(Reading time: 29 - 58 minutes)

"ச்சீ நிறுத்து... ஏதோ பிரச்சனைன்னு நினைச்சா என்னன்னு கேக்கனும்... அதுக்கு இப்படி தப்பா பேசுவியா... நீ அவக்கூட நல்லபடியாக இருந்திருந்தா அவளே உன்கிட்ட சொல்லியிருப்பா... நீ எப்போ பார்த்தாலும் கோபமா இருந்தா எப்படிடா அவ உன்கிட்ட பேசுவா... உனக்கெல்லாம் யுக்தா மாதிரி ஒரு பொண்ணு மனைவியா கிடைச்சது அதிர்ஷ்டம்... ஆனா யுக்தாக்கு உன்னை மாதிரி புருஷன் கிடைச்சது துரதர்ஷ்டம்... நீயெல்லாம் அந்த சப்னாவை கட்டிக்கிட்டு கஷ்டப்பட்ருக்கனும்டா... நீ தப்பிச்சுட்ட ஆனா யுக்தா வந்து மாட்டிக்கிட்டா...."

"......"

"நான் கோவில் வரைக்கும் வந்தது யுக்தாக்காக இல்ல... பிரணதிக்காக..." என்றதும் எல்லோரும் புரியாமல் பார்த்தனர்... பிரணதி தலைக்குனிந்துக் கொண்டாள். வரூன் பின் செந்திலிடம் பொறுமையாக விஷயத்தை கூறினான்.

"ஆமாம் அங்கிள்... நானும் பிரணதியும் லவ் பண்றோம்... இந்தியாக்கு வந்ததும் நான் தான் அவக்கிட்ட ப்ரோபோஸ் பண்ணேன்... அவ பிருத்வியை நினைச்சு பயந்தா... உங்கக்கிட்டேயும் லவ் பத்தில்லாம் சொல்ல பயம்னு சொன்னா... இது யுக்தாக்கு தெரிஞ்சுது...

யுக்தா எங்க லவ்க்கு ஹெல்ப் பண்றதா சொன்னா... நேரம் வரும்போது உங்கக்கிட்ட பேசறதா சொன்னா... இதனால திரும்பவும் நானும் பிருத்வியும் ப்ரண்ட் ஆவோம்னு நினைச்சா... நானும் அவளை என்னோட தங்கையா தான் நினைச்சேன்... இப்படி தான் நாங்க சந்திச்சு பேசியிருக்கோம்... இதெல்லாம் தெரிஞ்சா இவன் கோபப்படுவான்னு நினைச்சேன்...

அப்போ தான் நீங்க கோவிலுக்கு போறதா இருந்தப்ப பிரணதி என்ன கோவிலுக்கு வரச் சொன்னா... ஒன்னா சாமிக் கும்பிட்டா... எங்க கல்யாணம் நடக்கும்னு சொன்னா... நான் அங்க வருவது யுக்தாக்கு கூட தெரியாது" என்று சொன்னதும் மதி பிரணதியை முறைத்தாள்... பிருத்வியோ இப்படி ஒரு விஷயம் இருக்கும் என்று தெரியாமல் யுக்தாவிடம் பேசியதற்கு வெட்கினான்...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "பைராகி" - முன்ஜென்மம் சொல்லும் கற்பனை வரலாற்று நாவல்...

படிக்க தவறாதீர்கள்... 

வரூன் தொடர்ந்து பேசினான்... "அப்போ குளத்துக்கு வந்த யுக்தா என்னை பார்த்துட்டா... என்ன ஏதுன்னு  விசாரிச்சப்ப தான் இவன் பார்த்தான்... என்னோட விளக்கத்தை கூட கேக்க இவன் தயாரா இல்லை...

