(Reading time: 29 - 57 minutes)

'கோவமா... கோதை எங்காத்து பொண்ணில்லையோ??? அவ மேலே நாங்க கோவப்படுவோமோ???' அவள் கன்னம் வருடினார் தேவகி. 'என்ன மாயம் நிகழந்தது என்றே புரியவில்லை கோதைக்கு,

'என்னாச்சு மாமியாரும் மாட்டுப்பொண்ணும் ரகசியம் பேசிண்டிருக்கேள்??? என்றபடியே வந்தார் யசோதா..

'சின்னதாக நட்பாக புன்னகைத்தவளின் கண்கள் மட்டும் கோகுலை தேடிக்கொண்டே இருக்க ..

'கோகுல் தானே மாடியிலே இருக்கான். போய் அஞ்சு நிமிஷம் பேசிட்டு  வா போ... சட்டுன்னு வந்திடு. யாரனும் பார்த்தா ஏதானும் சொல்லுவா..' என்றார் தேவகி.

'இல்லை. வேண்டாம்... நான் அப்புறமா...'

'ஒண்ணுமில்லைடா. சும்மா போயிட்டு வா.. அவனும் நீ வருவியோன்னு பார்த்திண்டு இருப்பான் .' அவளை அனுப்பினார் யசோதா.

அத்தையும் அத்திம்பேரும் கூட முன்னால் போய்விட தயங்கி தயங்கி உள்ளே நுழைந்தாள் வேதா. அவள் உயிர் அவள் வசம் இல்லை தான். முன்பு ஒரு முறை அந்த சரவணனுடன் இந்த வீட்டுக்கு வந்தது அவள் நினைவிலாடியது.

'எப்படி எல்லாம் ஏமாற்றி இருக்கிறான் என்னை???' உள்ளம் கொதித்தது அவளுக்கு.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "நெஞ்சோரமா என் நெஞ்சோரமா..." - காதல் கலந்த குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்... 

முதலில் எதிர்ப்பட்டது யசோதைதான். அவளை பார்த்ததும் ஒரு நொடி நின்றே விட்டார் அவர். அவர் கண்கள் அவளை அளக்க.....

'இவள் தான் வேதாவா???" இவளையும் விட ஒரு பொருத்தமான பெண்ணை நான் முரளிக்கு பார்த்துவிட முடியுமா என்ன??? தன்னையும் அறியாமல் தோன்றியே விட்டது அவருக்கு.

தலையை குலுக்கிக்கொண்டார் அவர். 'நடக்கவே முடியாத ஒரு விஷயத்தை நான் ஏன் யோசிக்கிறேன்???'

'வாம்மா...வேதா... நான் முரளியோட அம்மா..' அவர் ஒரு சம்பிரதாய புன்னகையை உதடுகளில் ஓட விட்ட படியே சொல்ல, சின்னதாக புன்னகைத்தாள் அவள். அவர் சொல்லும் முன்னரே அவர்தான் முரளியின் அன்னை என்பதை அவரது முக சாயல் காட்டிக்கொடுத்திருந்தது வேதாவுக்கு.

'அப்படி உட்காருமா.. இதோ வரேன்..' சம்பிரதாயமாக சொல்லிவிட்டு நகர்ந்தார் அவர். கொஞ்சம் ஒரமாக சென்று நின்றுகொண்டாள் அவள்.

இவளை நோக்கி தனிச்சையாக திரும்பும் ஒவ்வொருவர் பார்வையும் அவளை கத்தி முனையாய் கீறுவதை போலே உணர்ந்தாள் அவள். அவர்கள் அவர்களுக்குள் பேசிக்கொள்ளும் ஒவ்வொரு வார்த்தையும் இவளை பற்றியதாகவே இருக்குமென தோன்றியது அவளுக்கு.

'இத்தனை வருட வாழ்கையில் இப்படி கூனிக்குறுகி எங்கேயுமே நின்றதில்லை அவள்.'  மூச்சை இறுக பிடித்தபடி நின்றிருந்தாள் வேதா.

'சில நிமிடங்கள் கழித்து அவள் அப்பா அவள் அருகில் வர.. சரியாக அதே நேரத்தில் அவர்கள் அருகில் அவனது நின்றார் முரளியின் தந்தை. அவரை பார்த்த மாத்திரத்தில்...

'நமஸ்காரம்...' ஸ்ரீதரன் கைகூப்ப....

'இவ தான் உம்ம பெரிய பொண்ணா...' அவளை ஏற இறங்க பார்த்தபடி கேட்டார் நந்தகோபால்

அப்பா மெல்ல தலை அசைக்க 'இன்னைக்கு கோதைக்கு மட்டும்தான் நிச்சியதார்த்தம் தெரியுமோன்னோ???" அதிகாரமான குரலில் கேள்வி எழ

தலை அசைப்பே மறுபடியும் அப்பாவின் பதிலாக 'இவ தேவை இல்லாம என்னத்தையானும் கற்பனை பண்ணிக்க கூடாதோன்னோ அதான் சொன்னேன்...' அவர் சொல்லிவிட்டு நகர உடல் கூசிப்போனது வேதாவுக்கு.

அவர் நகர்ந்தவுடன் அவள் கையை பிடித்துக்கொண்டார் அப்பா ' ரொம்ப கஷ்டமா இருக்காமா நோக்கு..' அவர் குரல் மெல்ல கரைய..

'அதெல்லாம் ஒண்ணுமில்லைபா... நீங்க போங்கோ... அவா மணைக்கு கூப்பிடுவா.. அவரை அனுப்பி வைத்தாள் வேதா..' உயிர் வரை பரவிய ஏதோ ஒரு வலி கண்களுக்குள் கண்ணீரை வரவழைக்க பார்க்க..

'மேடம்... தனியா நின்னுண்டு என்ன பண்ணிண்டிருக்கேள்.. ' பின்னாலிருந்து ஒலித்த வசீகர குரல் அவளை பிடித்து இழுத்தது. விழிகள் விரிய திரும்பினாள் அவள். வேஷ்டியும் ஷர்ட்டும், உதடுகளில் தேங்கி நிற்கும் குளிர் புன்னகையுமாக நின்றிருந்தான் முரளி. அவன் விழிகள் அவளை மெல்ல மெல்ல அளந்தன.

'வாங்கோ... நான்  சும்மா... அப்படியே... அது.... வந்து.... ஆத்தை பார்த்திண்டிருந்தேன். நன்னா இருக்கு உங்க ஆகம்..'

'தேங்க்ஸ். பட் இது எங்க ஆம் இல்லை. எங்க சித்தப்பாவாம்..' மெல்ல சிரித்தான் முரளி. 'ஒரு நாள் எங்காத்துக்கு உன்னை கூட்டிண்டு போறேன்...' 'சரி அது இருக்கட்டும். மத்தியானம் நன்னா சாப்பிட்டியா. ரெஸ்ட் எடுத்தியா???'

'ஆங்?? ம்..' தட்டு தடுமாறி சொன்னவளின் பார்வை அங்கே இருந்த எல்லாரையும் ஒரு வித கலவரத்துடனே பார்த்து பார்த்து திரும்பிக்கொண்டிருக்க...

'நோக்கு இங்கே இருக்க கஷ்டமா இருக்கும் மாடியிலே என்னோட ரூம் ஒண்ணு இருக்கு. அங்கே கொஞ்ச நாழி இரேன். நிச்சியதார்த்தம் நடக்கறச்சே கூப்பிடறேன்..' அவள் மனம் படித்தவனாக கேட்டான் முரளி.

'இல்லை பரவாயில்லை..'

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.