(Reading time: 29 - 58 minutes)

திர்ச்சியில் உறைந்து இருந்தவனை குலுக்கி இந்த உலகத்திற்கு கூட்டிக் கொண்டு வந்தாள் மதி...

"டேய் பிருத்வி... என்னடா இதெல்லாம்... யுக்தா வீட்டை விட்டு போற அளவுக்கு என்னடா தப்பா பேசின... ஏண்டா அப்படி என்னடா கோபம்... அவ வீட்டை விட்டு போனது கூட தெரியாம தூங்கிக்கிட்டு இருக்கியா... உனக்கு இரக்கமே இல்லையா..?? அந்த பொண்ணை வீட்டை விட்டே அனுப்பிட்டியேடா...

உன்னை பிள்ளையா பெத்ததுக்கே நான் வெட்கப் படுறேண்டா... அப்படி என்னடா இன்னும் அந்த பொண்ணு மேல உனக்கு கோபம்... நேத்து கோவில்ல ஜோடியா குளத்துக்கு போனப்ப சந்தோஷப் பட்டேனே... குலதெய்வம் கோவிலுக்கு போய்ட்டு வந்தா எல்லாம் சரியாயிடும்னு நினைச்சேனே.... இப்படி என் தலையில இடியை தூக்கி போட்டுட்டியே...

அய்யோ சுஜாதாக்கு என்ன பதில் சொல்லப் போறேனோ... என்னை நம்பி தானே யுக்தாவை இங்க விட்டுட்டு போனா... யுக்தா எங்கப் போனா தெரியலையே... அய்யோ ராத்திரி வேற போயிருக்காளே... என்னப் பண்றது... என்னங்க..." என்று செந்திலை அழைத்துக் கொண்டே அறையை விட்டு வெளியே போக... என்ன செய்வதென்று தெரியாமல் பிருத்வி விக்கித்து உட்கார்ந்திருந்தான்.

விஷயத்தை கேட்ட செந்தில், பிரணதி எல்லோருக்கும் அதிர்ச்சி... செந்திலும் அவர் பங்குக்கு கொஞ்சம் பிருத்வியை திட்டினார்... யுக்தா சென்றதை யாராவது பார்த்தார்களா என்று விசாரிக்க செந்தில் வெளியே சென்றார்... பிருத்வியும் கூடச் சென்றான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீரா ராமின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்

படிக்க தவறாதீர்கள்... 

பிரணதிக்கு ஒன்றும் புரியவில்லை... எதனால் அண்ணனுக்கும் அண்ணிக்கும் பிரச்சனை என்று தெரியவில்லை... கோவிலில் நடந்ததை தான் பிரணதி அறியவில்லையே... இருந்தாலும் கோவிலில் தான் ஏதோ அவர்களுக்குள் பிரச்சனை என்று புரிந்தது அவளுக்கு... உடனே வரூனுக்கு போன் செய்து தகவல் சொன்னாள்.

வெளியே சென்று விசாரத்ததில் விடியற்காலை 4மணி அளவில் இங்கிருந்து வேலைக்கு செல்லும் சில பெண்கள் இந்தப் பக்கமாக நடந்து போகும்போது யுக்தாவும் கையில் ஒரு பையோடு நடந்து போவதை பார்த்திருக்கிறார்கள்... அவளை வடபழனி பஸ் நிலையம் வரைக்கும் பார்த்திருக்கிறார்கள்... அதன்பின் அவளைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை... அவள் எந்த பஸ் பிடித்து சென்றாள் என்பது யாருக்கும் தெரியவில்லை...

அவளை எங்கே எப்படி தேடுவது... சொல்லாமல் சென்றவள் கண்டிப்பாக அவள் வீட்டாரையும் தொடர்பு கொண்டிருக்கமாட்டாள்... போலீஸிடம் செல்வதா ஒன்றுமே புரியவில்லை யாருக்கும்... எல்லாம் என்ன செய்வது என்று குழம்பியிருக்க... அப்போது வரூன் கோபத்தோடு அங்கு வந்து பிருத்வியின் சட்டையைப் பிடித்தான்...

எல்லோரும் பதறிவிட்டனர்... அதையெல்லாம் அவன் பொருட்படுத்தாமல் பிருத்வியிடம் கோபமாக பேசினான்...

"டேய் என்னடா நினைச்சுக்கிட்டு இருக்க... யுக்தாக்கிட்ட என்னடா பேசுன... எங்க ரெண்டுப்பேரையும் ஒன்னா பார்த்து சந்தேகப்பட்டியா... அதனால தான் யுக்தா கோச்சுக்கிட்டுப் போனாளா..?? சொல்லுடா.." என்று அவன் சட்டையிலிருந்து கையை எடுக்காமல் கோபமாக கேட்டான்...

அங்கிருந்த எல்லோருக்கும் அதிர்ச்சி பிரணதி உட்பட... அந்த அதிர்ச்சியிலும் வரூனை விலக்கப் பார்த்தனர்... ஆனால் அவன் சட்டையிலிருந்து கையை எடுக்காமல் தொடர்ந்து பேசினான்...

"நீ இவ்வளவு கேவலமா இருப்பேன்னு யோசிக்கலடா... எங்க ரெண்டுப்பேரையும் நீ பார்த்தப்ப கோபப்படுவன்னு நினைச்சேன்... ஆனா சந்தேகப்படுவேன்னு நினைக்கலடா... அவ எனக்கு தங்கச்சி மாதிரிடா...

அன்னைக்கு சப்னா விஷயத்துல நான் செஞ்சது தப்புன்னு என் மேல கோபமா இருக்கியே... இன்னிக்கு நீ என்னடா செஞ்சு வச்சிருக்க... ஒரு பொண்ணை அதுவும் உன்னோட பொண்டாட்டிய சந்தேகப்பட்ருக்க... உனக்கு அசிங்கமா இல்ல..." என்றபோது "போதும் நிறுத்துடா.." என்று அவனை விலக்கிவிட்டான் பிருத்வி...

"யாருடா சந்தேகப்பட்டது... நான் ஒன்னும் அவ்வளவு கேவலமானவன் இல்ல... ஏதோ கோபத்துல அப்படி பேசிட்டேன்... அதை கூட யுக்தா நான் கோபத்துல தான் பேசினேன்னு புரிஞ்சிக்கிட்டா... அப்புறமும் நான் கொஞ்சம் கஷ்டப்படுத்துறா மாதிரி பேசிட்டேன்... அதான் இப்படி செஞ்சுட்டா.."

"சீ இதை சொல்ல அசிங்கமா இல்ல... நானும் அன்னைக்கு சப்னா விஷயத்துல கோபமா தான் பேசினேன்... ஆனா அந்த போஸ்டர் விஷயம் நான் தான் செஞ்சுருப்பேன்னு நீ நினைக்கல... இன்னிக்கு உன்னோட கோபத்தை நியாயப்படுத்திறீயா..."

"இங்கப்பாரு எனக்கு சந்தேகமெல்லாம் இல்ல... நீ அவ்வளவு தூரம் அவளை தேடி வந்துருக்க... ஏதோ பிரச்சனையோன்னு நினைச்சேன்... ஆனா என்ன ஏதுன்னு அவளே சொல்லுவான்னு நினைச்சேன்... அவ சொல்லல அதான் கோபம் வந்துடுச்சு..."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.