(Reading time: 22 - 44 minutes)

ந்த இதமான அணைப்பில் இருவரும் சற்று நேரம் கட்டுண்டு கிடக்க, தன் நிலைக்கு வந்த ஆதி,

“ப்ரயு... ரொம்ப நேரமாகி விட்டது.. நீ தூங்கு ரதிம்மா.. என் செயல்களை மன்னிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை .. ஆனால் இனிமேல் இதுபோல் எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் கேட்டு விடு.. சண்டை வேண்டுமானாலும் போட்டுக் கொள்.. எனக்கு நீ வாழ்நாள் முழுதும் வேண்டும்.. “

“நீங்கள் இன்று எத்தனை முறை சாரி கேட்டு விட்டீர்கள்.. நான் உங்களை கஷ்டபடுதியதற்கு ரொம்ப சாரி ஆதிப்பா..” எனவும்

“இத்தனை நேரமா குட்டிம்மா.. ஆதிப்பா என்று சொல்ல? நான் பயந்து விட்டேன்.. நீ என்னை வெறுத்து விட்டாயோ என்று” அவளை இறுக்கி அணைத்தான்.. பிறகு அவள் முகம் முழுதும் முத்தமிட்டவன், இதழில் அழுந்த முத்தமிட்டான்.. அவள் மூச்சுக்கு திணறுவதை பார்த்து,

“ம்.. குட்டிம்மா.. என்னை சோதிக்காதே.. பேசாமல் படு.. மற்றதெல்லாம் பிறகு பார்க்கலாம்.”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "நினைத்தாலே இனிக்கும்..." - கல்லூரி காதல் கதை...

படிக்க தவறாதீர்கள்...

பிரயு சிரித்துக் கொண்டே கட்டிலில் படுக்கவும், ஆதியும் அவளருகில் படுத்தான்.. என்னதான் ஆதியின் மேல் கோபம் இருந்தாலும், அவளால் அதை வெளிப்படுத்த முடியவில்லை. அவளுடைய எண்ணங்களை வெளிப்படையாக சொன்ன பின் அவள் கோபம் குறைந்து இருந்தது. இத்தனை நாட்கள் அனுபவித்த கஷ்டங்கள் கூட அவளுக்கு பெரிதாக தோன்றவில்லை.

மறுநாள் காலை எழுந்து வழக்கமான வேலைகள் முடிக்கவும்.. ஆதியும் டிபன் சாப்பிட  அமர்ந்தான்..

ப்ரயு மாமியாரும் அமர, இருவரும் அவளையும் சாப்பிட அமர சொன்னார்கள்..

சாப்பிட்டுக் கொண்டே.. “ப்ரயு ... உன் ட்ரைனிங் என்னாச்சு?”

“அது அப்பா உடம்பு சரியில்லாமல் போனதல்லவா .. அன்றோடு முடிந்து விட்டது. அதனால் தான் நீங்கள் சீக்கிரம் வர சொன்ன போது கூட என்னால் வர முடியாது என்றேன்.”

“ஒஹ்.. அப்படி என்றால் நீ இப்போ உங்கள் hospitalக்கு தான் வேலைக்கு போக வேண்டுமா ?”

“ஹ்ம்ம்.. ஆனால் நேற்று டாக்டர் என்னை சத்தம் போட்டு ஒரு மாதம் என்னை ரெஸ்ட் எடுக்க சொன்னார்கள் .. “

“ரொம்ப நல்லதா போச்சு.. “

அப்போது வித்யாவும் , அவள் கணவரும் வர, இருவரையும் வரவேற்றனர்..

சாதாரண விசாரிப்பிற்கு பின் வித்யா தன் அண்ணனிடம்..  “அண்ணா.. எனக்கு ஒரு ஹெல்ப் வேண்டும் “ என்றாள்..

“சொல்லும்மா”

“இல்லைனா.. இவருக்கு மறுபடியும் இரண்டு வருடம் யு.கே செல்ல வாய்ப்பு வந்து இருக்கிறது. சென்ற முறை வந்த வாய்ப்பை தான் இவர் எனக்காக ஒத்துக் கொள்ளவில்லை .. இந்த முறை குடும்பத்தோடு செல்லவும் அனுமதி இருக்கிறது.. ஆனால் குழந்தையை தனியாக என்னால் சமாளிக்க முடியுமா என்றுதான் யோசிக்கிறோம்.. நாங்கள் நம் அம்மாவை கொஞ்ச நாட்கள் எங்களோடு அழைத்து கொண்டு போகிறோமே.. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்” என்று வினவினாள்..

“நல்ல விஷயம் தான் வித்யா.. ஆனால் உன் மாமியாரை அழைத்து போகலாமே.. ? அவர்களுக்கும் ஆசை இருக்கும் அல்லவா?” என்றான் ஆதி..

“இல்லை மச்சான்.. இந்த ப்ரோபோசல் வந்து இருவது நாட்கள் ஆகிவிட்டது.. நாங்கள் முதலில் அம்மாவிடம் தான் கேட்டோம்.. ஆனால் அப்பா retire ஆக ஆறு மாதம் தான் இருக்கிறது. .இந்த நேரம் அப்பா லீவ் போட்டு வரமுடியாது.. அம்மாவும் அப்பாவை விட்டு வர முடியாது.. அத்தையை கூப்பிடலாம் என்றால் சிஸ்டர் தனியாக இருக்க வேண்டுமே என்று யோசித்துக் கொண்டிருந்தோம்.. நீங்கள் வரவே , சரி கொஞ்ச நாட்கள் கழித்து உங்களிடம் கேட்கலாம் என்று எண்ணி இருந்தோம்.. சிஸ்டர்க்கு உடம்பு சரியில்லாமல் போகவே அப்படியே விட்டோம்.. இப்போ இந்த வாரம் நான் பதில் சொன்னால்தான் .. அவர்கள் விசா ப்ரோசெச்ஸ் எல்லாம் பண்ண முடியும்.. உங்கள் பதிலை வைத்து தான் நான் ஆபீஸ் இல் சொல்ல வேண்டும்’ என்று நீளமாக கூறி முடித்தார் வித்யா கணவர்.

ஆதி தன் அம்மாவை பார்த்து “அம்மா.. உங்கள் முடிவு என்ன? எதுவாக இருந்தாலும் நீங்களே சொல்லுங்கள்.. “

ஆதி அம்மா கொஞ்சம் தயங்கியபடி “இல்லை அந்த ஊர் தட்பவெப்பம் எல்லாம் எனக்கு ஒத்துக் கொள்ளுமா தெரியவில்லையே .. நான் உங்களுக்கு உதவி செய்ய வந்து தொந்தரவு கொடுக்க கூடாது இல்லையா ?”

“இல்லை அத்தை. .நீங்கள் முதலில் ஆறு மாத விசாவில்தான் வருவீர்கள்.. இப்போ அங்கே சம்மர் தான்.. அதனால் இங்கே உள்ளது போல் தான் இருக்கும்.. அங்கே குளிர் காலம் வரும் போது நீங்கள் இங்கே வந்து விடலாம்.. அப்பா, அம்மாவை அதன் பிறகு கூப்பிட்டு கொள்கிறேன்.. “

‘ப்ரயு நீ என்னம்மா சொல்கிறாய் “ என்று அவளிடமும் அபிப்ராயம் கேட்டார்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.