(Reading time: 10 - 20 minutes)

வன் இன்னும் கிளம்பலையா?...” என்ற சத்தம் கேட்டு மூவரும் நிமிர்ந்து பார்க்க, அங்கே கையில் கரண்டியோடு நின்றிருந்தார் அவனின் அம்மா வாசந்தி…

“எங்கம்மா கடல் கிளம்புறது?... இவன் என் பொண்ணுகிட்ட கொஞ்சிகிட்டுல்ல இருக்குறான்….” என சரயூ வாசந்தியிடம் எடுத்து சொன்னதும்,

“உனக்கு சைட்க்கு நேரம் ஆகலையாடா?... கிளம்புடா முதலில்…” என கரண்டியை ஓங்க,

“சைட்டா?... அப்படின்னா என்ன மாமா?...” என தன் குட்டிக்கண்களை உருட்டிக் கேட்டாள் பிரேமி…

“அதுவாடா… குட்டி… சைட்டுன்னா….” என இழுத்து சொல்ல ஆரம்பித்தவனின் காதை திருகி,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

உஷாவின் "புதிர் போடும் நெஞ்சம்..." - காதல், நகைச்சுவை கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

“நீ என்ன சொல்ல வரேன்னு எனக்கு தெரியும்டா என் அருமை தம்பி…. முதலில் கிளம்பு… போ…” என அவனை விரட்ட,

“ஹாஹா…. செம சிஸ்… என்னை நல்லா தெரிஞ்சு வச்சிருக்கீங்க….” என அவனும் சிரித்துக்கொண்டே அங்கிருந்து சென்றான்…

அவன் குளித்து முடித்து தயாராகி வந்ததும், “ஹாய்… மாமா… குட் மார்னிங்க்….” என்றபடி அவனின் அருகே வந்து அமர்ந்தாள் பூஜிதா…

“ஹேய்… பூஜா… என்ன எழுந்தாச்சா?...” என்றபடி அவளுக்கு இரண்டு இட்லி எடுத்து அவளின் தட்டில் அவன் வைக்க, அவள் அதை சாப்பிடாமல் அவனை பார்த்தாள்…

“என்ன பூஜா?... சாப்பிடலையா?...”

“…………….”

“ஹேய்…. என்னாச்சு?...” என்றதும், “உங்கூட நான் சண்டை… பேசமாட்டேன் மாமா…” என்றாள் அவள் கோபமாக…

அந்த நேரம் அங்கு வந்த சரயூ, “ஹேய்… ஏண்டி, என் தம்பிகூட பேசமாட்ட… அவன் என்ன பண்ணினான்?..” என சற்றே கோபமாக அவளும் மகளிடம் கேட்க

“நீங்க சும்மா இருங்கம்மா… உங்களுக்கு தெரியாது…” என்றாள் அவள்…

“சரி… எனக்கு தெரியாது… நீயே சொல்லேன்…” என அவளும் விடாது கேட்க,

“உங்க தம்பி சரியான கேடி… காலையில நானும், பிரேமியும் தூங்கிட்டிருந்தோம்… மாமா பூனை மாதிரி வந்து அவளை மட்டும் தூக்கிட்டு போய் கொஞ்சிட்டிருக்குறார்… என்னை கண்டுக்கவே இல்லை…” என ஏழு வயதாக போகும் பூஜிதா சொல்ல,

“அய்யோ… என் பூஜாக்குட்டி…” என்றபடி அவளை தூக்கி கீழே நிற்க வைத்து அவளின் முன் மண்டியிட்டவன், “மாமா மேல கோபமா?...” என்று கேட்க, அவள் பதில் பேசவில்லை…

“சொல்லு பூஜா… கோபமா?...” எனக் கேட்க, அவள் ஆம் என்றாள்…

“சரி… கோபத்தோடு மாமாக்கு ஒரு முத்தம் கொடு பார்ப்போம்…” என அவன் கேட்க, பட்டென்று அவன் கன்னத்தில் இதழ் பதித்தாள் அவள்…

“பார்த்தீயா… என் பூஜாக்குட்டி… சமத்து… எங்கிட்ட சண்டை எல்லாம் போடமாட்டா…” எனவும், அவளும், “ஆமா மாமா… உங்கிட்ட சண்டை எல்லாம் போட மாட்டேன்…” என அவனைக் கட்டிக்கொள்ள,

“டேய்… போதும்டா… என்னால முடியலை….” என்றாள் சரயூ புன்னகை மாறாத வண்ணம்…

“உங்களுக்கு பொறாமை சிஸ்…” என்றபடி அவன் சிரிக்க,

“ஆமா… ஆமா… டேய்… போடா….” என்றாள் அவளும்….

“ஆளாளுக்கு சிரிச்சது போதும்… உனக்கு சாப்பாடு வேண்டாமாடா...” என வாசந்தி அவனைப் பார்த்து கேட்டதும்,  

“அம்மா, நான் என்னைக்கும்மா சாப்பாடு வேண்டாம்னு சொன்னேன்… கொஞ்சம் ரொமான்ஸ் பண்ணிட்டிருந்தேன்…. அதுக்குள்ள இப்படி நீங்களா முடிவு பண்ணாதீங்கம்மா…” என அவன் இட்லியை சாப்பிட்டுக்கொண்டே சொல்ல,

“அதுதானே பார்த்தேன்… நீயாவது சாப்பிடாம இருக்குறதாவது….” என்றாள் சரயூ அவனை கிண்டலித்தபடி…

“ஹாஹா.. சிஸ்… இல்லையா பின்ன?... நமக்கு சோறுதான முக்கியம்…” என்றவன், “அப்படியே உங்களைப் போல சிஸ்….” என அவனும் அவளை கலாய்க்க,

“போடா… போடா…” என்றாள் சரயூ அவனுக்கு பரிமாறிக்கொண்டே…

“ஓ.கே… குட்டீஸ்… மாமா இப்போ போயிட்டு மதியம் வந்துடுவேன்… அதுவரை சண்டை போடாம சமத்தா இருக்கணும்… ஓகேயா?...” என்று கேட்க, பூஜிதாவும், பிரேமிதாவும், சரி என தலைஅசைத்தனர்…

“வெரி குட்…” என்றபடி அவர்களுக்கு டாட்டா சொல்லிவிட்டு சரயூவிடமும், வாசந்தியிடமும் சொல்லிவிட்டு அவன் ஓரடி எடுத்து வைக்கையில்,

“பார்த்து போயிட்டுவாடா கடல்…” என்றாள் சரயூ…

“ஏண்டி… அதான் அவனுக்கு வேற ஒரு பேர் வச்சீல்ல… அத சொல்லி கூப்பிடு… இல்ல அர்னவ் ன்னு சொல்லு… அதை விட்டுட்டு இன்னும் கடல்ன்னே சொல்லிட்டிருக்குற?...” என வாசந்தி குறைபட,

“அப்படி சொல்லுங்கம்மா….” என்றான் அவன்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.