(Reading time: 29 - 57 minutes)

 

மூன்று முறை இருவரும் மாலை மாற்றிக்கொள்ள முதலில் அவள் அணிந்திருந்த மாலை இவனுக்கும் இவன் அணிந்திருந்த மாலை அவளுக்கும் சேர்ந்திருந்தது

'இனி நீயும் நானும் இருவரல்ல ஒருவர் என்பதை ஒப்புகொள்வதாக குவிந்த தனது கரத்தை அவள் அவனிடம் கொடுக்க அதை அப்படியே பற்றிக்கொண்டான் கோகுல். இருவர் முகத்திலும் சந்தோஷ அலைகள். 'இனி விடுவதில்லை. என் வாழ்நாள் முழுவதும் இந்த கரத்தை நான் விடுவதில்லை'

இதை பார்த்திருந்த பெற்றவர்களின்  கண்களில் நிறையவே நிறைவு.

நேராக சென்று அலங்கரிக்க பட்ட ஊஞ்சலில் சென்று அமர்ந்தனர் இருவரும். அவன் கைக்குள் அவளது மருதாணி விரல்கள்.  

கன்னூஞ்சல் ஆடி இருந்தாள் 
மனமகிழ்ந்தாள்
 
கன்னூஞ்சல் ஆடி இருந்தாள்
 
காஞ்சன மாலை மனமகிழ்ந்தாள்
 

அருகிலிருந்த சின்ன பெண்கள் ஊஞ்சல் பாடல்களை பாடிக்கொண்டிருக்க...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

கிருத்திகாவின் "வசந்த காலம்" - குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்... 

'ஊஞ்சலாக முன்னும் பின்னும் ஆடும் வாழ்கையில் என்றும் உன்னுடனே என் பயணம்' என்பதாக இருவரும் ஊஞ்சலாட,

அவளது காதில் ஆடும் ஜிமிக்கியையும், அதனோடு சேர்ந்து அவ்வப்போது கொஞ்சமாக நிமிர்ந்து நிமிர்ந்து தாழ்ந்துக்கொள்ளும் அவளது இமை குடைகளையும், ஒவ்வொரு முறை அவன் ஊஞ்சலை ஆட்டும் போதும் அவள் தோள் அவனுடன் உரசி சிலிர்க்கும் அழகையும் ரசித்தபடியே ஊஞ்சலாடிக்கொண்டிருந்தான் கோகுல்.

அடுத்ததாக மேடைக்கு சென்று அவளது அப்பாவின் மடியில் அமர்ந்துக்கொண்டாள் கோதை.

'அவரை பொறுத்தவரை கோதை இன்னமும் சிறு குழந்தை. என் குழந்தைக்கு திருமணமா??? இன்னமும் நம்பவே முடியவில்லை தந்தையால். மகள் மடியில் அமர வார்த்தையில் சொல்ல முடியாத நெகிழ்ச்சி அவரிடத்தில்.

அவள் கையை பிடித்து நீரை தாரை வார்த்து கோகுலுக்கு கொடுத்தார் அவளை.

'உனக்கு தாரை வார்க்கிறேன் என் குழந்தையை. பார்த்துக்கொள். உன் உயிராக அவளை பார்த்துக்கொள்..'

'மந்திரங்கள் மூலம் நான் என்றும் அவளுக்கு துணையாக இருப்பேன் என மூன்று முறை அவன் உறுதி அளிக்க

அடுத்ததாக கோதைக்கு மடிசார் புடவை கொடுக்கப்பட. அவள் அதை வாங்கிக்கொண்டு அவள் உள்ளே செல்ல., மடிசார் புடவையில் அவளை காண காத்திருந்தன அவன் கண்கள்.

ஐந்து நிமிடங்களில் அழகு தேவதையாக வெளிய வந்தாள் அவனது தேவதை. முதல் முதலாக அணிந்திருக்கும் மடிசார் புடவையில், அடி மேல் அடி வைத்து அவள் நடந்து வர.. விழிகள்  விரிய பார்த்திருந்தான் கோகுல்.

'மாப்பிள்ளை சித்த இந்த லோகத்துக்கு வறேளா???" திருமணம் செய்து வைக்கும் வாத்தியாரின் குரல் கேட்கும் வரை வேறேதோ ஒரு உலகத்தில் இருந்தான் அவன்.

இனி தாமதிக்க இயலாது. கோதை தந்தையின் மடியில் அமர, நாதஸ்வரமும் கெட்டி மேளமும், மந்திரங்களும் ஒலிக்க, அட்சதையும், மலர்களும் மழையாய் பொழிய அவள் கண்களுக்குள்ளேயே பார்த்திருக்க இருவர் முகத்திலும் சந்தோஷ சிரிப்பு மிளிர அக்னி சாட்சியாக கோதையின் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவித்தான் கோகுல். அனைவரது கண்களும் உள்ளமும் நிறைந்து போயிருந்தன.

மாப்பிள்ளை வந்தாச்சா??? மட்டுப்பொண்ணு வந்தாளா??? ஒருவரை ஒருவர் கேட்டுகொண்டிருக்க வேதாவின் பார்வை முரளியை தேடி அடைய தவறவில்லை.

இரண்டு மாதங்கள் முன்னால் வரை அவனை தன்னவனாக நினைத்து கூட பார்ததில்லைதான் கோதை பெண். இத்தனை தடைகளை தாண்டி இதோ அவளவனாக ஆகி விட்டிருக்கிறான் கோகுல். அவனை பார்த்தபடியே அவள் நடக்க அவள் விரல்களை தனது கைக்குள்  வைத்துக்கொண்டு அக்னியை வலம் வந்தான் கோகுல்.

திருமண சம்பிரதாயங்கள் ஒவ்வொன்றிக்கும் அர்த்தங்கள் தெரியும் கோதைக்கு. கற்று கொடுத்திருந்தார் அவள் அப்பா. அவள் கால் விரல் பிடித்து ஏழு அடி வைத்து அம்மி மிதித்து அவன் மெட்டி அணிவிக்க ஒவ்வொன்றையும் உணர்ந்து ரசித்து சிலாகித்திருந்தாள் கோதை.

இதனிடையே அவள் வெட்கத்தில் மூழ்கி திளைக்கும் ஒரு சந்தர்ப்பமும் வந்தது. அவள் கோகுலின் மடியில் அமர வேண்டிய அந்த சம்பிரதாயம்.

அவள் அவன் மடியில் அமர அவளை குறும்பு பார்வை பார்த்தபடியே அவன் மந்திரங்கள் சொல்லிக்கொண்டிருக்க... அதே நேரத்தில் அவனது இடது கரம் அவளை மென்மையாக அணைத்திருக்க....  சுற்றி நின்றவர்களின் கேலி சிரிப்பில் அவள் இன்னமும் சிவந்து போக....

'மாப்பிள்ளை போறும். இப்போதைக்கு இறக்கி விடுங்கோ உங்க அகமுடையாளை.... உங்களுக்கு மனசே வரலை போலிருக்கே...' என்று  யாருடைய குரலோ ஒலிக்கும் வரை... மேகத்தில் சஞ்சரித்துக்கொண்டிருந்தனர் இருவரும்.

விரல் ஸ்பரிசங்களின் அறிமுகமும், வெட்க சிரிப்பின் தூறல்களும், கேலி கிண்டல்களின் சாரல்களும் நிறைந்திருந்த நலங்கு முடிந்து வந்திருந்தது இரவு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.