(Reading time: 9 - 18 minutes)

மிக சாதாரண விஷயத்தை சினிமா ஆபாசமாக்கியது ஒருபுறமென்றால் மறுபுறம் ஆபாசமான பல விஷயங்களை ஹீரோயிசமாக்கியது.

பெண்ணுடன் , பேசுவதே சாதனையாக கருதும் மனதை ஆண்களும், ஆண்கள் பேசினாலே அது காதல் என்றும் (பெண் காமம் என்று கூட நினைக்கமாட்டாள், காரணம் காமம் தவறு அதை பெண் பேச கூடாது) பெண் அர்த்தப்படுத்தி கொள்ளுமாறு ஒரு சமூக கட்டமைப்புக்குள் அத்தனை உணர்வையும் மூச்சு திணற வைத்து கொண்டிருந்தோம். திடீரென சமூக வலைத்தளம் பேஸ்புக் வாட்ஸ் அப் போன்றவை மூச்சு முட்டிக்கிடந்த உணர்வுக்கு வடிகால் அமைக்க பாலியலுக்கான வடிகாலாக ஆண் பெண் பார்க்க தொடங்கிவிட்டனர்.

இந்த சிக்கல்களில் சிக்கி சின்னா பின்னமாவது தான் எதை தேடுகிறோம் என்று தெரியாமல் எதிலோ தொடங்கி எதிலோ சிக்கி கொள்ளும் இருபாலரும் தான். அதிலும் உணர்வு சிக்கலில் சிக்கி கொள்வது அதிகமாக பெண்களே. எப்போதும் ஆண்கள் தெளிவாக இருக்கிறார்கள் காமம் தான் தன் தேடல் என்று ஆனால் பெண்களால் காதல் தாண்டிய காமம் குற்றமாகவே பார்க்கப்படுவதால் அதிக மனச்சிக்கலுக்குள் வீழ்கிறார்கள்.

ஆண் மோசமானவன் என்பது அல்ல என் வாதம். சிக்கலில் அதிகம் சிக்கிக்கொள்ளும் பெண்களை பற்றிய ஆதங்கம் இது ... பெண்ணின் மனது இவ்வாராய் யோசிக்க ...

சட்டென எழுந்தவன் நான் வீட்டில் பேசுறேன் இப்போ நிச்சயம் செய்து கொள்ளலாம் படித்து முடித்ததும் திருமணம் என்று பட்டென்று சொல்லிவிட்டு இவள் எழுந்து கொள்ள கை கொடுத்தான் ....

சிவாவினுள் குழப்பத்தின்மேல் குழப்பம் ..ஆனால் ..உண்மையானவர்களுக்கு 

காதல் என்பது அளவிடமுடியாத கண்மூடிதனமான நம்பிக்கை .....சிவாவின் காதல் நிஜம் அதோடு ரவி மீது அவளுக்கு நம்பிக்கை அதிகம் ... கடந்த 3 வருடங்களில் அவன் பெண்களை அநவிஷயமாக பார்த்ததும் இல்லை உதவி என்று வந்தவர்களை தவிர்த்தும் இல்லை ...சிவாவிற்கு இருந்த அதீத நம்பிக்கையில் எதுவும் பேசாமல் அவனுடன் நடந்தால் ..

அங்கு இன்னும் ஆட்டம் பாட்டம் என அரங்கேறி கொண்டிருக்க இவள் அமைதியாய் அமர்ந்து இருந்தாள் ... ரவியின் பார்வையும் அவ்வப்போது தன்னை தழுவிச்செல்வதை உணர்ந்தாள் ..

