(Reading time: 29 - 57 minutes)

 

'த்தையும்... வேதாவும்...' சேர்ந்துதான் கோதையை அலங்கரித்துக்கொண்டிருந்தனர். அங்கே கோதைக்கு தாயாக மாறி இருந்தாள் வேதா.

'என்ன தெரியும் என் தங்கைக்கு??? அவள் ஒரு குழந்தை ஆயிற்றே???' படபடத்தது வேதாவுக்கு.

'கோதை பொண்ணு.. கோகுல் சொன்னபடி கேட்டுக்கோ..' மெதுவாக கிசுகிசுத்தாள் கோதையின் காதில். கோதை சின்ன புன்னகையுடன் தலை அசைக்க, நெற்றியில் வியர்வை பூக்கள் நிரம்பிக்கிடந்தது வேதாவுக்கு.

இருவரையும் உள்ளே அனுப்பிய வேளையில் வேதாவின் கண்களின் ஓரத்தில் கண்ணீர் துளிகள்

'பத்திரம்டா செல்லம்..' அவள் உதடுகள் தன்னையும் அறியாமல் உச்சரித்தன.

'அதெல்லாம் எங்க கோகுல் அவளை பத்திரமா பார்த்துப்பான்' என்றபடியே வேதாவின் அருகில் வந்தனர் யசோதாவும், தேவகியும்!!!

யசோதாவின் கரம் அவள் கண்ணீரை துடைத்தது. வேதா தங்கையின் மீது கொண்டிருக்கும் பாசம் இருவரையும் நிறையவே நெகிழ்த்தி இருந்தது.

மெல்ல அவள் கன்னம் வருடினார் யசோதா 'பேசாம நீ எங்காத்துக்கே மாட்டுப்பொண்ணா வந்துடுடிமா. உன் தங்கையை பக்கத்திலேயே இருந்து பார்த்துக்கலாமோன்னோ???' தேவகியின் உதடுகளிலும் இதமான புன்னகை.

விழிகள் விரிய நிமிர்ந்தாள் வேதா.. 'அது வந்து..'

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா V யின் "காதலை உணர்ந்தது உன்னிடமே..." - காதலை எப்போது சொல்வேன் உன்னிடமே

படிக்க தவறாதீர்கள்... 

'அதெல்லாம் ஒண்ணும் வரலை. உனக்கு இன்னும் கொஞ்சமே கொஞ்ச நாள் டைம். அதுக்குள்ளே உன் மனசை நீ ரெடி பண்ணிக்கணும் சரியா..' சொல்லிவிட்டு அவர்கள் நகர,  கைக்கெட்டும் தூரத்திலிருந்து மெது மெதுவாக புன்னகை மலரும் அவள் முகத்தை ரசித்திருந்தான் முரளி. பின்னர் மெதுவாக அவள் அருகில் வந்து நின்றான். அவன் வந்ததை அறிந்தும் நிமிரவில்லை இவள்.

மெல்ல மெல்ல அவள் முகம் நிமிர்த்தி சற்றே நகர்ந்திருந்த அவளது நெற்றி பொட்டை சரியான இடத்தில் இருத்தி... கலைந்திருந்த அவள் கூந்தல் கோதி... அவன் ஏதோ சொல்ல வாயெடுக்க.... அவள் கண்களிலும் கொஞ்சம் ஆர்வம் எட்டிப்பார்க்க தவறவில்லை.

'வேதா... ' என்றான் முரளி மெதுவாக.

'ம்???'

'எப்படி கேக்கறதுன்னு தெரியலை. ஆனா கேக்காமலும் இருக்க முடியலை... தப்பா நினைச்சுக்காதே...'

'இல்லை சொல்லுங்கோ....' அவள் கண்களில் கொஞ்சம் தவிப்பு.

'நாளைக்கு கட்டு சாதம் கட்டறச்சே புளியோதரை தருவேளோன்னோ.... நேக்கு எக்ஸ்ட்ரா ரெண்டு பாக்கெட் தர சொல்லு.. நேக்கு புளியோதரை ரொம்ப பிடிக்கும் .'

நிஜமாகவே கொஞ்சம் நொந்தே போனாள் வேதா.

'ராமா... உங்களுக்கு சாப்பாடு தவிர வேறே ஒண்ணுமே தெரியாதா...' அவள் பட்டென கேட்டுவிட.... அவன் இதழ்களில் குறும்பு புன்னகை.

சில நொடிகள் அவளையே இமைக்காமல் பார்த்தவன் அவளை சற்றே நெருங்கி மென் குரலில் சொன்னான் முரளி 'நீ முதல்லே கல்யாணத்துக்கு ஒகே சொல்லு அதுக்கு அப்புறம் நேக்கு என்னவெல்லாம் தெரியும்னு சொல்றேன்' அவள் கொஞ்சம் திகைத்து பின்வாங்க கண் சிமிட்டி விட்டு சிரித்தபடியே நகர்ந்தான் அவன்.

ள்ளே அந்த தனி அறையில்..

'கோதை பொண்ணு.. கோகுல் சொன்னபடி கேட்டுக்கோ..' வேதா சொன்ன வார்த்தைகள் அவள் காதில் ஒலித்துக்கொண்டே இருக்க அவன் முகத்தையே பார்த்தபடியே நின்றிருந்தாள் கோதை. சில நிமடங்கள் அவளையே அவன் ரசித்திருக்க...

'நீங்க சொல்றபடி கேட்டுக்க சொன்னா அக்கா... ' என்றாள் மென் குரலில்.

அவன் புருவங்கள் ஒரு முறை ஏறி இறங்க 'என்ன சொன்னாலும் கேட்டுப்பியா??? வெரி குட். இது போறும் நேக்கு பாரு இப்போ ' அவன் முகத்தை தீவிரமாக வைத்துக்கொண்டு அவன் சொல்ல, கொஞ்சம் திகைத்தே போனாள் கோதை.

அவள் முக மாற்றத்தை ரசித்தபடியே மலர்ந்து சிரித்தான் கோகுல். சில நொடிகளில் அவளை நோக்கி இரு கைகளையும் நீட்டினான் அவன்.....

'வாடா... என்கிட்டே வாடா கோதைப்பொண்ணு' அடுத்த நொடி ஓடி வந்து அவன் கைகளில்  தஞ்சமடைந்தாள் அவன் கோதை பெண்.

ரண்டு மூன்று மாதங்கள் கடந்திருக்க.. அந்த காலைபோழுதில்...

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்து புறமெங்கும்
தோரணம் நாட்ட கனாக் கண்டேன் தோழி நான்

கோகுல் வீட்டு பூஜை அறையில் கோதையின் குரல் ஒலித்துக்கொண்டிருக்க.... மாடியிலிருந்து இறங்கி ஓடி வந்தான் கோகுல்.

'கோதைப்பொண்ணு... உங்க அக்கா முரளியை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சுட்டா...'

நிறைந்தது......

மை டியர் ஃபிரண்ட்ஸ்...

'கல்யாண எபிசோட் எப்படி இருந்ததுன்னு படிச்சிட்டு சொல்லுங்கோ. நான் 'வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா' வோட சீக்கிரம் உங்களை சந்திக்க வரேன். Thanks a lot.

Episode # 14

{kunena_discuss:890}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.