(Reading time: 21 - 41 minutes)

மா அது என்னவோ சரிதான். உன் மாமாவுக்கு மாட்டி விடுறதுன்னா கை வந்த கலைதான்” என்றபடி அன்று மதியழகன் தனது விரலில் அணிவித்த மோதிரத்தை பார்த்தாள் தேன்நிலா. நினைத்ததை நிகழ்த்திவிட்ட சந்தோஷத்தில் புன்னகைத்தான் ஷக்தி.

“ என்ன நிலா அண்ணி, உங்க ரெண்டு பேருக்கும் நான் நிச்சயம் ஏற்பாடு பண்ணது பிடிக்கலையோ.. ஆனா உங்க முகத்தை பார்த்தால் வருத்தப்படுற மாதிரியே தெரியலயே”

“அய்யோ ஷக்தி, ரெண்டு அடி வேணும்னாலும் அடிச்சுக்கோங்க, பட் தயவு செஞ்சு அண்ணி பன்னின்னு கூப்பிட வேணாம்”என்றாள் நிலா கடுப்பான குரலில். அவள் எரிச்சல் மூட்டி பார்ப்பதில் அவனுக்கு அப்படி ஒரு சந்தோஷம்.

“ஏன் அண்ணி?” என்றான் மீண்டும் குறும்பாய். நிலா உடனேயே மதியழகனை பார்த்து முறைத்தாள். “ இங்க என்ன படம்மா ஓடுது? என் வாய பார்த்துட்டு இருக்க? உன் தம்பிகிட்ட சொல்லு மது. என்னை அண்ணின்னு கூப்பிட வேணாம்ன்னு சொல்லு ..என்னவோ போல இருக்கு”

“ ஹா ஹா எனக்கு அவன் தம்பின்னா, உன்னை அவன் அண்ணின்னு தானே டா கூப்பிடனும்?”

“மது, பேருல மட்டும்தான் மதி வெச்சு இருக்க நீ! உனக்கு நான் நிறைய பாடம் எடுக்க வேண்டியது இருக்கு.. நீ என் கூட வா” என்று திடீரென மதியழகனின் கையை பற்றிகொண்டு விடுவிடுவென நிலா நடக்க

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "மலர்கள் நனைந்தன பனியாலே..." - காதல் என்பது இரு மனமுடிச்சு... εїз!

படிக்க தவறாதீர்கள்... 

“ அண்ணி அண்ணாகூட டூயட் பாடனும்ன்னா நேரடியாகவே சொல்லுங்க” என்று குரல் கொடுத்தான் ஷக்தி.அது என்னவோ தேன்நிலாவால் ஷக்தியை எதிர்த்து பேச முடியவில்லை.அதனாலேயே திரும்பி அவனை பார்க்காமல் ரகசிய புன்னகையுடன் முன்னேறி நடந்தாள் அவள். ஷக்தியும் மித்ராவும் சந்தோஷமாய் பார்வையை பரிமாறிக்கொள்ள ஆரம்பிக்க மித்ராவின் காதை திருகினாள் புவனா.

“ஸ்ஸ்ஸ் ஆ..குட்டிச்சாத்தான் விடுடீ”

“குட்டிப்பிசாசு,உனக்கு சேர்த்து வெச்சு பேச வேற ஆளேகிடைக்கலையா? “

“ என்னடி உளறுர?”

“ ஆமா,என் கண்ணு முன்னாடியே என் ரஞ்சுவை காவியா கூட சேர்த்து வைச்சு பேசுற?”

“என்னது உன் ரஞ்சுவா?” என்று தெரியாதவன் போல கேட்டான் ஷக்தி. மேலும்

“ அவனை இன்னைக்குத்தானே பார்த்த?” என்றான்.

“ ஹலோ பாஸ், லவ் வந்திச்சுன்னா உடனே சொல்லிடனும் .. அதை விட்டுட்டு கல்யாண எபிசோட் வர்ர வரைக்கும் சைலண்டாய் வைட் பண்ண கூடாது..நாங்க எல்லாம் ஜெட் வேகத்துல லவ் சொல்லுவோம்” என்றாள் புவனா கெத்தாய்.

“ மிது, இவ என்னை கலாய்ச்சிட்டாளாமாம்” என்றான் ஷக்தி.

“ ஹ்ம்ம்ம் அப்பா ஆகப்போறிங்கன்னு தெரிஞ்சதுக்கு அப்பறம்  சார் ஃபுல் ஃபொர்ம்ல இருக்கீங்க போல. நீங்க நடத்துங்க. நான் போயி என் ஆளோட டுயட் பாடுறேன் கனவில்” என்று அங்கிருந்து ஓடியே விட்டிருந்தாள் புவனா. அவள் சென்றதுமே ஒருவித படபடப்பாய் உணர்ந்தாள் சங்கமித்ரா.  அவள் முகத்தை பார்த்த ஷக்தி களுக்கென சிரித்தான்.

“ இப்போஎன்ன சிரிப்பு?”

“ நீ எதுக்கு இப்போ வெட்கப்படுற?”

“ தானா வருது..நான் என்ன பண்ணட்டும்?”

“ ஹும்கும் நம்ம கல்யாணத்துல கொஞ்சமாச்சும் வெட்கப்படேன்டீன்னு நான் எவ்வளவு கெஞ்சினேன்?”

“ அப்போ வரல.. இப்போதான் வருது”

“ எல்லாம்  என் நேரம் டீ”

“ ஹா ஹா”

“சரி இங்கயே நிற்கறதா வேண்டுதலா?”

“இல்லையே”

“ அப்போ வா உள்ளே போகலாம்” என்று அவள் கையை பற்றிக்கொண்டு நடந்தான் ஷக்தி. (அவன் தொடர்ந்து மித்ராவிடம் என்ன பேசினான் என்று பார்ப்பதற்கு முன்னர், மதியும் நிலாவும் தனியா போயி ரொம்ப நேரம் ஆச்சு.. அங்க என்ன நடக்குதுன்னு பார்ப்போம் வாங்க).

“ஹேய் குட்டிமா எங்க இவ்வளவு வேகமாய் என்னை இழுத்துகிட்டு போகுற?”

“ம்ம்ம் ஒரு ஆளுக்கு வேப்பிளை அடிக்கனும். அதற்காகத்தான்”என்றாள் நிலா.

“ என்மேல எதுவும் கோபமா?”

“..”

“ எனக்கு தெரிஞ்சு நான் ஒன்னும் பண்ணலயேடா.. எனக்கே தெரியாமல் உன்னை ஹர்ட் பண்ணிட்டேனா?” என்று மதியழகன் வினவவும் வேகம் குறைத்து அப்படியே நின்றாள் தேன்நிலா.

“ மது”

“ சொல்லும்மா”

“எப்பவாச்சும் ஸ்வீட்டா இருந்தால் பரவாயில்ல.. நீ எப்பவுமே ஸ்வீட்டா இருக்கியே எப்படி மேன்?”என்று கண்ணடித்தாள் நிலா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.