(Reading time: 16 - 31 minutes)

ன்ன இவ இப்படி மெலிஞ்சுட்டா?” என்று அவன் மனம் வெகுண்டது. கண்களில் ஜீவனே இல்லாமல் அவனைத் தேடிக்கொண்டு நடந்தவள் கண்முன்னால் கைகட்டி நின்றவனை பார்த்ததும் அகமும் முகமும் மலர்ந்தாள். சற்றுமுன் இருந்த வேதனை பனிபோல மறைந்து அவள் முகம் மலர்ந்த காட்சி அவனுக்குள் கர்வத்தை உருவாக்கியது.

“ கௌதம்ம்ம்ம்ம்” என்றவள் ஏர்போர்ட்டில் அத்தனை பேர் மத்தியில் தான் உரக்க பேசுவதை கூட உணராமல் இருந்தாள். கௌதமை கடந்து போக வேண்டிய விஷ்வானிகா அப்படியே ஒரு நொடி நின்றாள். தனக்கும் ரஞ்சனிக்கும் இடையில் நடந்த ஒரு பெண் அப்படியே அசையாமல் நிற்கவும் கௌதமின் பார்வையும் விஷ்வானிகா மீது படிந்தது.

“இவளா? யாரை மறக்க நினைத்தோமோ அவளையா முதலில் பார்க்க வேண்டும் ?விதியை என்னென சொல்வது ? விஷ்வானிகா.. கௌதம்.. கௌதம்..விஷ்வானிகா என இருவரையும் மாறி மாறி பார்த்து கொண்டிருந்தாள் சதீரஞ்சனி. ஒரு நொடியில் நூலருந்த பட்டம் போல் விழுந்தது அவள் மனம். ஆனால் அது ஒரேடியாய் விழும்முன்னே கௌதம் அவளை கட்டி அணைத்திருந்தான்.. ஆம், விஷ்வாவை பார்த்த கௌதம் என்ன செய்ய போகிறான் என்ற திக் திக் நேரத்தில் மிக இலகுவாய் முகத்தில் கோபத்தை கூட காட்டாமல் யாரோ ஒருத்தியை கடந்து போவது போல விஷ்வாவை தாண்டி போன கௌதம், ரஞ்சனியின் விழிகளில் எதை கண்டானோ அவளைஇழுத்து தன் மீது சாய்த்து இறுக அணைத்துகொண்டான்.

உதடுகள் துடித்தன, கண்ணீரில் காட்சிகளே சரியாய் தெரியவில்லை.. அவளுக்கு தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்று தான்! “கௌதம்… கௌதம்விஷ்வாவையும் கடந்து தன்னிடம் வந்துவிட்டான்”.

“ஹேய் லூசு, ஏன்டா இப்படி இளைச்சு போயிட்ட ? இதுக்குத்தான் நான் மலேசியா போகலன்னு சொன்னேன்” என்று குறைப்பட்டுக்கொண்டான் கௌதம். ஆறுதலாய் புன்னைகைத்தவள்,

“ அதான் இப்போ வந்துட்டியே டா..இனிமே சரியாகிடுவேன்” என்றாள்.

“ சரி போகலாமா?”

“ கௌதம் !”

“ என்ன டா? இங்கயே நின்னு பஞ்சுமிட்டாய் விக்க போறியா? எனக்கு இங்க முக்கியமான வேலையோ விஷயமோ எதுவும் இல்லை.. என் கூட வா” என்று அவளையும் இழுத்துகொண்டு நகர்ந்தான் அவன்.

அவன் போகும் பாதையையே பார்த்துக்கொண்டிருந்தாள் விஷ்வானிகா. மனதில் எவ்வளவு இறுக்கம் இருந்தாலும் அவளும் சராசரி பெண்தான். கௌதம் மீது அவளுக்கு காதலும் இல்லை எந்தவொரு எதிர்ப்பார்ப்பும் இல்லை.. ஆனால் அவனின் காதல் ? அவன் காதலைப் பற்றி அவளுக்கு நன்கு  தெரியும். அவன் அவளை உண்மையாகத்தான் நேசித்தான். உண்மையாக நேசித்த ஒருவனே தன்னை முழுவதுமாய் வெறுக்கும் அளவிற்கா தான் இருக்கிறோம் என்ற தாழ்வுமனப்பான்மை அவளுக்குள் எழுந்தது. தங்கையிடம் சகஜமாய் பேச வேண்டும் என்று அப்போதுதான் முடிவெடுத்திருந்தான் சகி.. ஆனால் அவளது முகம் போன போக்கை கண்டதுமே மனம் மாறினான் அவன். இப்போதைக்கு பாச மழை பொழிய அவசியமில்லை என்று முடிவெடுத்து அவள் முன் சென்றான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சுபஸ்ரீயின் "கிருமி" - புத்தம் புதிய தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

“ அஹெம்” என்று தொண்டையை செருமிக்கொண்டான். அவனை பார்த்து விஷ்வா புன்னகைக்கவும்

“ வாவ் நீ சிரிக்கிறியா? உனக்கு கொடுக்கனும்னு கர்சிவ் ரெடி பண்ணேனே ..அதெல்லாம் வேஸ்ட்டா விஷ்…”.  “விஷ்வா” என்று அவன் அழைப்பானா என்று எதிர்ப்பார்த்தாள் அவள்.. வீட்டில் அனைவரும் அவளை வினி என்று தான் அழைப்பார்கள் என்பதை விட, அவள் அப்படி அழைக்க வைத்தாள் என்றுத்தான் கூற வேண்டும். அவளைப் பொறுத்தவரை அவளது செல்ல அண்ணன் சகி மட்டும் தான் அவளை விஷ்வா என்று அழைக்க வேண்டும்..அது அப்போது ! ஆனால் இன்று ?இன்றும் அவளுக்குள் அந்த எதிர்பார்ப்பு எழ, அதை பொய்யாக்கினான்.

“அதெல்லாம் வேஸ்ட்டா வினி?” என்று சர்வசாதாரணமாய் அழைத்தான்.பழைய நிலையில் இருந்தாள் இந்நேரம் அழுதிருப்பாள் அவள்.. இப்போதோ,

“ இட்ஸ் ஓகே சகி..நீயே வெச்சுக்க “ என்றாள்.

“ ஹேய் என்ன சகி? சகி அண்ணான்னு மரியாதையா கூப்பிடு !”

“நீ என்னை எப்போ நான் விரும்புற மாதிரி கூப்பிடுறியோ, நானும் அப்போ உன்னை அண்ணான்னு சொல்லுறேன்”

“ஓஹோ.. சரி பார்க்கலாம்” என்று சகி சிரிக்க,விஷ்வாவும் சிரிக்க அங்கு சிரித்தபடி வந்தான் அபிநந்தன்.

“ பாருடா, கிழக்கும் மேற்கும் பக்கம் பக்கம்நின்னு சிரிக்கிது” என்றபடி வந்தவன் இருவரையும் அணைத்துக் கொண்டான்.

“ ஹா ஹா அதைவிட நீங்க இப்படி சிரிக்கிறது தான் அண்ணா பெரிய அதிசயம்” என்றான் சகி.. சகி தலையில் வலிக்காமல் கொட்டு வைத்தான் அபி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.