(Reading time: 10 - 20 minutes)

ன்னடா டேய் சொல்லணும் உனக்கு… பேரை பாரு அர்னவ் –ன்னு…… எப்படிடா இதை ஷாட்டா கூப்பிட முடியும்?... அதான் கடல்னு சொல்லிட்டிருக்கேன் சின்னபிள்ளையில இருந்து…”

“சிஸ்… இதெல்லாம் ஓவரா இல்லையா உங்களுக்கே…. அர்னவ்-ன்னு பேர் சொல்ல கசக்குமாம்… ஆனா அந்த பேரோட அர்த்தம் சொல்லி கூப்பிடுவாங்களாம்…” என அவன் சொல்ல

“அதுதானே… அவன் பேருக்கு அர்த்தம் கடல் தான்… அத சொல்லி கூப்பிட தெரிஞ்ச உனக்கு அர்னவ் சொல்ல முடியாதா?...” என வாசந்தியும் அவனுக்கு ஆதரவாக பேச,

“சரி சரி… உங்க பையனுக்கு ஓவரா சப்போர்ட் செய்யாதீங்க… அதான் அவனுக்கு இன்னொரு பேர் வச்சாச்சே… இன்னும் என்ன?...” என்றாள் சரயூவும்…

“அத சொல்லி நீ கூப்பிடுற மாதிரியே தெரியலையே… கொஞ்சமும்…” என வாசந்தி சொல்ல,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...

படிக்க தவறாதீர்கள்...

“அடடா… அம்மா விடுங்க… சரயூன்னா நதின்னு அர்த்தம்… அர்னவ்ன்னா கடல்ன்னு அர்த்தம்… இப்படி எங்களுக்கு ஒரே தண்ணீர் சம்பந்தமா வச்சிருக்கீங்களேன்னு சிஸ் கேட்டதுக்கு வேணும்னா உன் தம்பிக்கு நீ வேற பேரு வச்சிக்கோன்னு நீங்க தான சொன்னீங்க… இப்போ என்னம்மா?... சிஸ் என்ன பேரு சொல்லி கூப்பிட்டா என்ன?... விடுங்க….” என்று தமக்கைக்கு ஆதரவாக பேசினான் அர்னவ்…

“அதுதான.. அவளை எவ்வளவுதான் கலாய்ச்சாலும் விட்டு மட்டும் கொடுக்க மாட்டீயே நீ… நல்ல புள்ளைடா நீ…” என்ற வாசந்தி சிரித்துக்கொண்டே அங்கிருந்து அகன்றதும்,

“ஓகே… சிஸ்… குட்டீஸ்கிட்ட சொன்னேன் இரண்டு பேரும் சண்டை போடாம சமத்தா இருக்கணும்னு…. இப்போ அதை உங்ககிட்டயும் சொல்லுறேன்… அம்மாவும் நீங்களும் சண்டை போடாம இருங்க சரியா?...” என அவன் சொன்னதும்,

“சொல்லிக்கோ… போடா….” என அவளும் சிரிக்க,

தமக்கையை ஒரு நிமிடம் நின்று நிதானமாக பார்த்தவன், “ஓகே… சிஸ்… கிளம்புறேன்…” எனவும்,

“பைபை டா…” என்றாள் சரயூ…

“பை சிஸ்…” என்றபடி அவனும் சென்றுவிட, “சரயூ….” என்றபடி உள்ளிருந்து குரல் கொடுத்தார் வாசந்தி…

“என்னம்மா?... சொல்லும்மா?...” எனக் கேட்டுக்கொண்டே சரயூவும் செல்ல,

“என்னம்மா நான் புதுசா சொல்லிடப்போறேன்…” என அவர் ஆரம்பித்ததும்,

“அம்மா… ப்ளீஸ்… பொண்ணா பொறந்த நாம தான் பொறுத்து போகணும்… அதான சொல்லப்போற?... பொறுத்துகிட்டு தான் போறேன் அம்மா… போதுமா???… விட்டுட்டுங்க…” என்றபடி வாசந்தியிடம் சொல்லிவிட்டு வேகமாக அவள் அகன்றதும், அவள் கையிலிருந்த செல்போன் சிணுங்கியது…

யார் என்று பார்த்தவள் சிரித்துக்கொண்டே, “ஹாய்… என்ன அதிசயம்… எனக்கு நீ போன் பண்ணியிருக்குற?...”

“சும்மாதான் அக்கா…” என எதிர்முனையிலிருந்து பதில் வர,

“சரிடா… சொல்லு… என்ன பண்ணுற?...”

“ஆஃபீஸ் போயிட்டு இருக்குறேன் அக்கா… நீங்க என்ன பண்ணுறீங்க?... குட்டீஸ் என்ன பண்ணுறாங்க?..”

“அவங்க விளையாடிட்டு இருக்குறாங்க… சமையல் இப்போதான் முடிச்சேன்… நீ போன் பண்ணிட்ட….”

“ஓ… சரிக்கா… சாப்பிடீங்களா?...”

“இல்லடா… இனிதான்… நீ சாப்பிட்டியா?...”

“யெஸ்க்கா… சாப்பிட்டேன்…”  

“அப்புறம் வேறென்ன?..”

“ஹ்ம்ம்… நீங்கதான் அக்கா சொல்லணும்…” என்றதும், சரயூவிற்கு கோபம் வந்துவிட்டது…

“ஹ்ம்ம்மாவே சொல்லு… உனக்கு வேற எதுவுமே தெரியாதா?...”

“ஹ்ம்ம்ம்ம்…. தெரியுமே….” என இப்போதும் ஹ்ம்ம்ம் வர,

“அடியே… ஏண்டி… காலங்கார்த்தால இம்சை பண்ணுற?... இருடி… என் தம்பிகிட்ட சொல்லி கொடுக்குறேன்… வரட்டும் அவன்…”

“இதோடா… சொல்லிக்கொடுங்க… எனக்கென்ன பயமா?... போங்க… போங்க… போய் சொல்லுங்க….” என பதில் வரவும்,

“இருடி… இப்பவே கான்பரென்ஸ் கால் போடுறேன்….” என காதிலிருந்து போனை எடுத்தவள், அப்படியே சிலையாக நின்றாக சில நொடிகள்…

“ஹலோ… அக்கா… இருக்கீங்களா?... ஹலோ…” என அந்தப்பக்கம் சத்தம் வந்துகொண்டே இருக்க, இங்கே சரயூவிடம் சத்தமே இல்லை…

சில நொடிகளுக்குப் பின் சுதாரித்தவள், “நான் அப்புறம் பேசுறேன்… நீ வச்சிடு…” என்ற சரயூவின் குரலில் புரிந்து கொண்டு,

“சரிக்கா… டேக் கேர்… பை…” என அங்கிருந்து பதில் வரவும்,

“ஓகேடா… வச்சிடு…. பை…” என்றவள் அழைப்பு துண்டிக்கப்பட்டு விட்டதா என உறுதிபடுத்திவிட்டு, தனது போனில் மின்னிக்கொண்டிருந்த பெயரை பார்த்தவள் சட்டென்று அதை அட்டெண்ட் செய்ய, எதிர்முனையில் இருந்து வந்த கேள்வியில் அப்படியே நின்றாள் அவள்…

தொடரும்

Episode # 02

{kunena_discuss:995}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.