(Reading time: 22 - 44 minutes)

த்தை நீங்கள் தவறாக நினைக்கவில்லை என்றால், நம் உதவி தேவைப்படும்போது நீங்கள் போய் விட்டு வரலாம் .. வித்யாவிற்கு உதவுவது போலவும் இருக்கும்.. இடமாற்றம் உங்களுக்கும் நல்ல மாறுதலாக இருக்கும்”

“அப்படி என்றால் சரி.. “ எனவும் ,

“அப்போ .. மாப்பிள்ளை .. அம்மா எப்போ கிளம்புவது போல் இருக்கும்.. ?” என்று வினவினான் ஆதி.

“இன்னும் பதினைந்து நாட்களில் இருக்கும் “ என்றார்,

“அப்போ ... ப்ரயு உங்கள் அப்பா, அம்மாவையும் கிளம்பி நான் சொல்லும் அட்ரஸ்க்கு இப்போ கிளம்பி வரசொல்லு.. நாமும் கிளம்பலாம் .. “ என்றான்.

“எங்கே.. “ என்று எல்லோரும் கேட்க,

“போனவுடன் தெரிந்து விடும் ..” என்றபடி .. தன் நண்பன் பிரபுவையும் வர சொன்னான்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

வத்சலாவின் "வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

எல்லோரையும் ப்ரயு வேலை செய்யும் hospitalக்கு அடுத்த ஏரியா விற்கு அழைத்து சென்றான்.. அங்கே புதிதாக கட்டப்பட்ட பில்டிங் ஒன்றிற்கு சென்று, அங்கே முதல் தளத்தில் ஒரு வீட்டிற்கு அழைத்து சென்றான்.

“அம்மா, ப்ரயு.. உங்களுக்கு surprise ஆக இருக்கட்டும் என்று எண்ணி இதை பற்றி சொல்லவில்லை. இந்த வீட்டை நான் வாங்கி விட்டேன்.. நான் ஊரிலிருந்து வந்த பின் registration முடித்தேன்.. பிரபுதான் வாங்க ஹெல்ப் செய்தான்..”

“இப்போ என்னடா தீடிரென்று?’

“இல்லை மா.. .இவ்ளோ நாள் பரவாயில்லை.. இனி நம் குடும்பம் பெரிதாகும். உங்களுக்கும் தனியாக ரூம் வேண்டும். வித்யா வந்தாலும் தங்குவதற்கு தனி ரூம் வேண்டும்.. அதனால் .. நாலு பெட் ரூம் உள்ள வீடாக பார்த்தேன்.. அம்மா நீங்கள் ஊருக்கு செல்ல போவதால் அதற்குள் நாம் இங்கே பால் காய்ச்சி விடலாம்.. பிறகு நாங்கள் வீடு ஷிபிட் செய்து கொள்கிறோம்”

ஆதி இந்த விஷயத்தை பற்றி சொல்லாதது ப்ரயு, ஆதி அம்மா இருவருக்கும் சின்ன வருத்தம்தான் என்றாலும், ஒருவகையில் இதுவும் நல்லது தான் என்று எண்ணி கொண்டனர்..

அப்போது அங்கே வந்த ப்ரயு அப்பா, அம்மாவிற்கும் விஷயம் சொல்லப்பட, எல்லோரும் மகிழ்ச்சி அடைந்தனர்..

அங்கிருந்து அவரவர் வீட்டிற்கு செல்ல, மாலையில் ஆதி பிரயுவிடம்

“ரதி .. நாம் உன் அப்பா வீட்டிற்கு போய் வரலாம்.. வா .. “ என்றான்..

அவளும் சரி என, தன் கப்போர்டில்  வைத்து இருந்த ஒரு பாக் எடுத்துக் கொள்ள சொன்னான்..

இருவரும் அவர்கள் வீட்டிற்கு சென்று வாசல் கதவில் கையை வைக்க, உள்ளே இருந்து வந்த பேச்சுக் குரலில் பிரயுவின் பேர் கேட்க, தட்டாமல் விட்டார்கள்.

பிரயுவின் பெற்றோர் வீட்டில் அவள் தங்கைகள் வந்திருக்க, அவள் அப்பா அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்..

“ஏம்மா பவி, தாரிணி .. நீங்கள் ஏன் பிரத்யாவிடம் அப்படி நடந்து கொண்டீர்கள்? என்னதான் மற்றவர்கள் சொன்னாலும்.. ப்ரதயா உங்களையோ, குழந்தைகளையோ பார்த்து பொறமை படுவாளா? மற்றவர்களுக்கு அவளை பற்றி தெரிய விட்டாலும், உங்களுக்கு தெரியாதா?” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

ப்ரயு மேலே உள்ளே சொல்ல எட்டு வைக்க, ஆதி தடுத்தான்..

“அப்பா.. நீங்கள் கூட தவறாக புரிந்து கொண்டீர்களே.. எங்களுக்கு முதலில் எல்லாம் ஒன்றும் தோன்றவில்லை.. எங்களுக்கு திருமணம் ஆன பின் தான் .. அக்கா தன் வாழ்க்கையில் எதை இழந்து கொண்டிருக்கிறாள் என்று புரிய ஆரம்பித்தது.. அதை பற்றி நாங்கள் எங்கள் கணவர்களிடம் அடிக்கடி புலம்பி கொண்டிருந்தோம்.. அப்போது அவர்கள் தான் இந்த ஐடியா கொடுத்தார்கள்.”

“ஆமாம்.. மாமா.. இவர்கள் மிகவும் வருத்தபடவும், நாங்கள் தான்.. நீங்கள் உங்கள் அக்காவை வெறுப்பு ஏற்றுங்கள்.. மற்றவர்கள் சொல்வதை விட, சொந்த தங்கைகளே தன்னை மதிக்கவில்லையே என்ற எண்ணம் தோன்றும். அப்போதுதான் ஒன்று அக்கா .. மாமாவோடு அங்கே செல்வார்கள். .இல்லை மாமாவை பிடித்து நச்சரித்து அவர்களை இங்கே வரவழைப்பார்கள் என்று கூறினோம். அத்தைக்கும் அது புரிந்ததால் தான் எங்களோடு ஒத்துழைத்து, இவர்கள் இருவரையும் கண்டுக்காமல் விட்டார்கள்,,”

ப்ரயு ஆதியின் முகத்தை பார்த்தாள்..

பிறகு இருவரும் உள்ளே சென்றனர்.. அவர்களை பார்த்த நால்வரும் சற்று தடுமாறி பிறகு ஒன்று போலே “சாரி என்றனர்’

ஆதிதான் “அதெல்லாம் எதற்கு .. ? நான் நேற்றுதான் ஒரு பாடம் கற்றுக் கொண்டேன்.. நாம் நினைப்பது எல்லாம் செயல் வடிவில் வரும்போது நாம் எதிர்பார்த்த விளைவுகளை கொடுப்பதில்ல என .. இன்றைக்கு உங்களுக்கு அந்த பாடம் கிடைத்து இருக்கும்’

எல்லோரும் திரு திருவென முழிக்க, ப்ரயு “ஒன்றும் இல்லை விடுங்கள்.. நானும் ஒரு பாடம் கற்றுக் கொண்டேன்.. எந்த ஒரு செயலுக்கு பின்னும் செய்பவர்களின் நியாயத்தை கேட்க வேண்டும் என்று”

ஆதியின் சகலைகள் “சுத்தமா ஒன்னும் புரியவில்லை” என,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.