அப்போக் கூட இவன் கோபப்படுவான் என்ன ஏதுன்னு விசாரிப்பான்னு தான் நினைச்சேன் அங்கிள்... ஆனா இவன் அசிங்கமா எங்க ரெண்டுப்பேரையும் தப்பா பேசுவான்னு நினைக்கல... இவனோட மனைவி எனக்கு தங்கச்சி மாதிரி அங்கிள்... இவன் இப்படி இருப்பான்னு தெரிஞ்சிருந்தா யுக்தாவை இந்த விஷயத்துல இழுத்திருக்கமாட்டேன் அங்கிள்... என்னை மன்னிச்சுடுங்க..." என்று பேசிக் கொண்டிருக்கும் போதே பிரணதி இடைமறித்தாள்..

"இல்ல எல்லாத்துக்கும் காரணம் நான் தான்.. நான் தான் அண்ணிக்கு கூட சொல்லாம உங்களை கோவிலுக்கு வரச்சொன்னேன்... நான் அதுமாதிரி செஞ்சிருக்கக் கூடாது... ஏன் நான் உங்களை காதலிச்சிருக்கவே கூடாது... அதான் இதெல்லாம் வேண்டாம்னு சொன்னேன்... நீங்களும் அண்ணியும் தான் என்ன ஒத்துக்க வச்சீங்க... இப்போ என்னால அண்ணி வீட்டை விட்டே போய்ட்டாங்க..." என்று பிரணதி அழுதாள்...

பிரணதியின் அம்மா அப்பா அருகில் இருக்கவே அவளை சமாதானப்படுத்த முடியாமல் தவித்தான் வரூன்...

"பிரணதி அழறதை நிறுத்து என்று செந்தில் கோபப்பட்டார்.... பின்

"நானும் உங்கம்மாவும் காதலிச்சு கல்யாணம் செஞ்சுக்கிட்டவங்க... நாங்க எப்படி காதல் கல்யாணம் வேண்டாம்னு சொல்வோம்.... என்ன எங்களுக்கு கூட இருந்து எதுவும் சொல்ல பெத்தவங்க இல்ல... ஆனா உங்களுக்கு நாங்க இருக்கோம்... நல்லது எதுன்னு புரிய வைப்போம்... அதுக்காக காதல் வேண்டாம்னு சொல்ல மாட்டோம்...

அது புரியாம நீ எங்கக்கிட்ட சொல்ல தயங்கினதுல தப்பு இல்ல.... யுக்தா உனக்கு உதவுனதுலயும் தப்பு இல்ல... ஆனா யாருக்கும் சொல்லாம வரூனை நீ அங்க வரவச்சது தப்பு... இப்போ பார்த்தீயா இது எப்படிப்பட்ட பிரச்சனையை கொண்டு வந்துடுச்சு... வரூன் உனக்கும் தான் சொல்றேன் அவ சொன்னா நீ யோசிக்கமாட்டீயா... இதுக்கு அப்புறமாவது நாம செய்யற விஷயம் அடுத்தவங்களை பாதிக்காம இருக்கான்னு கவனிங்க..." என்றதும் வரூன் தலைக் குனிந்தான்..

"தங்கமான ரெண்டுப் பசங்கள பெத்ததுக்கு நான் சந்தோஷப்பட்டேன்... இப்போ என்னடான்னா இவங்க ரெண்டுப்பேரும் இப்படி செய்வாங்கன்னு நினைக்கலங்க.. இவன் தான் இப்படி இருக்கான்னு பார்த்தா இப்போ இவளும் பொறுப்பில்லாம நடந்து யுக்தாவை தொலைச்சுட்டு நிக்கறோமே" என்று மதி அவள் பங்குக்கு தன் பிள்ளைகள் செய்ததை நினைத்து ஆதங்கப்பட்டாள்...

"விடு மதி... வரூனும் பிரணதியும் என்ன யுக்தாவை வீட்டை விட்டு அனுப்பனும்னா இதெல்லாம் செஞ்சாங்க... இப்படி ஒரு பிரச்சனை நடக்கும்னு இவங்களுக்கு தெரியுமா என்ன..?? இது நடக்கனும்னு இருக்கு.... இதைப் பேசி ஒன்னும் ஆகப்போறதில்ல... என்ன நாம செஞ்ச ஒரே தப்பு யுக்தாவை இவனுக்கு கல்யாணம் செஞ்சு வச்சதுதான்... என்று பிருத்வியை முறைத்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.