(Reading time: 25 - 50 minutes)

வியும் யுக்தா வாங்கிக் கொடுத்த ஆடையை வாங்கிக் கொண்டு ட்ரயல் ரூமிற்கு போனதும்... "இதுங்க பேசிக்காதப்பவே இதுங்க அலப்பறை தாங்கலையே... இன்னும் பேசிக்கிட்டா என்னாகுமோ... அப்பா பிருத்வி இதுங்க நடுவுல நான் தனியா மாட்டிக்கிட்டு முழிக்கிறேன்... சீக்கிரமா உன் பொண்டாட்டிய வீட்டுக்கு கூட்டிட்டுப் போப்பா சாமி..." என்று புலம்பினான்.

பின் ஆண்களுக்கான ஆடைகள் இருக்கும் இடத்திற்கு சென்று... தேவாவிற்கு ஆடை தேர்ந்தெடுத்தனர்...

"தேவா இது நல்லா இருக்கும்... இல்ல இது நல்லா இருக்கும்..." என்று மாற்றி மாற்றி இருவரும் அவர்கள் தேர்ந்தெடுத்த ஆடையை காமிக்க... எதை எடுப்பது என்று அவன் குழம்பினான்... பின் இருவரும் ஆளுக்கொன்றை தேர்ந்தெடுத்து கையில் வைத்துக் கொண்டு... இதை தான் அவன் வாங்க வேண்டும் என்றனர்.. இரண்டில் எதை தேர்ந்தெடுப்பது என்று யோசித்தவன்... யுக்தா கையில் இருப்பதை வாங்கிக் கொண்டான்...

சந்தோஷப்பட்ட அவள்... " வாங்க பில் போடலாம்.." என்று சொல்லிவிட்டு முன்னே போக...

"இப்போ மேடம்க்கு சந்தோஷமா இருக்குமே... நான் யுக்தா எடுத்ததை வாங்கிக்கிட்டதுக்கு..." என்றான் சங்கவியை பார்த்து....

"ம்ம் சந்தோஷம் தான்... அதுக்காக இந்த டீ-ஷர்ட்டும் உனக்கு தான்... இதுக்கு நீ காசு கொடுக்க வேண்டாம்... நானே கொடுக்கறேன்.." என்று சொல்லிவிட்டு அவளும் பில் போடும் இடத்திற்கு செல்ல... "டேய் நீ இவ்ளோ பண்றதுக்கு உனக்கு இந்த டீ-ஷர்ட் தான் மிச்சமா.." என்று நொந்துக் கொண்டான்.

பின் ஷாப்பிங்கை முடித்து மூவரும் வெளியே வரும்போது... "அய்யோ நான் என்கிட்ட இருந்த ட்ரஸ் கவரை கடையிலேயே வச்சிட்டு வந்துட்டேன்ன்னு நினைக்கிறேன் தேவா... நீங்க எதிர்ல இருக்க ஜூஸ் கடைக்கு போய்ட்டே இருங்க... நான் அதை எடுத்துக்கிட்டு வந்துட்றேன்..." என்று சொல்லிவிட்டு அவர்கள் பதில் பேசும் முன் யுக்தா கடைக்குள் சென்றுவிட்டாள்..

"ஹே யுக்தா... நான் போறேன்..." என்பதை கூட கவனிக்காமல் அவள் செல்லவே... "தேவா நீயும் உள்ள போ... நான் ஜூஸ் கடையில வெய்ட் பண்றேன்..." என்றாள் சங்கவி.

கடைசியாக ஆடைகள் எடுத்த மூன்றாவது ஃப்ளோரில் தான் பில் போட்டது என்பதால்... தேவா அங்குப் போனால்... அவளோ இன்னொரு டீ-ஷர்ட்டை கையில் எடுத்து பில் போட்டுக் கொண்டிருந்தாள்...

"இதுக்கு தான் கவரை வேணும்னே வச்சுட்டு வந்தியா..." என்று தேவா கேட்டான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

VJ Gன் "அனு என் அனுராதா..." - காதல் கலந்த குடும்ப தொடர்

படிக்க தவறாதீர்கள்...

"இல்லை தேவா... இந்த டீ-ஷர்ட்டை பார்த்ததும் பிருத்விக்கு நல்லா இருக்கும்னு தோனுச்சு... அந்த வனதேவதை முன்னாடி வாங்கினா... காச் மூச்ன்னு கத்துவா... அதான் இப்படி..." என்று கூறினாள்.

பின் அதற்கும் பில் போட்டு அதை வாங்கிக் கொண்டு வெளியே வரும்போது... "இத உடனே பிருத்விக்கு கொடுக்கனும்னா சொல்லு... பிரணதி கிட்ட சொல்லி கொடுக்கலாம்..." என்றான் தேவா.

"இல்லை நானே நேரம் வரும்போது கொடுத்துக்கிறேன்..." என்று அவள் சொன்னாள்... பின் இவர்கள் கடையிலிருந்து வெளியே வரவும்... சப்னா உள்ளே நுழையவும் சரியாக இருந்தது...

இவர்கள் இருவரையும் ஒன்றாக பார்த்த சப்னா... "என்னடா இது பிருத்விய விட்டு போய்ட்டியேன்னு பார்த்தேன்... இப்போ தானே தெரியுது ஏன் போனேன்னு... பிருத்வி கூட லைஃப் போர் அடிச்சிடுச்சுப் போல..." என்றாள் கிண்டலாக...

அவள் பேசிய விதம் தேவாவிற்கு கோபத்தை வரவழைத்தாலும்... அவர்கள் நின்றிருக்கும் இடத்தை நினைத்து பொறுமையாக... "யுக்தா வா போலாம்... தேவையில்லாத பேச்செல்லாம் எதுக்கு..." என்று அவளை அழைத்தான்.

"ஹே வெய்ட் வெய்ட்... நீ எப்படி இருந்தா எனக்கென்ன யுக்தா... நீ யார் கூட சுத்தனாலும் நான் கவலைப்பட போறதில்ல... இது எனக்கு தேவையில்லாத விஷயமும் கூட..  ஆனா நீ பிருத்வியை விட்டு ஒரேடியா பிரிஞ்சு என்ன வேணாலும் செஞ்சுக்கோ உன்னை யார் கேக்கப் போறாங்க... அத விட்டுட்டு... பிருத்விக்கிட்ட கோச்சுக்கிட்டு போறதாம்... அப்புறம் வர்றதாம்... ஆனா பிருத்வி வீட்ல இருக்க மாட்டீங்களாம்...

ஏன் இப்படி பிருத்விக்கு டார்ச்சர் கொடுக்கற... ஏதோ உன்னை தொட்ட பாவத்துக்கு கட்டிக்கிட்டாரு... கட்டிக்கிட்ட பாவத்துக்கு வச்சு வாழனும்னு நினைக்கிறாரு... நீ அவரை விட்டு விலகனும்னு நினைச்சா ஒரேடியா விலகி போக வேண்டியது தானே... நாங்களாவது சந்தோஷமா வாழ்வோம்..." என்று சப்னா பேசிக்கொண்டு போக...

பொது இடம்னு கூட இல்லாம எப்படி பேசறாப் பாரு... என்று நினைத்த தேவா.. "ஏய்" என்று அழைத்து ஏதோ பேசும் முன்.... "தேவா கொஞ்சம் அமைதியா இரு.." என்று தடுத்த யுக்தா சப்னாவிடம்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.