(Reading time: 25 - 50 minutes)

"நீ சொன்னதை வச்சு அண்ணிக்கிட்ட நான் எதுவும் கேக்க மாட்டேன்..." என்று சொல்லிவிட்டு பஸ் வரவும் பிரணதி பஸ்ஸில் ஏறிவிட்டாள்.

என்னதான் சப்னா பேச்சை நம்பமுடியாது என்றாலும்... இத்தனை நாள் இல்லாமல் இன்று ஏன் அவள் அண்ணன் அண்ணியின் விவாகரத்தை பற்றி பேச வேண்டும்... ஒருவேளை நிஜமாகவே யுக்தா அண்ணி இதைப்பற்றி சப்னாவிடம் சொல்லியிருப்பார்களா...?? என்று அவள் மனம் குழம்பியது....

வீட்டிற்கு வந்ததும் மூவரிடமும் சப்னா பேசியதை பிரணதி கூறிவிட்டாள்... பிருத்வி உட்பட மூவருக்கும் யுக்தா விவாகரத்தை பற்றி பேசியது குறித்து அதிர்ச்சிதான்... ஒருவேளை சப்னா பொய் கூட சொல்லியிருக்கலாம் என்று ஒரு பக்கம் ஆறுதல் தேடிக் கொண்டனர்... எந்த காரணம் கொண்டும் அண்ணியை டைவர்ஸ் பண்ணாதீங்க அண்ணா.." என்று பிரணதி பிருத்வியிடம் வேண்டுக்கோள் வைத்தாள்...

மதியோ விஷயத்தை சுஜாதாவிடம் கூறிவிட்டாள்... நேராக இந்த விஷயத்தை யுக்தாவிடம் கேட்க மதிக்கு சங்கடமாக இருக்கவே... சுஜாதாவிடம் விஷயத்தை தெரியப்படுத்தினாள்... அதைக்கேட்டு சாவித்திரியும் சுஜாதாவும் அதிர்ந்தனர். ஏதோ யுக்தா வரும்போது பிருத்வி வீட்டுக்கு இப்போது போவதை பற்றி பேச வேண்டாம் கொஞ்ச நாள் இங்கேயே இருக்கட்டும்... என்று தேவா கூறியதால் அமைதியாக இருந்தனர்.... இப்போதோ விஷயம் விவாகரத்து வரை போனதால் இந்த மூன்று அன்னையர்க்கும் கொஞ்சம் அதிர்ச்சியே...

அன்று எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது சுஜாதாவே யுக்தாவிடம் பேச்சை ஆரம்பித்தாள்... அன்று தேவாவை தவிர எல்லோரும் வீட்டில் இருந்தனர்...

"யுக்தா நீ அந்த சப்னாக்கிட்ட பிருத்வியை டைவர்ஸ் பண்றதா பேசினியாமே...?? அது உண்மையா...??" என்று சுஜாதா கேட்டதும்... யுக்தா அதிர்ந்தாள் என்றால்... கவியோ இதுதான் துணிக்கடையில் சப்னாவோடு இவங்க நின்று பேசிக் கொண்டிருந்த விஷயமா என்று நினைத்தாள்.

"என்ன அமைதியா இருக்க யுக்தா... பதில் சொல்லு...??" என்று சுஜாதா கேட்டதும்...

"எனக்கு என்னமோ இப்பத் தான் இவ சரியான முடிவு எடுத்ததா தோனுது சித்தி..." என்று கவி கூறினாள்... ஏனோ பிருத்வியை கண்டாலே கவிக்கு பிடிக்கவில்லை... என்னதான் யுக்தா திட்டம்போட்டு பிருத்வியை மணந்ததாக பிருத்வி சொன்னதும்... அதை யுக்தாவும் ஒத்துக் கொண்டதை கவி நம்பி அவள் மேல் கோபமாக இருந்தாலும்.... போதையில தான் விரும்பாத பொண்ணுக்கிட்ட தப்பா நடந்துக் கொண்டான் என்றால்... அவன் கேரக்டர் சரியில்லாம தானே இருந்திருக்கும் என்பதும்... கல்யாணம் முடிந்தும் அவள் வீட்டை விட்டு போகும் அளவிற்கு அவன் இருந்திருக்கிறான்... அவனோடு இப்படி ஒரு வாழ்க்கை வாழ்வதற்கு அவள் ஒரேடியாக பிரிந்து விடுவது நல்லது என்றே கவிக்கு தோன்றியது... அதனால் தான் இப்படி கூறினாள்...

