(Reading time: 16 - 31 minutes)

மா, நாள் முழுக்க கூட இருந்து என்ன பயன்? அவளுக்கு வாந்தி நிற்கிற மாதிரி ஏதாச்சும் மருந்து ரெடி பண்ணலாம்ல?”

“இப்ப என்னடா?உன் பொண்டாட்டியை நீயே பார்க்கறியா? இல்ல நான் போகனுமா?” என்று சாரதா அதட்டல் போடவும், அங்கு நின்று வீண் பேச்சு பேசி நேரத்தை வீணடிக்கிறோம் என்றுணர்ந்து குளியலறைக்குள் ஓடினான் அபிநந்தன்.

“ எதுக்கு சாரதா அவனை திட்டுற?”

“ நீங்க அவனுக்கு சப்போர்ட் பண்ணாதிங்க.. அவன்  பொண்டாட்டிய அவன்தானே கவனிக்கனும்.. நீங்க சாப்பிடுங்க “ என்று அதட்டிய சாரதா அருண் தாத்தாவின் மெச்சுதல் பார்வையை பரிசாய் பெற்றுக் கொண்டார்.

குளியலறையில்,

“ இன்னும் வாந்தி வர்ர மாதிரி இருக்கா?” என்று கேட்டப்படி மனைவியின் தலை பற்றிக்கொண்டான் அபி.

“ என்னை விடுங்க நான் பார்த்துக்குறேன்”

“ ப்ச்ச்ச் அடம் பிடிக்காத.. நீ பார்க்கவே ரொம்ப வீக்கா இருக்க”

“ இது பாருங்க, இங்க நீங்களும் நானும்தான் இருக்கோம்.. இங்க நீங்க நடிக்கனும்னு அவசியமே இல்லை” இறுகிய குரலில் வார்த்தைகளை கடித்து துப்பினாள் நந்திதா.

“ஹேய் யாருடீ நடிக்கிறா ?”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

நிஷா லக்ஷ்மியின் "வானவிழியழகே..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

“நீங்கத்தான்! பெரியவங்க முன்னாடி நம்ம விஷயம் தெரியக்கூடாதுன்னு நினைச்சு தானே இவ்வளவு  நாடகம்.. இல்லன்னா, என் வயித்துல உங்க குழந்தை இருக்குன்னு கரிசனமா?”

“ நந்திதா”  என்று பற்களை கடித்தவன் கோபத்தில் அவள் கைகளை இறுகப்பிடித்தான். அவள் வலியில் முகத்தை சுருக்கிக் கொள்ளவும், பிடியை தளர்த்தினான். அடிப்பட்ட குரலில்,

“ என்னை நீ நம்பவே மாட்டியா?” என்றான்.

“ எதற்கு நம்பனும்? எப்படியும் இன்னும் கொஞ்ச நாள்தான் உங்க கண்முன்னால நான் இருக்க போறேன்.. வளைகாப்புக்கு அப்பறம் நிரந்தமா என் அம்மா வீட்டுலயே இருந்திடலாம்ன்னு முடிவுக்கு வந்துட்டேன்.. இன்னும் கொஞ்ச நாள்தான் ..என்னை நானே பார்த்துக்குறேன்.. இந்த கரிசனம் எனக்கு வேணாம்..”

“ உன்னை நான் எங்கயும் போக விடமாட்டேன் .. உன் மனச கண்டிப்பா மாற்றுவேன்” என்றான் அபிநந்தன். அவன் பற்களை கடித்துக் கொண்டு சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அவள் மனதினை மயிலிறகாய் வருடியது.. இருப்பினும் அதனை காட்டிக்கொள்ளாமல்

“ ஆல் தி பெஸ்ட்”  என்று கூறினாள். உன்னை என்னத்தான் செய்வது என்பது போல பெருமூச்சு விட்டு இயலாமையுடன் பார்த்தான் அபிநந்தன். வலி மிகுந்த அவனது விழிகளை இமைக்காமல் பார்த்தால் நந்திதா.. அவளுக்குமே அவனை இப்படி வேதனை படுத்தி பார்ப்பதில் இஷ்டம் இல்லைத்தான்.. ஆனால் அவளுக்கு அவன் முழுவதுமாய் வேண்டும்..எந்த ஒரு கசப்பான எண்ணங்களும் இல்லாமல் அவளை அவளுக்காகவே அவன் ஏற்க வேண்டும். இதற்குத்தான் இவ்வளவு போராடுகிறாள்.இன்னும் சிலநொடிகள் அவன் கண்களைப் பார்த்தால்,கட்டுப்பாட்டை இழந்து அவன் மார்பில் தஞ்சம் அடைந்துவிடுவோமோ என்ற பயம் அவளுக்குள் உண்டானது.

எனவே முகத்தை திருப்பிக் கொண்டு இரண்டடி வைத்து நடந்தவள் தலை சுற்றவும் அப்படியே நகராமல் நின்றாள். அவள் நிலையை உணர்ந்த அபி, “சரிதான் போடீ” என்று அவள் தடுப்பதை கண்டுக்கொள்ளாமல் அலேக்காய் அவளை தூக்கிக் கொண்டே தனது அறைக்கு சென்றான்.

“ இங்க எதுக்கு தூக்கிட்டு வந்தீங்க ? நான் அத்தை ரூமுக்கு போறேன்.”

“ வாயை மூடுறியா? நொய் நொய்ன்னு பேசிக்கிட்டே இருக்கியே.. நான் இப்போ ஜூஸ் கொண்டு வருவேன்.. எதுவும் சொல்லி மறுக்காமல் குடிச்சிட்டு ரெஸ்ட் எடு.. நான் ஏர்போர்ட் போயிட்டு வந்து உன்னை பேசிக்கிறேன்” என்று மிரட்டியவன் சொன்னது போலவே அவளுக்கு ஜூஸ்கொடுத்துவிட்டு கிளம்பினான்.   

னை என்ன செய்தாய் வேங்குழலே..?

உனக்கும் எனக்கும் ஒரு பகை இல்லையே?

நாளும் சுக நாதம் தந்து

அனல் மெழுகாய் இந்த

இளமனம் அளகிடவே

எனை என்ன செய்தாய் வேங்குழலே?”

காரில் ஒலித்த அந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருந்தாள் சதீரஞ்சனி. “வேங்குழல்” ..!

அவளின் காதல் தான் அவளுக்கு வேங்குழல்..! காதல் என்பது தவறான உறவில்லை எனினும் தனது நண்பனின் மீதா இக்காதல் வந்து தொலைய வேண்டும். நட்பிற்குள் வந்த சலனம் இருவருக்குமே சங்கடம் அல்லவா? தனக்குள் காதலை சுமந்துகொண்டு தன் நண்பனிடம் அதை மறைப்பது தவறு தானே ?

“ என் ரஞ்சுக்கிட்ட நான் எதையுமே மறைக்க மாட்டேன்.. எங்களுக்குள் ஒளிவு மறைவு என்பதே கிடையாது” என்று அவனால் மார்த்தட்டிக் கூறிட முடியும். இதையே அவளால் செய்ய முடியுமா? முடியாதே ! உள்ளொன்று இருக்க புறமொன்று எப்படி சொல்வாள்?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.