(Reading time: 11 - 22 minutes)

ப்படி ஓர் நல்லுறவு வாய்த்திடுமா 

வீட்டுக்குள் விண்மீன்கள் காய்த்திடுமா 

திருமண மலர்கள் தருவாயா 

தினம் ஒரு கனியே தருவாயா 

வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே 

கன்னம் கிள்ளும் மாமி 

காதை திருகும் மாமா 

என்போல சொந்தங்கள் யார்க்கு உண்டு 

மாதம் பத்து செல்ல 

மழலை பெற்றுக்கொள்ள

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "என்னை ஏதோ செய்து விட்டாய்..." - நெஞ்சுக்குள் நீ மட்டும். எல்லாம் மறந்தேன். எனை என்ன செய்தாய்...

படிக்க தவறாதீர்கள்...

 

அம்மம்மா தாய்வீடு ரெண்டு உண்டு 

பாவாடை அவிழும் வயதில் 

கைறு கட்டிவிட்டவன் எவனோ 

தாலி கட்ட வந்தவன் அவனே உறவானவன் 

கொழுசுயிடும் ஓசை கேட்டே 

மனசில் உள்ள பாஷை சொல்வாய் 

மழை நின்ற மலரை போல பதமானவன் 

உறவெல்லாம் ஒன்றாய் ஒன்றாய் கூடியவன் 

தெய்வங்களும் எங்களைதான் நேசிக்குமே 

தேவதைகள் வாழ்த்து மடல் வாசிக்குமே 

திருமண மலர்கள் தருவாயா 

தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே 

தினம் ஒரு கனியே தருவாயா 

வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே 

மலர்வாய் மலர்வாய் கொடியே 

கனிவாய் கனிவாய் மரமே 

நதியும் கரையும் அருகே 

நானும் அவனும் அருகே 

பிறந்த இடம் புகுந்த இடம் வேறு இல்லை 

ஞாயிறுக்கும் திங்களுக்கும் தூரம் இல்லை 

ரேடியோவில் ஓடிய பாடல் இவள் எண்ணத்தை பிரதிபலிப்பதாய் ......

தட தடக்கும் மனதுடன் வண்டியில் இருந்து இறங்கி உள்ளே  போனால் ... விக்ரம் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை ... 

வாம்மா என குரல் கேட்க இவள் நிமிர்ந்து பார்த்தால் கம்பீரமாக கட்டியிருந்த காட்டன் புடவையிலும் மிக பாந்தமாக .. நம்ம காலண்டர் மஹாலக்ஷ்மி மாதிரி ஒருவர் சோபாவில் அமர்ந்திருந்தார் ..

பார்த்ததும் விக்ரமின் அம்மா என புரிந்தது ... இவர்களின் கம்பீரத்தின் ஆண்பால் தான் விக்ரம் என மனம் கூறியது ..

சுத்தி வளைக்காமல் முகமன் கூறாமல் நேராக நீ ஏன் பையனை விரும்புகிறாயா என்றதும் காலையில் சாப்பிட்ட  ... இட்லி பீஸ் பீஸ் இல்லாமல் ஒன்றாகி வந்து தொண்டையில் அடைத்தது ...

மனதில்மாரியம்மா ... மாரியம்மா பாடலின் ரீ ரெகார்டிங் மெலிதாய் ஒலித்தது ..

ரஞ்சி .. நிமிர்ந்து அவர் முகம் பார்த்து உங்க பையனும் என்னை விரும்புகிறார் என்றால் ( மனதில் லூசே ஆஹ் ம நீ இது அவங்களுக்கு தெரியாதா என தோன்றியது )..

 

சில நொடிகள் அவளை கூர்ந்து நோக்கியவர் பின் " எனக்கு தெரியும் அவன் உன்னை விரும்புவதும் உன்னை கல்யாணம் செய்ய முடிவெடுத்திருப்பதும் ..."

இதுக்கு என்ன ரியாக்ஷன் கொடுப்பது என மூளை எல்ல பாரதி ராஜா படத்தையும் அலசி கொண்டிருக்க ..

அனால் இந்த கல்யாணம் நடக்க கூடாது .... ( ஒரு பிரளயம் வந்தது போல் உணர்ந்தாள் )

காதில் விழுந்தது நிஜம் தானா ????? நிமிர்ந்து முகம்பார்க்க எந்த ஒரு மாற்றமும் இல்லமால் இவள் கேட்ட வார்த்தைகளை மீண்டும் உதிர்த்து அந்த உதடுகள் ....

சட்டென கண்ணீர் உருண்டோடியது .... பாதங்களை ஊனி தன்னை சீர்செய்தவள் .. 

நிமிர்ந்து இதை உங்கள் பையனிடம் கூறினீர்களா ????

என் மகன்  கேட்டு நன் எதுவும் இல்லை ,முடியாது என்று கூறியது இல்லை ... இவன் இதை பற்றி கேட்கப்போகிறான் என அறிந்ததும் தான் தாமதியாது அவனை தொழிலாளர் பிரச்சனை கவனிக்க சொல்லி அனுப்பிவிட்டு நான் உன்னை பார்க்க வந்தேன் ....( ஆக எல்லாம் இவர்களின் நாடகமா ???)

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.