(Reading time: 29 - 58 minutes)

"நீங்க என்ன சொன்னாலும் எங்க மேலேயும் தப்பு இருக்கு அங்கிள்... அதுக்கு இன்னொரு முறை மன்னிப்பு கேட்டுக்கிறேன்... யுக்தா நல்லபடியா கிடைக்கட்டும் அங்கிள் அப்புறம் அம்மா அப்பாவை கூட்டிட்டு வந்து முறைப்படி பிரணதியை பொண்ணு கேக்கறேன்... யுக்தாவை தேட என்ன ஹெல்ப் வேணாலும் என்கிட்ட கேளுங்க அங்கிள்... அப்போ நான் வரேன்... என்று செந்திலிடமும் மதியிடமும் விடைப்பெற்றவன்...

கண்ணாலேயே பிரணதியிடமும் விடைப்பெற்றவன்... பிருத்வியிடம் வந்து "யுக்தாவுக்கு மட்டும் ஏதாவது ஆகட்டும் அப்புறம் இருக்குடா உனக்கு..." என்று எச்சரித்துவிட்டு கிளம்பினான்...

அதன்பின் யுக்தா பற்றி தெரிந்துக் கொள்ள என்ன செய்வது என்று யோசித்தும் ஒரு வழியும் புலப்படவில்லை... இங்கு யாரையும் அவளுக்கு தெரியாதே... எங்குப் போனாளோ... போலிசிடம் சொன்னாளும் தேவையில்லாத கேள்விகள் கேட்பார்கள்... எப்படி அவளை தேடுவது என்று வழியும் தெரியவில்லை....

பேசாமல் சுஜாதா, மாதவனிடம் தகவல் கொடுப்பது தான் சரியாக இருக்கும் என்று முடிவெடுத்த போது யுக்தாவிடம் இருந்து மெயில் வந்திருப்பதாக பிரணதி கூறினாள்... அதில் தான் பாதுகாப்பாக இருப்பதாகவும் தன்னை நினைத்து கவலைக் கொள்ள வேண்டாம் எனவும்... பிருத்வி மேல் யாரும் கோபம் கொள்ள வேண்டாம் எனவும் அனுப்பியிருந்தாள் யுக்தா... செந்திலுக்கும் அதே போல் மெயில் அனுப்பியிருந்தாள்...

எப்படியிருந்தாலும் பெற்றவர்களுக்கு இந்த விஷயத்தை கூறி தானே ஆக வேண்டும்... எப்படி இந்த விஷயத்தை சுஜாதாவிடம் சொல்வது என்று மதி யோசிக்கும் போதே சுஜாதாவிடம் இருந்து அழைப்பு வந்த்து...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்... 

"மதி என்ன ஆச்சு எந்தப் பிரச்சினையும் இல்ல... ரெண்டுப்பேரும் சீக்கிரம் சரியாயிடுவாங்கன்னு சொன்னீயே.. இப்போ ஏன் யுக்தா இந்த முடிவு எடுத்தா" என்று சுஜாதா கேட்டபோதே... யுக்தா அவர்களுக்கும் மெயில் அனுப்பியிருப்பாள் என்று புரிந்தது...

"என்னை மன்னிச்சிடு சுஜா... நான் இருந்தும் இப்படி நடக்கவிட்டுட்டேன்... யுக்தாவை நான் பார்த்துக்கிறேன்னு சொன்னதை என்னால காப்பாத்த முடியல... " என்று மதி அழுதபோது...

"விடு மதி... நீ மட்டும் என்ன செய்வ... இது மாதிரி நேரத்துல நாங்க கூட இல்லாம போய்ட்டோம்.. இருந்திருந்தா யுக்தா எங்களை தேடி வந்திருப்பாள்... என் பொண்ணு எங்க இருக்காளோ... அதை நினைச்சா தான் பயமா இருக்கு.." என்று சுஜாதா அழும்போது மதிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை...

என்ன தோழி இவள்... இந்த நேரத்திற்கு வேறு யாராவது இருந்தால் தங்கள் குடும்பத்தையே திட்டியிருப்பார்கள்... ஆனால் இப்போதும் தன் நிலைமையை சுஜாதா புரிந்துக் கொண்டிருக்கிறாள்...

அதுமட்டுமில்லாமல் யுக்தாவும் இது தான் எடுத்த முடிவு இதற்காக யாரும் இவர்கள் மேல் கோபம் கொள்ள வேண்டாம் என்று மெயிலில் தெளிவாக குறிப்பிட்டுள்ளதாக சுஜாதா கூறினாள்... இப்பேர்ப்பட்ட பெண்ணை பிருத்வி புரிந்துக் கொள்ளவில்லையே என்று கோபம் வந்தது மதிக்கு...

ஆனால் மாதவனுக்கு  இவர்கள் மேல் கோபம் இருக்கிறது அதனால் தான் இன்று வரையிலும் இவர்களிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை... தன் மனைவிக்காகவும் மகளுக்காகவும் தான் அவர் அமைதியாக இருக்கிறார் என்று தெரிகிறது....

யுக்தா இவர்களுக்கு மட்டுமல்லாமல் சங்கவிக்கும் மெயில் அனுப்பியுள்ளாள்... வரூனுக்கும் கூட அனுப்பியிருக்கிறாள்... எதுவாக இருந்தாலும் வீட்டிற்கு வா பேசிக் கொள்ளலாம் என்று பதில் மெயில் அனுப்ப அதற்கு யுக்தாவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை...

யுக்தா பற்றி தகவல் கிடைக்காததால் இங்கு வந்து என்ன செய்ய போகிறீர்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கவி சொன்னதால்... மாதவனும் சுஜாதாவும் தவிப்போடு நியூயார்க்கில் இருக்கிறார்கள்....

யுக்தாவின் அத்தை மகன் தேவாவும் சங்கவியும் தான்... நியூயார்க்கில் யுக்தாவுடன் படித்த இந்திய நண்பர்களின் முகவரி கேட்டு... ஒவ்வொருவருக்காக போன் செய்து யுக்தா பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்... செந்திலும் வரூனும் தேவாவிடம் தகவல்களை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்...

 இரண்டு மாதமாகியும் இன்னும் யாருக்கும் யுக்தா பற்றி தகவல் கிடைக்கவில்லை... அன்றிலிருந்து இன்று வரை பிருத்வியிடம் செந்தில் பேசவில்லை... இன்னும் எவ்வளவு காலம் ஆகுமோ யுக்தாவை பற்றி அறிய... எவ்வளவு மனதில் கஷ்டமாக இருந்தால் யுக்தா யாருக்கும் சொல்லாமல் இப்படி தனியாக இருப்பாள்... யுக்தாவின் நிலைமை மதிக்கு புரிந்தாலும்... தன் மகனின் நிலைமயும் மதிக்கு புரிகிறது... பிருத்வி அவன் செய்த தவறுக்கு வருந்துகிறான் என்று தெரிகிறது... தன் மகனும் மருமகளும் சேர்ந்து வாழும் நாள் வராதா என்று கடவுளிடம் முறையிட்டாள் மதி.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.