கவி அப்படி சொன்னதும்.... சாவித்திரியோ... " கவி பெரியவங்க பேசும்போது என்ன இப்படி அதிகபிரசங்கிதனமா... வாயை மூடு..." என்று அதட்டினாள். பின் கவியும் பேசாமல் இருக்க...

"என்ன யுக்தா கேக்கறதுக்கு பதில் சொல்லு.." என்று சுஜாதா கேட்டதும்... "அம்மா அந்த சப்னா என்னை வெறுப்பேத்தற மாதிரி  பேசினா... அதுக்கு தான் நான் அப்படி சொன்னேன்... வேற ஒன்னும் இல்லம்மா.." என்று யுக்தா கூறினாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

"அவ பேசினா... என் புருஷனை என்னால விட்டுக் கொடுக்க முடியாதுன்னு சொல்வாங்களா...?? இல்லை டைவர்ஸ் பத்தி பேசுவாங்களா..?? ஏன் யுக்தா இப்படியெல்லாம் பண்ற..." என்று சுஜாதா கோபமாக பேசியதும்...

"இப்போ அவ கொலைகுத்தம் பண்ண மாதிரி எதுக்கு இப்போ இப்படி கோபப்பட்ற சுஜாதா... இப்போ டைவர்ஸ் வேணும்னு கோர்ட்டுக்கா போயா அவ நின்னா... எதுக்குமே அவளை கட்டாயப்படுத்தாம அமைதியா இரு... அவளுக்கு என்ன பண்ணனும்னு தெரியும்..." என்று மாதவன் சுஜாதா மீது கோபப்பட்டார்...

இந்த கல்யாணமே தன் மகள் செய்த தவறுக்கு அவளுக்கு கொடுக்கப்பட்ட தண்டனையாக தான் மாதவனுக்கு தெரிந்தது... அந்த பிருத்வியை காதலிச்சாளோ.... அவனை திட்டம்போட்டு மணக்க வேண்டும் என்று நினைத்தாளோ... ஆனால் அவள் தவறு செய்துவிட்டு வந்த நேரத்தில் இந்த திருமணம் வேண்டாமென்று தானே மறுத்தாள்... அவளை கட்டாயப்படுத்தி தானே இந்த திருமணம் நடந்தது... இதில் அவளுக்கு சந்தோஷம் இல்லையே... என்பது தான் மாதவனுக்கு வருத்தம்...

மாதவன் அப்படி பேசியதும்... இப்போது இந்த விஷயத்தை பேசுவது சரியாக இருக்காது... பிறகு பேசிக் கொள்ளலாம் என்று சாவித்திரி ஜாடையாக சொன்னதும்.... சுஜாதாவும் அமைதியாக இருந்துவிட்டாள்.

அன்று வீட்டில் யாரும் இல்லாமல் யுக்தா தனியாக இருந்தாள்... சாவித்திரியும் சுஜாதாவும் சிறிது நேரத்திற்கு முன்னே தான் கோவிலுக்கு கிளம்பி போயிருந்தனர்... மாதவனும் தன் நண்பர் ஒருவரை பார்க்க வெளியே போயிருந்தார்... தேவாவும் கவியும் வரூன் மற்றும் பிரணதியோடு சினிமா போயிருந்தனர்.... இந்த சினிமா திட்டத்தை போட்டதே யுக்தா தான்...

அண்ணன் அண்ணி விஷயம் டைவர்ஸ் வரைக்கும் போனதுக்கு நாம தான் காரணம்... அன்னைக்கு உங்களை கோவிலுக்கு வரச் சொல்லி இருக்கக் கூடாது என்று பிரணதி திரும்பவும் புலம்புவதாக வரூன் கூறவே... நாம எல்லாம் வெளிய போகலாம்... அப்போ அவ கொஞ்சம் ரிலாக்ஸா இருப்பா என்று யுக்தா தான் இந்த திட்டத்தை கூறினாள்... அதனால் வரூனும் சினிமாவிற்கு டிக்கெட் புக் செய்திருந்தான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.