(Reading time: 29 - 58 minutes)

ன் அண்ணிப் பற்றி எந்த தகவலும் தெரியாததால் வருத்த்தோடும்... குற்ற உணர்ச்சியிலும் இந்த இரண்டு மாதமாக தவித்துக் கொண்டிருக்கிறாள் பிரணதி... இப்போது கூட யுக்தா பற்றி சிந்தித்துக் கொண்டிருந்த போது தான் வரூனிடம் இருந்து பிரணதிக்கு போன் வந்தது... அதில் அவன் சொன்ன விஷயத்தைக் கேட்டு அதிர்ந்தவள்... "நீங்க இப்படி செய்வீங்கன்னு நான் எதிர்பார்க்கல வரூன்..." என்றாள்.

"என்ன பிரணா அம்மா சொன்னதுக்கு நான் என்ன செய்வேன்... " என்றான் அவன்.

"வரூன் அண்ணி எங்க இருக்காங்கன்னு இன்னும் தகவல் தெரியல... எல்லோரும் இந்த கவலையில் இருக்கும்போது... ஆன்ட்டி நிச்சயதார்த்தம் பத்தி பேசறாங்களே... இது சரியா...??"

"அதான் சொன்னேனே பிரணா... என்னோட ஜாதகத்துல இன்னும் ஒருமாசத்துல சனி திசை ஆரம்பிக்க போகுதாம்... அதுக்குப் பிறகு இரண்டு வருஷத்துக்கு கல்யாணப் பேச்சே ஆரம்பிக்கக் கூடாதாம்... அப்படி செஞ்சாலும் அது தடைப்பட்டு போகுமாம்... என்னன்னமோ அந்த ஜோசியர் உளரி வச்சிருக்காரு... அதை அம்மாவும் நம்பறாங்க...

பொண்ணு கிடைக்கலன்னா கூட பரவாயில்ல வரூன்... பொண்ணு ரெடியா இருக்கும்போது ஏன் ரெண்டு வருஷம் வெய்ட் பண்ணனும்... இப்போ கல்யாணப் பேச்சை ஆரம்பிச்சு சிம்பிளா நிச்சயம் பண்ணிடுவோம்.. அப்புறம் யுக்தா வந்ததும் கல்யாணத்தை வச்சுப்போம்னு சொல்றாங்க பிரணா.. யுக்தா இல்லாத இந்த நேரத்துல இதெல்லாம் எப்படிம்மான்னு கேட்டா...

உனக்கு யுக்தா தங்கை மாதிரின்னா எனக்கு பொண்ணு மாதிரிப்பா... இருந்தும் ஜோசியர் சொல்லும் போது கவலையா இருக்குப்பா... நீ புரிஞ்சிக்கோன்னு சொல்றாங்க பிரணா... நான் என்ன பண்ணட்டும்..."

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...

படிக்க தவறாதீர்கள்... 

"வரூன்... அண்ணி வீட்டை விட்டு போனதுக்கு நான் தான் காரணம்னு எனக்கு குற்ற உணர்ச்சியா இருக்கு... இதுல வரூன் வீட்ல நிச்சயதார்த்தம் பத்தி பேச வராங்கன்னு நான் சொன்னா... என்னப்பத்தி எல்லாரும் என்ன நினைப்பாங்க வரூன்... சுயநலமா இருக்கறதா நினைக்கமாட்டாங்களா..??"

"அப்போ என்னையும் அப்படிதானே நினைப்பாங்க பிரணா... அம்மா என்ன சொல்றாங்கன்னா... நீங்க அதைப்பத்தி எதுவும் பேசவேண்டாம்... நானே போய் பிரணதி அப்பா அம்மாக்கிட்ட பேசறேன்... அவங்க என்னை புரிஞ்சுப்பாங்கன்னு சொல்றாங்க... அதனால நீ கவலைப்படாம இரு... அம்மா வந்து பேசட்டும்... அப்புறமா எல்லாம் பார்த்துக்கலாம்...

