(Reading time: 22 - 44 minutes)

பிரயுவின் தங்கைகள் “ அக்கா.. மாமா. எங்களை மன்னித்து விடுங்கள்.. என்னதான் நடிப்பு என்றாலும் நாங்கள் கொஞ்சம் அதிகமாக பேசி விட்டோம்.. “

ப்ரயு இருவரையும் பார்த்து “எனக்கு தெரியும் உங்களை பற்றி.. என்ன கொஞ்சம் வருத்தம் தான் இருந்தது.. இப்போ எதுவும் இல்லை.. “என்று இருவரையும் சமாதானம் செய்தாள்.

அப்போது அவர்கள் கொண்டு வந்த bag ஐ பிரிக்க சொன்ன ஆதி, ப்ரயு தங்கைகள் இருவருக்கும் சின்ன சின்ன நகைகள், மேக் up செட், அவர்கள் கணவன்மார்களுக்கு வாட்ச் எல்லாம் எடுத்து கொடுத்தான்.. குழந்தைகளுக்கு ரெண்டு மூன்று டாய்ஸ் ... டிரஸ் எல்லாம் கொடுத்தான்.

ப்ரயு அப்பா அம்மாவிற்கும் நல்ல ஷால், சில பொருட்கள் எல்லாம் வாங்கி வந்து இருந்தான்..

எல்லாரோடும் பேசி சிரித்து விட்டு, இரவு உணவும் அங்கேயே முடித்துக் கொண்டு தங்கள் வீடு திரும்பினர்..

தங்கள் வீட்டிற்கு வந்தவுடன்  ஆதி பிரயுவிடம் மருந்தெல்லாம் சாப்பிட சொல்லி கொடுத்தான்.

“ஆதிப்பா.. நீங்கள் எனக்கு ஒண்ணுமே வெளிநாட்டிலிருந்து வாங்கி வரவில்லையே ?” என வினவ,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "நெஞ்சோரமா என் நெஞ்சோரமா..." - காதல் கலந்த குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்...

“ஏன் வாங்கலை.. ? “

“அப்போ கொடுக்கலை.. “

“ம். .அது கொடுக்க நேரம் வரும்போது தரப்படும்” என்றான்.. அவனுக்கு அழகு காட்டினாள் அவனின் ரதி..

“குட்டிமா.. இப்படி எல்லாம் சீண்டினால் நான் கிளீன் போல்ட் ஆகி விடுவேன்.. கொஞ்சமே கொஞ்ச நாள் என்னை நல்ல பையனாக இருக்க விடேன்..” என்றபடி அவளின் தலையில் செல்லமாய் முட்டினான்.

மறுநாள் பிரயுவின் தங்கைகள் வீட்டிற்கு ஆதியோடு சென்று, தங்கைகள் மாமியார், மாமனார் எல்லோரையும் நேரில் பார்த்து விட்டு வந்தனர். வித்யாவையும் இருவரும் அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தனர்.

ஒரு நல்ல நாளில் புது வீட்டில் பால் காய்ச்சி வந்தனர் ஆதியின் குடும்பம். பெரிய அளவில் இல்லாமல், இவருடைய குடும்பத்தினர், பிரபு பிரியா மட்டும் அழைத்து இருந்தனர்.

இப்படியே நாட்கள் நகர, ஆதியின் அம்மா, தங்கை அவள் குடும்பம் லண்டன் கிளம்ப, எல்லோரும் அவர்களை வழியனுப்ப சென்றனர். அன்று மாலை பிரயுவை hospital அழைத்து சென்றான் ஆதி.

டாக்டர் பத்து நாட்கள் கழித்து அவளை மறுபடி செக் up வர சொல்லியிருந்தார். டாக்டர் பிரயுவை செக் செய்து நார்மலாக இருப்பதாக சொன்னார். இருவரும் கிளம்பும் போது

“ப்ரயு.. நீ எப்போ duty join பண்றமா?”

ப்ரயு ..ஆதியை பார்க்கவும், ஆதி

“டாக்டர் இன்னும் பதினைந்து நாட்கள் கழித்து சேரட்டும்.. “ என்றான்.. அவரும் சரி எனவே, இருவரும் கிளம்பினர்.

“ஏன்.. ஆதிப்பா .. நான் நன்றாக இருப்பதாக டாக்டர் சொல்லிட்டாங்களே.. பிறகு ஏன் பதினைந்து நாட்கள் கழித்து join பண்ணனும்?”

“ஹ்ம்ம்.. ஏன் குட்டிம்மா.. என்னை பற்றி நினைச்சு பார்க்கவே மாட்டியா..?

“ஏன்..? என்னாச்சு?”

“நமக்கு கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆச்சு.. இன்னும் நமக்குள்ளே ஒண்ணுமே நடக்கலே? அத பத்தி யோசி ..” என்றவன், அவள் முகம் சிவக்கவும் சிரித்து விட்டு அழைத்து சென்றான்.

கார் நேராக வீட்டிற்கு செல்லமால், விமான நிலையம் சென்றது..

“ஆதி.. இப்போ நாம எங்கே போறோம்?”  

“honeymoon போறோம் ..”

“என்ன தீடீர்னு.. ? “

“நீயும் நானும் வேலைக்கு சேரும் முன் போய் வரலாம் என்று தான்?”

“ஆனால் டிரஸ் எல்லாம் எடுத்து வைக்காமல்..? யார்கிட்டயும் சொல்லவே இல்லியே?”

“எல்லோருக்கும் தெரியும்.. டிரஸ் எல்லாம் நான் எடுத்து வச்சிட்டேன்..” என்று சொல்லும் போதே...

பிரயுவிற்கு போன் வர,

“ஹேய்.. ப்ரியா.. சொல்லு.. பா “

“ஹாப்பி ஜெர்னி .. ப்ரத்யா டியர்.. “ என்றாள்.

“ஹேய்.. உனக்கு எப்படி தெரியும்? எனக்கே இப்போதான் சொன்னார்..?”

“ஹலோ.. மேடம்.. நான் உன் friend மட்டும் இல்ல.. ஆதி அண்ணாவின் தங்கையும் கூட.. அதோட என் பெட்டெர் half உம் எங்கிட்ட சொல்லிட்டாங்க..”

“ஹ்ம்ம்.. சரி ..”

“ப்ரத்யா.. நடந்ததெல்லாம் மறந்து விட்டு .. அண்ணாவோட நல்லா என்ஜாய் பண்ணிட்டு வா.. மனசுலே இருக்கிற எல்லாத்தையும் அவர்கிட்ட பேசு.. சரியா?”

“சரிம்மா.. “ என, பிரபுவும் ஆதியிடம் பேசி வாழ்த்தினான்..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.