(Reading time: 29 - 58 minutes)

திருச்சியிலிருந்து பக்கத்தில் உள்ள கிராமத்துக்கு சென்றுக் கொண்டிருந்த பஸ்ஸில் போய்க் கொண்டிருந்தாள் சங்கவி... அது தேவாவின் தாத்தா பாட்டி ஊர், அவர்களது சொந்த ஊரை விட்டு வரமாட்டோம் என்று அந்த ஊரிலேயே அவர்கள் இருக்கிறார்கள்... கொஞ்ச நாட்களாக தாத்தாவிற்கு உடம்பு சரியில்லை என்று தேவா அவர்களை அடிக்கடி பார்த்துவிட்டு வருகிறான்...

இப்போது கவிக்கு பெங்களூரில் இருந்து சென்னைக்கு  வேலை மாற்றம் கிடைத்து... பெங்களூரில் இருந்து சென்னை வருவதற்கு முன் தாத்தா பாட்டியை பார்த்துவிட்டு அப்படியே மதுரைக்கு சென்று தன் அன்னை சாவித்திரியை அழைத்துக் கொண்டு சென்னை வருவதாக முடிவெடுத்து தான் கிளம்பினாள் கவி...

பஸ் பயணத்தில் அவள் நினைவு முழுவதும் சம்யூவைப் பற்றித்தான்.... சம்யூவின் மெயில் வந்ததும் தானாகவே சந்தோஷம் வந்தது கவிக்கு... இப்போதாவது தன்க்கு ஒரு மெயிலாவது அனுப்பவேண்டும் என்று அவளுக்கு தோன்றியிருக்கிறதே என்று சந்தோஷத்தோடு மெயிலைப் பார்த்த கவிக்கு அதிர்ச்சிதான்... என்ன நடந்ததுன்னு இவ இப்படி யாருக்கும் தெரியாம போயிருக்கா... எங்க போயிருக்கா.. ஒருவேளை நான் அவளுடன் சுமூகமாக இருந்திருந்தால் என்னிடம் கண்டிப்பாக வந்திருப்பாள்...

அவள் மேல் உள்ள கோபத்தில் அவளோடு பேசாமலே இருந்து தவறு செய்துவிட்டேனே... என்று வருந்தினாள் கவி... இப்போது சம்யூ எங்க இருக்காளோன்னு வேற கவலை வந்தது... சம்யூ காணவில்லை என்ற உடனே சித்தியும் சித்தப்பாவும் இவளை தான் தொடர்புக் கொண்டார்கள்... யுக்தா எதுவா இருந்தாலும் உன்னை தொடர்புக் கொண்டிருப்பாள் என்று நினைத்தோம்... என்று அவர்கள் சொன்ன போது இவளை நினைத்து இவளுக்கே ஆத்திரமாக வந்தது...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தங்கமணி சுவாமினாதனின் "கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது..." - பெரியவர்களுக்கான மந்திர, மாயாஜாலங்கள் நிறைந்த வரலாற்று கதை...

படிக்க தவறாதீர்கள்... 

சம்யூ பற்றி தெரிந்துகொள்ள உடனே சென்னைக்கு வந்தாள் கவி... பிருத்வி வீட்டில் நடந்ததை சொன்னபோது பிருத்வியின் மேல் கோபமாக வந்தது கவிக்கு... ஆனால் சம்யூ மெயிலில் யார்மீதும் கோபப்பட வேண்டாம் என்று குறிப்பிட்டு இருந்ததும்... தன் அம்மாவும் சித்தியும் கோபப்படாமல் பேசு என்று சொல்லி அனுப்பியதாலும் அமைதியாக பேசிவிட்டு வந்தாள்...

பின் தேவா உதவியோடு சம்யூவின் இந்திய நண்பர்களை தொடர்புகொள்ள முயற்சித்தாள்.. தன் சித்தப்பா சித்தியை இப்போது வரவேண்டாம் சம்யூ பற்றி தகவல் தெரிந்ததும் வாருங்கள் என்றும் கூறிவிட்டாள்... பெங்களூரில் இருந்து சென்னைக்கு வேலை மாற்றத்திற்கும் முய்ற்சித்தாள்....

ஆனால் உடனே வேலை மாற்றம் கிடைக்கவில்லை... அதற்கே இரண்டு மாதம் ஆனது.. இப்போது வேலை மாற்றத்துடன் சில நாட்கள் விடுமுறையும் எடுத்துக் கொண்டு வந்திருக்கிறாள்... இப்போது தேவா கிராமத்தில் இருப்பதால் தாத்தா பாட்டியை பார்த்துவிட்டு... பின் அம்மாவை கூட்டிக் கொண்டு சென்னை வந்ததும் சம்யூவை தீவிரமாக தேட வேண்டும் என்று முடிவோடு இருக்கிறாள்... ஆனால் கிராமத்தில் அவளுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது என்பது தெரியாமல் அங்கு சென்றுக் கொண்டிருக்கிறாள்.

கம்பெனியிலிருந்து வீட்டிற்கு வந்தான் பிருத்வி... பொதுவாக வீட்டிற்கு வந்ததும் ஹாலில் தன் குடும்பத்தாரோடு பேசிவிட்டு தன் அறைக்கு செல்வது தான் பிருத்வியின் வழக்கம்... யுக்தா இருந்த போதும் அப்படித்தான்... ஆரம்பத்தில் அவள் தான் ஒதுங்கியிருப்பாள்... பின் இவர்கள் சேர்ந்து வாழ ஆரம்பித்த பின் யுக்தாவும் இவர்களோடு இருப்பாள்...

ஆனால் இப்போது யாரும் அப்படி இருப்பதில்லை... அப்படியே ஹாலில் எல்லோரும் இருந்தாலும் அவன் வீட்டிற்கு வந்தால்... அவன் அறைக்கு போய்விடுவான்... இப்போதும் அப்படிதான் அவன் அறைக்கு போகப் போன போது மதி தடுத்தார்...

வரூனின் அம்மா அப்பா வந்து பேசியதையும்.. நிச்சயதார்த்தம் நடத்த போவதாக முடிவெடுத்ததையும்... யுக்தா இல்லாமல் இதை நடத்த சங்கடமாக இருந்தாலும் வரூனின் அம்மாவுக்காக இதை ஒத்துக் கொண்டோம் என்றும்... இதில் உனக்கு எதுவும் ஆட்சபனையில்லையே என்றும் மதி கேட்டாள்...

பிருத்வி அதற்கு பதில் சொல்வதற்கு முன் செந்தில் கோபமாக பேசினார்... யுக்தா இருப்பதை பற்றியும் இல்லாததை பற்றியும் இவனுக்கு என்ன கவலை இருக்கப் போகிறது என்று இவனிடம் இதை சொல்லிக் கொண்டிருக்கிறாய்... நம் மகள் அந்த வரூனை விரும்பிவிட்டதால் இந்த நிச்சயதார்த்தத்தை நாம் நடத்தி தான் ஆக வேண்டும்... அதனால் அவர்களிடம் நான் சம்மதம் என்று சொல்லப் போகிறேன்... என்று பேசிவிட்டு போய்விட்டார்...

எனக்கும் இதில் சம்மதம் தான் என்று பிருத்வியும் அவன் அறைக்கு போய்விட்டான்... மதிக்கும் பிரணதிக்கும் செந்திலின் கோபத்தில் பிருத்வி காயப்படிருக்கிறான் என்று புரிந்தாலும்.. ஒன்றும் பேச முடியாமல் அமைதியாக இருந்தனர்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.