என்னவனே,
எப்படி மறந்தேன்?
உன்னை மணந்தப்பின்,
சிரிப்பதற்கு மட்டுமே பழகியப்பின்,
இவ்வுலகே அழகின் உறைவிடம் என்று நினைத்துவிட்டேனே!
நிதர்சனத்தை மறந்துவிட்டேனோ ?
பகலை கவ்வ இரவு உண்டு !
புன்னகையை களவாட கண்ணீர் உண்டு!
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சித்ரா.வெ'யின் "கண்களின் பதில் என்ன? மௌனமா?" - அது பேசிடும் நாளும் வந்திடுமா..??
படிக்க தவறாதீர்கள்...
அதேபோல், உறவை உடைக்க பிரிவும் வருமல்லவா?
எனில், உன்னை நானும் பிரிந்திடுவேனோ?
பதருகிறது மனம்!
காதல்மனம் அல்ல, இது தாய்மனம்!
ஆம், நீயே என் முதல்குழந்தை!
என் மனம்எனும் கருவில் நான்
ஜென்மஜென்மமாய் சுமக்கும் குழந்தை !
நானின்றி என்ன செய்வாய் நீ ?
அதிகம் பேசாமல் மௌனத்தை ரசிப்பவன் நீ,
உன் மொழி இனி யாருக்கு புரியும் ?
கோபத்தில் அன்பினை பொழிய தெரிந்தவன் நீ,
உன் அனல் கோபத்தில் இனியார் குளிர் காய முடியும் ?
நியாயங்களை சத்தமாய் பேசத் தெரியாதவன் நீ
உன் பக்கம் இருக்கும் நியாயத்தை இனி யார் எடுத்துரைப்பார்கள்?
உன் சுருள் கேசத்தில் விரல்களை தொலைத்ததும்
பிறை நெற்றியும் முத்தமிட்டதும்
கள்ளத்தனம் நிறைந்த விழிகளில் களவு போனதும்
அழுத்தமான இதழ்கள் ஸ்பரிசங்களில் அகிலம் மறந்ததும்
என்னை ஆக்ரமிக்கும் இறும்பு கரங்களின் கதகதப்பும்
என் கோபங்களை தாங்கிய தோள்களின் வலிமையும்
என்னை வாரி அணைத்த மார்பின் துடிப்பும்
என் பாதையில் என்னோடு நடைப்போட்ட பாதங்களும்
என் செவிகளில் இப்போதும் ரீங்காரமிடும் கணீர் குரலும்
நான் இனிமேல் உணர முடியாத நினைவுகளாய் மாறிடுமோ?
உன்னுடன் நான் சிரித்த நினைவுகளை எல்லாம்
நீ கண்ணீரோடு அசைப்போடுவாயா?
வலிமையானவன் உன்னை, நான்
கோழையாக்கி விடுவேனோ?
உன்னில் நான் மயங்குவது உண்மையெனில்
என்னில் நீயும் மயங்கித்தானே இருப்பாய்?
நான் இன்றி எங்ஙனம் வாழ்வாய் உயிரே?
உன் வாழ்வின் ஒவ்வொரு நாளெனும் ஏட்டில்
நான் “அன்புடன்” என்று கையொப்பம் இட்டு கர்வம் கொண்டேனே
இனி அந்த கையொப்பத்தை உன் கண்ணீர் கரைத்திடுமோ?
நீ வேதனை கொள்வாய் என்று முன்னரே தெரிந்திருந்தால்
என்னை வறுத்தியேனும் உன்னை சேராமல் இருந்திருப்பேனே!
உயிரே வாழ்ந்திடு..!
என்னை உன் உயிராய் நினைத்து,
உனக்குள் எனை உணர்ந்து,
நீயும் நானும் வேறல்ல என்ற நிதர்சனத்தை
நினைவில் நிறுத்தி,
வாழ்ந்திடு..!
உன் இன்னுயிர்ஷக்தியுடன் சங்கமித்துவிட்டேன் நான்
உன் சங்கமித்ரா.!
வழக்கம்போலவே அவளின் மனம் அதிவேகமாய் கிறுக்கிட “ஷக்தி” என்று அவன் பெயரை கூறி கொண்டே மயக்கமடைந்தாள் சங்கமித்ரா.
அடுத்தது என்ன? அடுத்த எபிசொட்ல சொல்றேன்.
தொடரும்
{kunena_discuss:777}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.