“ பூங்கொத்து ரொம்ப அழகாய் இருந்துச்சு வினி” என்றான் அவன் தங்கையை பார்த்து.. அவளை வினோதமாய் பார்த்து கேட்டான் சகி.
“ என்ன வினி உனக்கு தலையில ஏதும் அடி பட்டுருச்சா? அண்ணாவுக்கு பூ,எனக்கு கேக்.. என்னம்மா இதெல்லாம்”
“ அண்ணா இவனை நக்கலாய் சிரிக்க வேண்டாம்ன்னு சொல்லுங்க.”
“ ஓஹோ அபிண்ணா மட்டும் உனக்கு அண்ணன், என்னை அவன் இவன்னு சொல்லுறியா?” என்றான் சகி.
“ ஷபா .. மிச்ச சண்டையை வீட்டில் போடலாம் இப்போ போகலாம்” என்றான் அபி.. காரில் மூவருமே சளைக்காமல் பேசிக்கொண்டு வந்தனர். ஒரு சிக்னலில் அவர்களின் கார் நிற்கவும்
“ வாவ் இஸ் திஸ் சென்னை” என்று குரலை மாற்றி பேசினான் சகிதீபன்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
ப்ரியாவின் "என் காதல் பொன்னூஞ்சல் நீ" - காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்...
“ ஆமா,இவரு சிவாஜி படத்துல வர்ர ரஜினி சார்.. ஃபீல் பண்ணுறாராமாம்..”
“போடீ” என்று அவளை திட்டியப்படி இடப்பக்கம் திரும்பியவன், ஸ்கூட்டியில் அமர்ந்திருந்த அந்த பெண்ணை பார்த்தான். அவனுக்கு பிடித்த கரும்பச்சை நிற சுடிதார் அணிந்திருந்தாள் அவள். அவளின் உருவத்தை பார்த்தவனுக்கு தனது கனவு கன்னியின் நியாபகம் வந்தது. யாரோ தன்னை பார்ப்பது போல உணர்வு ஏற்படவும், சகியின் பக்கம் திரும்பினாள் அவள். ஹெல்மெட் அணிந்திருந்ததால் அவளை கண்களை மட்டும்தான் சகியால் பார்க்க முடிந்தது.கனவில் பார்த்தே அவளை அணுஅணுவாய் ரசித்தவன், இவள்தான் என்னவள் என்று கூறிக்கொண்டான். அவனை பார்த்த அவளின் கண்களிலோ அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம். “இ… இவன்…..இவர்…தான் கனவுல” என்று கூறும்போதே பின்னால் இருந்து ஹாரன் சத்தம் கேட்கவும் சாலையில் கவனம் பதித்தாள் மைத்ரேயி.!
குழலின் அடுத்த கீதத்தில் இணைவோம்
{kunena_discuss:883}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.