கொண்டாட்டம் முடிந்து அனைவரும் கிளம்ப ரவி சிவாவை வீட்டில் விடுகிறேன் என அழைத்து சென்றான் ... போகும் வழியில் சிறிது நேரம் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை ..பின் ரவி மெதுவாக சிவா நடந்தது சரி தவறு என நான் எதையும் நியாயமோ அல்லது அநியாயமோ என்று ஆராயவில்லை நடந்தது நடந்துவிட்டது ... நான்  வீட்டில் பேசுகிறேன் எங்க வீட்டில் எல்ல முடிவும் பெரும்பாலும் அண்ணனுடையது ....அம்மா அப்பாவை சரிசெய்வதும் அண்ணனால் மட்டும் முடியும் ...

தங்கைக்கும் திருமணம் முடிந்துவிட்டது அதனால் விஷயம் பேச கொஞ்சம் எளிதாய் இருக்கும் ....நான் செமஸ்டர் லீவ் அப்போ அண்ணாவிடம் மெல்ல விஷயத்தை கூறிவிடுவேன் ... அப்பொழுதே மற்றவர்களிடமும் பேசி .... உன் அக்காவிடம் பேசச்சொல்கிறேன் ..

அக்கா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

சிவாவிற்கு இப்போதுதான் உரைக்கிறது அம்மாவிற்குப்பின் தன்னை தந்தையும் தாயுமாய் கவனித்தவளை எந்த முகம்கொண்டு பார்ப்பது ...தான் அவளுக்கு எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகம் இழைத்திருக்கிறோம் ...நினைக்க நினைக்க கண்ணீர் ஆறாய் பெருகியது ...

அவளின் கண்ணீரின் காரணத்தை தவறாய் உணர்ந்தவன் அழாதே சிவா வீட்டில் பேசி நான் எல்லாத்தையும் பார்த்து கொள்கிறேன் என ... 

விசும்பலுடன் இவள் அக்கா என்க ... நொடியில் உணர்ந்தவன் அம்மா வந்து அக்காவிடம் பக்குவமாய் பேசுவாங்கடா நடந்ததை பத்தி வெளியே கூறவேண்டாம் ... அம்மா உன் அக்காவை நிச்சயம் சம்மதிக்க வைப்பார்கள் ... 

சரி கண்ணை துடைச்சிக்கோ .... வீடுவந்து விட்டது ... 

கதவு தட்டியவுடன் வந்த ரஞ்சி இயல்பாய் ரவியையும் உள்ளேய அழைத்து காபி கொடுத்து உபசரித்து விட்டே அவனை அனுப்பினால் ...

நாட்கள் நகர்ந்து செல்ல விடுமுறை முடிந்தது ... இடையிடையே பேசிய ரவி சிலநாட்களாய் தொடர்புகொள்ளவும் இல்லை இவள் அழைத்தபோது அவன் எண் அணைக்கப்பட்டிருந்தது ... மனதில் ஒருவித பயம் வந்து வந்து போனாலும் அவன் மீது இருந்த நம்பிக்கையில் சிவா பொழுதை கழித்தால் ...

ரஞ்சியும் சிவாவை கவனித்துக்கொண்டுதான் இருந்தால் ...சரியாக உண்ணாமலும் உறங்காமலும் ... போன் சத்தம் கேட்டாள் விழுந்தடித்து ஓடும் தங்கைபார்க்க சிரிப்பாக வந்தது ...

ரஞ்சிக்கு சிவாவும் ரவியும் ஒருவரை ஒருவர் நேசிப்பதாய் சந்தேகம் இருந்தது அன்று வீட்டைவிட்டுக்கிளம்பும்  மம் அவன் கண் சிவாவுடன் பேசிய  மொழியை கண்டும் காணாததுமாய் இருந்துவிட்டால் ..

தங்கை நிலை கண்டவள் ஏதோ காதலர்களுக்குள் வரும் ஊடல் என இருந்து விட்டாள் ...

விடுமுறை முடிந்து ஒருவரை ஒருவர் நேராக பார்த்து பேசினாள் ... சிவா சரியாகிவிடுவாள் என நினைத்து தனக்குள்ளே சிரித்துக்கொண்டாள் ....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.