(Reading time: 8 - 16 minutes)

மாப்பிள்ளை என்ற உரிமையை எடுத்துகிட்டு உங்க இஷ்டத்துக்கு நீங்களே முடிவெடுக்கும் போது நான் மரியாதை கொடுத்து தானே ஆக வேண்டும்?” மோகன் எவ்வளவோ முயன்றும் அவர்குரலில் கோபம் கொப்பளிப்பதை உணரத்தான் முடிந்தது.

“மாமா நான் எதையும் என் இஷ்டத்துக்காக மட்டும் கேட்கல. என்னத்தான் உங்க பொண்ணு உங்களோடு இருக்குறது சந்தோஷமான விஷயம் என்றாலும்,அவளும் முறைப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டு மாமியார் வீட்டில் சந்தோஷமாய் இருக்கனும்னு உங்களுக்கு ஆசை இருக்கு தானே?”

“ இதென்ன தமிழ் இப்படி கேட்குற?கண்டிப்பா இருக்குப்பா” என்றவர் எப்போதும் போல தன்னை ஒருமையில் அழைப்பதை உணர்ந்து வெற்றிப்புன்னகை உதிர்த்தான் அவன்.

“ அதற்காகத்தான் மாமா.. எந்த பிரச்சனையாய் இருந்தாலும் அதை சந்திக்கனும்..அப்போத்தானே தீர்வு கிடைக்கும்? அதை விட்டுட்டு தள்ளி போட்டுக்கிட்டே இருந்தால் யாருக்கு லாபம்?”

“ம்ம்ம்ம்.,..இப்போ நான் என்ன செய்யனும்?”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

வத்சலாவின் "வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

“ எதுவும் செய்ய வேணாம் மாமா..புகழும் யாழினியும் பேசட்டும்..அது வரைக்கும் நீங்க அவன்மேல் கோபத்தை காட்டாமல் இருந்தால் போதும்”

“ முயற்சிபண்ணுறேன்”என்றார் அவர். ஒரு பெருமூச்சுடன் தனது வேலைக்கு தயராகினான் தமிழ்.அடுத்த சில நிமிடங்கள் யாழினி ஊடலுடன் அவனை வம்பிழுக்க, அவளை கெஞ்சி கொஞ்சி அவளுடன் கிளம்பியவன், புகழ் இன்னும் வீட்டிற்கு வரவில்லை என்பதை உணரவில்லை.

காரில், நான்கு அறை வாங்கியதின் பலனாய்கன்னத்தில் கை வைத்துகொண்டு மிரட்சியாய் அவளைப் பார்த்தான் புகழ். தான் யார் அருகில் இருக்கிறோம் என்பதை உணரவே எவனுக்கு சில நிமிடங்கள்தேவைப்பட, அந்த நிமிடங்களில் நெடுஞ்சாலையில் சீறி பாயத் தொடங்கியது அந்த கார்.

“ஆஷா”

“..”

“ஆயிஷா பேபி” என்று அவன் தன்மையாய் அழைக்கவும் நெருப்பாய் முறைத்தாள் அவள்.

“ஆஷா”

“ தயவு செஞ்சு வாயை திறக்காதீங்க புகழ்”

“ இல்லடா நானு”

“ஏதும் பேசுனிங்கன்னா நான் காரை விட்டு குதிச்சுருவேன்” என்று மிரட்டும்தொனியில் எச்சரித்தாள் ஆயிஷா. இதற்கு முன், ஏற்கனவே இது போல அவனை மிரட்டி அவன் கேட்கவில்லை என்றதுமே மணிக்கட்டை அறுத்து கொண்டிருக்கிறாள் அவள். அந்த நிகழ்வு அவனை அதிர வைக்கவும், இப்போது அவள் பேச்சை கேட்டு அமைதியாய் இருந்தான் புகழ். அவன் மௌனம் காத்திட அவள் தனது மனதில் இருப்பதை கொட்டினாள்.

“பரவாயில்லையே புகழ்! நான் நினைச்ச அளவுக்கு நீ மோசம் இல்லை! என் பேரு கூட உனக்கு ஞாபகம் இருக்கே.. உனக்கும் எனக்கும் என்ன உறவுன்னு ஞாபகம் இருக்கா? இந்த மூனு வருஷத்தில் நான் இருக்கேனா?இல்ல செத்தேனான்னு உனக்கு தெரியுமா?”

“..”

“ஆனா எனக்கு தெரியும்.. இந்த மூனு வருஷத்தில் நீ என்ன பண்ணிட்டு இருந்த, எங்க தங்கி இருந்த எல்லாமே எனக்கு தெரியும்”

“..”

“ வைட் பண்ணிட்டே இருந்தேன்..நீ எவ்வளவு தூரம் போகுறன்னு தெரிஞ்சுக்கத்தான் உன்னை தேடி வரல.. ஏன் அப்படி ஆச்சர்யமாய் பார்க்குற ? உன் முன்னாடி வாய் திறந்து பேசாத ஆஷா,இப்போ உன்னை வாயடைக்க வைச்சிட்டேனா?”

“..”

“ நீ இல்லாம நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? எத்தனை பேரை எதிர்த்து பேச வேண்டிய சூழ்நிலை ? எனக்கு நிக்கா பண்ணி வைக்கனும்னு வாப்பா(அப்பா)வும் உம்மியும் (அம்மா) எவ்வளோ முயற்சி பண்ணினாங்க தெரியுமா? அந்த முயற்சியை நான் எவ்வளவு கஷ்டப்பட்டு உடைச்சேன் தெரியுமா?”

“..”

“அறிவே இல்லையா புகழ் உனக்கு ?”

“..”

“ நம்ம கல்யாணத்துல நிறைய பிரச்சனை வரும்ன்னு தெரிஞ்சும் நான் ஏன் உன்னை காதலிச்சேன்? உன்மேல இருந்த நம்பிக்கை தானே? ஆனா, நீ இப்படி விட்டுட்டு போயிட்டியேடா? நான் ஒத்தையா நின்னு எவ்வளவு போறாடுவேன்”

“ ஆஷா”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.