(Reading time: 11 - 22 minutes)

ங்க பாரு நான் அந்தஸ்து பார்த்து உன்னை வேண்டாம் என்று சொல்லவில்லை .. ஏன் மகன் உன்னை விருபுகிறான் என்றால் நீ எல்ல விதத்திலும் மிகவும் நல்ல பெண் என்று எனக்கு தோன்றுகிறது ... ஆனால் இப்போது ஏன் குடும்பம் இருக்கும் சூழ்நிலையில் உன்னை மணமுடித்து வைப்பது சரிவராது ... உன்கிட்ட இதுபத்தி சொல்லணும்னு அவசியம் இல்லை ..... இருந்தாலும் நீ பிரச்சனை பண்ணாம விலகனும்ன்ன உனக்கு இது எல்லாம் தெரியறது நல்லது.

எங்க குடும்பம் ரொம்ப  நல்ல குடும்பம் ... விக்ரம் முதல் பையன் ... அவனுக்கு அப்புறம் ஒரு பொண்ணு ( ஷக்தி ) இன்னும் ரெண்டு பசங்க ..

எங்களுக்கு நிறைய சொத்து உண்டு அது உனக்கு தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன் ... கொஞ்ச காலமா விக்ரம் அப்பாக்கு உடம்பு சரி இல்லை அதனால பிசினஸ் லாஸ் ..அது பத்தி நீ ரொம்ப தெரிஞ்சிக்க தேவை இல்லை ... 

எங்களுக்கு சமமான சொத்து உள்ள பொண்ணு வந்தா எங்க பிரச்சனை தீரும் என் பொண்ணு கல்யாணமும் நல்ல படிய நான் நினைச்ச மாதிரி நடக்கும் ... உங்க கல்யாணத்தினால ஏன் பொண்ணு வாழ்க்கைல கஷ்ட்டப்படக்கூடாது ...

என் பையன்கிட்ட இதுபத்தி பேசமுடியும் கண்டீப்பா அவன் சண்டை போடுவான் ஒரு விதமா என்னால் அவனை சமாளிக்க முடியும் ஆனால் அது எங்களுக்குள் ஒருவித விரிசலை கொடுக்கும் .. எங்கள் உறவு அவன் ஏன் கருவில் உருவான பொது தொடங்கியது அதன் விரிசலை அவனாலும் என்னாலும் தாங்கிக்கொள்ள முடியாது ..

உன் உறவு சில காலமாகத்தான் உன் பிரிவு அவனை வருந்தினாலும் அவன் மீண்டு விடுவான் அதற்கான முயற்சி நானும் செய்வேன் ... அவனுக்கு நான் முடிவு பண்ணி இருக்கும் பெண் வீணாவும் செய்வாள் ..

நான் கேட்பது தப்புதான் நியாயம் இல்லைதான் ஆனா எனக்கு வேற வலி இல்லை .... என்  புள்ளைங்க வாழ்க்கை எனக்கு முக்கியம் .... உன்கிட்ட மடிப்பிச்சை கேட்கிறேன்மா என் அவர் கண்ணீர் மல்க கேட்க அதிர்வது ரஞ்சி முறை ஆனது .. இவ்வளவு நேரம் இருந்த கம்பீரம் பொய் ஒரு சராசரி தாயாய் அவள் முன் கேட்கவும் ..ரஞ்சிக்கு ஒன்னும் புரியவில்லை ....

அவன் வர இன்னும் ஒரு நாள் இருக்கு இன்று ஒருநாள் நீ எடுத்துக்கொள் நாளை நல்ல முடிவாக சொல்லுமா ... 

நீ எடுக்கும் முடிவு எதுவானாலும் இன்று நாம் பேசியது அவனுக்கு தெரியவேண்டாம் ..உன் முடிவு எதுவானாலும் அதை ஏற்றுக்கொள்ளுவேன் ... நான் கேட்டது நடந்தால் மிகவும் நன்றிக்கடன் படுவேன் என்று கூறிவிட்டு .... இத்துடன் இந்த பேச்சு வார்த்தை முடிந்தது என எழுந்து விட்டார் ..

அங்கிருந்து எப்படி வந்து சேர்ந்தால் என்று கேட்டால் இன்றுவரை அவளுக்கு தெரியாது ..பழகிய கால்கள் தானாக அவளை விடுதிக்கு சேர்த்து விட்டது .. காதலின் வலி என்ன என்று அன்று தான் அவள் உணர்ந்தாள் ..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

VJ Gன் "அனு என் அனுராதா..." - காதல் கலந்த குடும்ப தொடர்

படிக்க தவறாதீர்கள்...

நிறைய யோசித்தவள் தன்னவனின் சந்தோஷத்திற்க்காய் ... அவனின் குடும்பத்தின் நிம்மதிக்காய் இவள் தன் காதலை தியாகிக்க முனைந்தால் 

விலகி செல்கிறேன் என்பதற்காக 

விட்டு செல்கிறேன் என்று 

அர்த்தமில்லை என் சகியே....... 

மனதால் உன்னை விட்டு பிரிய 

இயலாமலே இந்த விலகல்........ 

கண்ணீர் துளிகளில் மாலை 

ஓன்று கோர்த்து புதைத்து 

வைத்திருக்கிறேன் என் 

காதல் இதயத்தில்....... 

நீ என்னை காணும்போது என் 

காதலின் சாட்சியாக உனக்கு 

சூட்டி என் காதலை உணர்த்த........ 

அன்று காலை துயில் எழுந்த நந்தினியால் நிம்மதியாக இருக்க முடியவில்லை மனது படபடத்துக்கொண்டிருந்தது நேற்றுநடந்த அந்த சம்பவம் அவள் மனதைப்போட்டு உலுக்கிக்கொண்டிருந்தது இரவு முழுவதும் அழுது அழுது இன்று அழுவதற்கு கண்களில் நீர் இல்லாமல் தவித்தாள்.அவன் அம்மாவை அழைத்து தன முடிவை சொல்ல அவர்கள் கூறியபடி .... ஒரு லெட்டர் எழுதினால் ... வீட்டில் திருமணம் நிச்சயம் செய்துள்ள தாகவும் ... மிக வசதியான வீட்டு பையன் எனவும் ...தன்னை மறக்கும் படியும் எழுதிக்கொடுத்து விட்டு உயிரற்ற ஜடமாய் திரும்பி வந்தவள் ..மனதில் ...உன் மனதை கஷ்டப்படுத்திய நான் பாவி மட்டுமல்ல மிகப்பெரிய துரோகி.....எப்படி இனி உன் முகத்தில் முழிப்பேன்.இன்றுவரை அவன் நினைப்பில் தன்னை  முழுமையாய் தொலைத்தவளின் கண்கள் அவனது ஒற்றைக்காதல் பார்வைக்காக ஏங்கிக்கொண்டது .......மனதோ நொடிக்கொருமுறை அவன் நாமம் சொல்ல.....நாட்கள் போக போக அவன் நினைவுகள் அதிகமாவதைத்தவிர குறைந்தபாடில்லை..... 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.