"என்ன வரூன் ஆரம்பத்துல இருந்தே அண்ணி தான் நம்ம லவ்க்கு ஹெல்ப் பண்றாங்க... இப்போ அண்ணி இல்லாம நமக்கு நிச்சயதார்த்தமா...?? இது அண்ணிக்கு தெரிஞ்சா என்ன நினைப்பாங்க... நாம இல்லாததை நினைச்சு யாருக்கும் கவலை இல்லைன்னு நினைக்கமாட்டாங்களா..?? அது கஷ்டமா இருக்கு வரூன்..."

"இங்கப்பாரு யுக்தா எனக்கு மெயில் பண்ணதுல என்ன எழுதியிருந்தா தெரியுமா..?? உங்க லவ்க்கு ஹெல்ப் பண்றேன்னு சொல்லிட்டு பாதியிலேயே விலகிட்டேன் வரூன்... நீங்க அத்தை மாமாக்கிட்ட உங்க லவ்வ பத்தி சொல்லிடுங்கன்னு எழுதியிருந்தா... நமக்கு நிச்சயதார்த்தம்னு அவளுக்கு தெரிஞ்சா சந்தோஷம் தான் படுவா... கொஞ்ச நாள் பழகுனாலும் யுக்தா குணம் எனக்கு தெரியும்.. அதனால நீ கவலைப்படாத" என்று வரூன் பிரணதியை சமாதானப்படுத்தி போனை வைத்துவிட்டான்.

வரூன் சொல்லியது போலவே வரூனுடைய அம்மாவும் அப்பாவும் அவர்களே நேரில் வந்து ஜோசியர் சொன்னதை சொல்லி நிச்சயதார்த்தம் வைப்பது பற்றி பேசினர்... அப்போது பிருத்வியை தவிர அனைவரும் இருந்தனர்...

யுக்தா  இல்லாமல் இப்படி ஒரு விஷேஷம் வைப்பதை நினைத்து செந்திலுக்கும் மதிக்கும் கஷ்டமாக இருந்தாலும்.. வரூனுடைய அம்மா அப்பாவிடம் மறுத்தும் பேச முடியவில்லை... இதுவே வேறு யாராவது இருந்திருந்தால்... உங்க மருமக கோச்சுக்கிட்டு போய்ட்டாளாமேன்னு வேதனை படும்படி பேசியிருப்பர்... இல்லை இப்போது நிச்சயம் வைத்துக் கொள்ள சம்மதிக்கவில்லை என்றால் உங்கள் பெண் வேண்டாம் என்று சொல்லியிருப்பர்...

ஆனால் வரூன் வீட்டிலோ... வெளியில் நிறைய பேருக்குச் சொல்லாமல் நம்ம வீட்டு ஆளுங்களை மட்டும் வைத்து நிச்சயம் நடத்துவோம்... யுக்தா வந்ததும் கல்யாணம் வச்சுக்கலாம்னு சொல்லும்போது செந்திலும் மதியும் சம்மதித்துவிட்டனர்... அவர்களுக்கும் யுக்தாவின் குணம் தெரியுமே... இதை கேள்விப்பட்டாள் யுக்தா சந்தோஷம் தான் படுவாள் என்று நினைத்தே இதற்கு சம்மதித்தனர்...

பொதுவாக பெண் வீட்டில் தான் நிச்சயதார்த்தம் வைக்கவேண்டும்... நீங்களெல்லாம் யுக்தா விஷயத்தில் வேதனையாக இருப்பதால்... எங்கள் வீட்டிலேயே நிச்சயத்தை வைத்துக் கொள்ளலாம்... நாங்களே எல்லா ஏற்பாடும் செய்கிறோம்... உங்கள் மகன் பிருத்விக்கும் இதில் விருப்பமா என்று கேட்டு முடிவை சொல்லுங்கள்... என்று வரூன் வீட்டார் விடைப்பெற்றனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.