(Reading time: 29 - 58 minutes)

கோவிலுக்கு போய்விட்டு வந்த அலுப்பில் எப்பாதையும் விட தாமதமாக தான் முழிப்பு வந்தது மதிக்கு... அறையை விட்டு வெளியே வந்து பார்த்தால் யுக்தாவும் எழுந்ததற்கான அறிகுறியே இல்லை.. அவளுக்கும் கலைப்பாகத் தானே இருக்கும்... எப்போதும் சீக்கிரம் எழுந்து வேலைப் பார்க்கும் மருமகள் இன்றைக்கு தான் தூங்கட்டுமே என்று நினைத்த மதி தானே வேலைகளை செய்துக் கொண்டிருந்தாள்...

அவள் எழுந்து வந்து ஒரு மணி நேரமாகியும் யுக்தா எழுந்து வராதிருக்கவே... உடம்பு ஏதாவது சரியில்லையோ என்று பார்க்கச் சென்றாள் மதி... அவர்களது அறைக்கதவு சாத்தியிருந்தது... தட்டலாமா என்று யோசித்து கை வைத்தால் கதவு தாழ் போடாமல் சும்மாவே மூடியிருக்க... உள்ளே பார்த்தால் பிருத்வி மட்டும் உறங்கிக் கொண்டிருந்தான்...

யுக்தா அறையில் இல்லை... சரி பாத்ரூமில் இருக்கிறாளா என்று பார்த்தால் பாத்ரூம் கதவு வெளிப்பக்கம் தாழிடப்பட்டிருந்தது... இருந்தாலும் அதை திறந்துக் கொண்டு உள்ளே பார்த்தாள்... யுக்தா அங்கும் இல்லை... காலையில் வெளியே எங்காவது போயிருப்பாளா..?? என்ற சிந்தனையோடு ரூமை பார்க்க அங்கே கம்ப்யூட்டர் இருக்கும் டேபிளில் ஒரு கடிதம்...

அது ஏதாவது சாதாரணமான காகிதமா இருக்கனும்... வேறு எதுவும் தப்பாக இருக்கக் கூடாது என்று எல்லா கடவுளையும் வேண்டிக் கொண்டு மதி அதை எடுக்க... அது யுக்தாவின் கடிதம்... அதை படித்து அதிர்ந்த மதி பிருத்வியை தட்டி எழுப்பினாள்...

"பிருத்வி எழுந்திரிடா... என்னடா இது.. எழுந்திரு..." என்று அவனை எழுப்ப பிருத்வி பதட்டமாக எழுந்தான்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

VJ Gன் "அனு என் அனுராதா..." - காதல் கலந்த குடும்ப தொடர்

படிக்க தவறாதீர்கள்...

"என்னடா இதெல்லாம்... உங்களுக்குள்ள எல்லாம் சரியாயிடுச்சுன்னு சந்தோஷப்பட்டேனே... இப்போ என்னடா ஆச்சு... எல்லாம் சரியாயிடும்னு உங்க மேல கவனம் இல்லாம இருந்துட்டேனே..." என்று அந்த கடிதத்தை பிருத்வியிடம் காண்பிக்க அதில் யுக்தாவின் அழகான கையெழுத்தில் அதிர்ச்சியான விஷயம் எழுதியிருந்தது...

அன்புள்ள பிருத்விக்கு,

அன்பு

அந்த அன்பு உங்கக்கிட்ட இருந்து எனக்கு கிடைக்கலைன்னா கூட பரவாயில்ல பிருத்வி... ஆனால் உங்க கோபத்தையும் வெறுப்பையும் என்னால தாங்கிக்கவே முடியல...

உங்க பக்கத்துல இருந்து தினம் உங்களை நான் கோபப்படுத்திக்கிட்டு இருக்கேன்னு நினைக்கும் போது ரொம்ப கஷ்டமாக இருக்கு பிருத்வி... அதுவும் உங்களை அறியாமலேயே என்னை தப்பா பேசற அளவுக்கு...

வேண்டாம் பிருத்வி இதுக்கும் மேலேயும் இதை நீட்டிக்க வேண்டாம்னு நினைக்கிறேன்.. அதனால நான் இந்த வீட்டில் இருந்து கிளம்பி போகிறேன்...

ஏன் யார்க்கிட்டேயும் சொல்லாமல் கிளம்பி போகனும்னு நீங்க நினைக்கலாம்... எல்லாருக்கும் இது தெரிய வரும் போது நம்ம ரெண்டுப்பேரையும் சமாதானப்படுத்த தான் நினைப்பாங்க...

கட்டாயத்தின் பேரில் வாழும் வாழ்க்கையில் சமாதானம் கூட கட்டாயம் ஆகிவிடும்... அதனால் தான் பிருத்வி யார்க்கிட்டேயும் சொல்லாமல் போகிறேன்... அதுமட்டுமல்ல கொஞ்ச நாள் நான் தனியாக இருக்கனும்னு நினைக்கிறேன்...

இது நம்ம ரெண்டுப்பேருக்கும் அடுத்து நம்ம வாழ்க்கையில் என்ன முடுவு எடுக்க வேண்டும் என்பதற்கான அவகாசமாக இருக்கட்டும்...  ஆனால் பிருத்வி இதனால் உங்க மேல எனக்கு கோபமெல்லாம் இல்லை... இந்த பிரிவு இப்போதைக்கு நமக்கு வேண்டும் என்று நான் நினைக்கிறேன் அவ்வளவு தான்...

அத்தை, மாமா, பிரணதி நீங்க எல்லோரும் என்னை மன்னிக்கனும்.. உங்க கிட்ட சொல்லாமல் சென்றதற்காக... இந்த வீட்டை விட்டு கொஞ்ச நாள் விலகி இருக்கனும்னு நினைக்கிறேன்... மத்தப்படி தவறான எந்த முடிவுக்கும் நான் போகமாட்டேன்... யாரும் பயப்பட வேண்டாம்...

மீண்டும் ஒருமுறை உங்க எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்..

                                                இப்படிக்கு,

                                                  சம்யுக்தா.

படித்த பிருத்வி உறைந்து போயிருந்தான்... யுக்தா அழுதுக் கொண்டு வெளியில் போன போது தான் பேசியது எவ்வளவு தவறு என்பதை உணர்ந்திருந்தான் பிருத்வி... அதற்காக மன்னிப்பும் கேட்க வேண்டும் என்று நினைத்தான்...

வெளியே சென்றவள் அறைக்குள் வரட்டும் என்று காத்திருந்தான்... அப்படியே பயணம் சென்று வந்த களைப்பில் தூக்கம் அவனை ஆட்கொண்டது... அவனையும் அறியாமல் உறங்கிவிட்டான்... ஆனால் அவன் எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டான் என்பது புரிந்தது... ஆனால் இவ்வளவு தாமதமாக புரிந்து என்ன செய்வது... யுக்தா இப்போது அவன் அருகில் இல்லையே...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.