற்கனவே அமெரிக்கர்களால் பெற்றோரை இழந்தவன் வேறு என்ன சொல்லுவான்? உடனே சம்மதித்தான் . இன்று தீவிரவாதிகளால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட அமெரிக்க பத்திரிக்கையாளனைக்  காட்டிக்கொடுத்தது ஹகீம் தான். அவன் செய்த வேலைக்கு தீவிரவாதிகள் பணம் கொடுத்தனர். அதில் தன் தங்கையின் படிப்புக்கு சிறிது சேமித்து வைத்தான்.

பழைய நினைவுகளில் அகப்பட்டிருந்த ஹகீமை,  "டேய் ஹகீம் இங்க வாடா" என்று ஒரு குரல் அழைத்தது. தன் தங்கையை அழைத்துக்கொண்டு குரல் வந்த திசையை நோக்கிச் சென்றான் ஹகீம்.

"அமேலியாவுக்கு திருமண ஏற்பாடு செஞ்சிருக்கோம். வந்து வேலைய பாக்காம என்ன செஞ்சிட்டு இருக்க. போய் வேலைய பாரு" என்றார் அமேலியாவின் தந்தை முகமது யூசுப்.

தன் தங்கையிடம் எங்கேயும் செல்லாதே என்று கூறிவிட்டு வேலைகளைப் பார்க்க துவங்கினான் ஹகீம். வீடே கலகலப்பாக இருந்தது. பஹீரா வீட்டினுள் சென்று அமேலியாவைத் தேடினாள். "பஹீரா செல்லம் யார தேடுது?" என்றார் அமேலியாவின் தாய்.

"அக்கா எங்க?"

" அக்கா அந்த அறைக்குள்ள தான் அலங்காரம் பண்ணிட்டு இருப்பா. போய் பாரு" .

பஹீரா அமேலியாவின் அறைக்கு சென்று சாத்தியிருந்த கதவை மெதுவாக திறந்து உள்ளே நுழைந்தாள், உள்ளே நுழைந்ததும் அவளது விழிகள் மிரட்சியோடு அமேலியாவை நோக்கின.

அங்கே ! கண்ணீர் வழியும் விழிகளோடு தூக்குக்கயிற்றின் சுருக்கிற்கு நடுவில் அமேலியாவின் முகம்...

தொடரும்...

Episode # 01

Episode # 03

{kunena_discuss:983}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.