(Reading time: 11 - 22 minutes)

னை வெறுத்ததாக சொன்னாலும் .. 

மனம் என்னை வெறுக்கிறதே தவிர .... 

உன்னை வெறுக்கிதில்லை .. 

உனை மறக்க முயன்றும் என்னால் 

உன் உருவம் மறைகிறது .. 

நினைவை மறக்க முடியவில்லை !!! 

விழிக்குள் பதிந்து இருக்கும் உன்..... 

உருவத்தை கண்ணீரால் கூட ... 

அழிக்க முடியவில்லை ... 

கண்ட கனவுகள் மறக்க நினைக்கிறேன் 

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீரா ராமின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்

படிக்க தவறாதீர்கள்...

கனவுகள் போல் ஆகிவிட்ட காதலை 

நினைக்க விரும்புகிறேன் ...!!! 

அவன் அம்மா கேட்டுக்கொண்டதற்கு இணங்க தன் தோழிகளிடமும் அதையே கூறியவள் அன்றே அறையை காலி செய்துகொண்டு கிளம்பி விட்டாள் ..

அன்றுமுதல் அவன் நினைவுகளுடன் மட்டுமே இவளது வாழ்கை என்றானது ...ஜடமாய் வீடு வந்தவளை தாயும் தந்தையும் கேள்வி கேட்க துணியவில்லை ... கேட்டால் மகள் உடைந்து விடுவாள் என அறியாத அளவிற்கு அவர்கள் இல்லை ... அவள் வழியிலே கொஞ்சம் கொஞ்சமாய் அவளை தேற்றினார்கள் ... விட்டு வந்த படிப்பை மீண்டும் தொடர விருப்பம் இல்லை என அவள் கூற வற்புறுத்தி கூடவே வந்து பரீட்சை மட்டும் எழுதவைத்தார்கள் ..

பெற்றோருக்காக அதை செய்தாலும் மீண்டும் அவன் பாதம் பட்ட மண்ணில் கால் வைக்கவும் ... அவன் சுவாசிச்ச மிச்சக்காற்றை சுவாசிக்கவுமே அவள் அங்கு சென்றால் ...

அவனுக்கு திருமணம் முடிந்த்திருக்கும் என்ற எண்ணமே இவளை ஊசியாய் குத்தியது ....

காரணமே இல்லாமல் அவனை விட்டு வந்ததை நினைத்து மனது துணுக்குற்றது ... அவனுக்கு தான் இழைத்த துரோகத்தின் வீரியம் உணர உணர இவள் சிலையாய் சமைந்து போனால் ..

இவளை மீட்டெடுக்க அவள் அம்மா செய்த முயற்சியாக தையல் பள்ளி ... சமையல் .. என பல விஷயங்களை கை செய்தாலும் மனம் எதிலும் லயிக்கவில்லை ..

இவளின் நிலைக்கு சம்மட்டி அடியாய் வந்தது தாய் .. தந்தை .. மரணம் ... அது அவளை நிகழ்காலத்திற்கு கொண்டுவர ... இவள் தன்னில் இருந்து மீண்டு சிவாவிற்கு தாயுமானவள்ளானால் .......

இப்படியே 4 வருடங்கள் ஓடிவிட்டது ... இன்றும் பலநாள் கனவில் ...விக்ரமுடன் முகம்தெரியாத ஒரு பொன்னும் ... சிறு குழந்தையும் சிரித்து விளையாடுவதாய் கனவு வந்து தொல்லை செய்யும் ..

அம்மா இருந்திருந்தால் இவள் கல்யாணத்தை பற்றி பேசி பேசியே தொல்லை செய்திருப்பார் .... இப்போ யாரும் இல்லாதது ஒருவகையில் வருத்தம் தந்தாலும் மறுவகையில் இவளுக்கு நல்லதாக போனது .....

இந்த ஜென்மத்தில் அவனை தவிர வேறு ஒருவனை நினைத்து பார்க்கக்கூட இவளால் முடியாது ....

நினைவில் மீண்டவள் தூங்கும் தங்கையை பார்த்து சிரித்துக்கொண்டே உறங்கி போனால் ..

இன்னும் ஒருவருடம் சிவா படிப்பு முடிந்ததும் எப்படியாவது அவளை சமாளித்து அவளுக்கு ஒரு திருமணத்தை செய்து வைத்துவிட்டால் தன் கடமை முடிந்தது என ரஞ்சி நினைக்க ..

விதியோ சதி  செய்துகொண்டிருந்தது ....அந்த சதியில் சுரேஷையும் கூட்டு சேர்த்து ... தனக்கான வேலை வந்து விட்டதாலும் ... ரஞ்சியின் கண்ணீரை காணும் சந்தோஷத்திலும் கைகொட்டி சிரித்தது ....

ங்கே விக்ரமோ ரஞ்சியின் புகைப்படத்தை கோபத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான் ...ரஞ்சி பார்த்திருந்த விக்ரமுக்கும் ... இப்போதிருக்கும் விக்ரமிற்கும் நிறைய வித்யாசம் ..... அவள் அன்று கண்ட விக்ரம் முகத்தில் எப்பொழுதும் சந்தோசம் சிரிப்பு ..குறும்புத்தனம் இருக்கும் .... இப்போதோ அவன் கண்களில் குரோதம் மட்டுமே .....

கதவு தட்டப்படும் ஓசை கேட்டவன் முகம் நிமிடத்தில் பழையபடி குறும்புத்தனமாக .. அந்த சிறிய கதவை மூடி ... ட்ரெஸ்ஸிங் டேபிள் நகர்த்தி மறைத்தவன் ... கதவை நோக்கி நகர்ந்தான் ....

தொடரும்

Episode # 05

Episode # 07

{kunena_discuss:997}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.