(Reading time: 21 - 41 minutes)

து ஒன்னும் இல்ல..நாளைக்கு நாம ஹாஸ்பிட்டல் போகனும் மாமா..இப்போ தூங்கலாம்..ஆல்ரெடி தேனு செம்ம கோபத்துல இருக்காஎன் மேல”

“ஏன்..என்னவாம் ?”

“ம்ம்ம்,நான் அவகிட்ட செக் பண்ணாமலேயே இந்த விஷயத்தை உங்கிட்ட சொல்லிட்டேனாம்.. ஒரு டாக்டர் அவளை நான் மதிக்கவில்லையாம்.. அதுவும் சொந்தமாக டெஸ்ட் பண்ணுறது எப்பவுமே சரியாய் இருக்கனும்ன்னு அவசியம் இல்லையேன்னு சொல்லுறா”

“ ஹ்ம்ம்..அவங்க சொல்றதும் ரைட்டுதான்.. நீ ஏன் ஃபிர்ஸ்ட் அவங்ககிட்டசொல்லல?”

“ப்ச்ச்ச் மக்கு மாமா, தேனுக்கிட்ட செக் பண்ண சொன்னால்,இந்த விஷயம் முதலில் அவளுக்குத்தானே தெரிய வரும்?”

“ ஆமா..”

“அதனால்தான் சொல்லல.. நல்லதோ கெட்டதோ என் லைஃப்லஎது நடந்தாலும் அது முதலில் உனக்குத்தான் தெரியனும்” . அவளின் பிடிவாதமான அன்பில் நெகிழ்ந்து போனான் ஷக்தி. எனினும் அதை வெளிகாட்டி விட்டால் அவனின் கெத்து என்னாவது ? சட்டென முகபாவனையை மாற்றி

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "நினைத்தாலே இனிக்கும்..." - கல்லூரி காதல் கதை...

படிக்க தவறாதீர்கள்... 

“ நீ ஒரு நல்ல மனைவி, ஆனா மோசமான தோழி” என்று குறை கூறினான்.

“ ஒரு சின்ன திருத்தம்”

“என்ன?”

“ நான் நல்ல மனைவியாக இருக்கும்போது மட்டுமே மோசமான தோழி” என்று கூறி அவள் சிரிக்க, அவளின் சிரிப்பில் இணைந்து கொண்டான் ஷக்தி.

மறுதினம், ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் எதிர்ப்பார்ப்போடு விடிந்தது. காவியாவின் கண்களில் படாமல் கதிரும்,கதிரின் கண்களில்படமால் காவியாவும் காலையிலேயே அங்கிருந்து ஆஃபிசிற்கு கிளம்பி இருந்தனர்.ஷக்தியும் மித்ராவும் அன்று காலையில் நிலாவை பார்க்க ஹாஸ்பிட்டல் செல்லவிருப்பதால், அவர்களுக்கு முன்பதாகவே ஹாஸ்பிட்டலுக்கு சென்றிருந்தாள் தேன்நிலா.

அதே காலை வேளையில் மதியழகனுடன் Spark F.M ஸ்டேஷனுக்குள் அடியெடுத்து வைத்தாள் புவனா. நேற்று ரஞ்சன் தனது வீட்டிற்கு கிளம்பியதுமே மதியழகனிடம் தன் மனதை கூறி இருந்தாள் புவனா.

“டீ ஆர் நல்ல பையன் தான் புவி.. ஆனா அவனுக்கு காதல் எல்லாம் பிடிக்காது”

“தெரியும் அண்ணா”

“ ஃபுல்லா ரிசர்ச் பண்ணிட்டியா?”

“ ஹா ஹா ஐ லவ் யூ வே சொல்லிட்டேன்.. சொல்லி நல்லா திட்டு வாங்கினேன்”

“இது எப்போ? அவன் திட்டியுமா இப்படி பேசுற?”

“அண்ணா அது போன மாசம்..இது இந்த மாசம்..”

“ புரியல”

“ அண்ணா நம்ம நியூ ப்ரொக்ராம்ல, நான் சிங்கப்பூர்ல இருந்து பேசும்போது அதே நிகழ்ச்சியை இங்க நடத்துறது ரஞ்சு தானே?

“ஆமா”

“ம்ம்ம் அப்போ வேலையை பத்தி பேசும்போது உங்க சின்சியர் சிகாமணியின் பொறுப்பான குணம் எனக்கு ரொம்பவும் புடிச்சு போச்சு”

“அப்பறம்?”

“எந்த ஜென்மத்துலயும் நான் ரஞ்சு மாதிரி நேர்த்தியான கேரக்டராக இருக்க மாட்டேன்..அதனாலத்தான் அட்லீஸ்ட் அப்படிபட்ட கேரக்டரோடு குடும்பம் நடத்தலாம்ன்னு நினைச்சு, கஷ்டப்பட்டு அவனுடைய ஃபோன் நம்பர் கண்டுபுடிச்சு ஃபோன் பண்ணி ப்ரொபொஸ் பண்ணினேன்”

“நல்லா வாங்கி கட்டுனியா?”

“ நான் பொறந்து வளர்ந்த இந்த 22 வருஷத்துல இப்படி ஒரு திட்டை நான் வாங்கினதே இல்லை.. அப்போவே முடிவு பண்ணிட்டேன்”

“அவனை அண்ணனாய் ஏற்றுக்கனும்ன்னா?”

“ இல்லை என் உள்ளம் கவர்கள்வனாய் ஏற்று லைஃப் லாங் பழி வாங்கனும்ன்னு”

“அடிப்பாவி..”

“அதற்கு அப்பறம் கொஞ்ச நாள் வாளை சுருட்டிகிட்டு சும்மா இருந்தேன்.. கோபம் வெறுப்பாய் மாறிட கூடாதுல?”

“தெளிவுதான்..”

“ ம்ம்ம்.. இந்த பார்க்காமல் காதல் எல்லாம் ரொம்ப ஒவரா இருந்துச்சு..அதான் உங்க  நிச்சயத்தை யூஸ் பண்ணி அவனை பார்க்க வந்தேன்”

“பேசுனியா?”

“க்ரூப்பா பேசும்போது மட்டும் பதில் சொன்னேன்..மத்தபடி இல்ல”

“இது ஏன்?”

“ரிவர்ஸ் சைக்காலஜி..இந்நேரம் அவனை நான் மறந்துட்டேனோன்னு அவன் குழம்பி இருப்பான்..நாளைக்கு நான் , கஷ்டப்பட்டு அவனுடைய ஃபோன் நம்பர் கண்டுபுடிச்சு ஃபோன் பண்ணி ப்ரொபொஸ் பண்ணினேன்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.