(Reading time: 6 - 12 minutes)

" போடி குடுகுடு கெழவி" என்று நித்திலாவை சொன்னவள், சிவநேசனின் தோளில் சாய்ந்து கொண்டு காபியை பருக,

"ரெண்டு பேரும் கெழவிக தான்" என்று சிவநேசன் சொல்ல,

"பாட்டி" "கோம்ஸ்" என்று நித்திலாவும் நேத்ராவும் கத்த, அவர்களின் வாயை பொத்தி சிவநேசன் சிரிக்க இருவரும் மலர்ந்து சிரித்தனர்.

சிரிப்பினுடே வீட்டை நோக்கி,

"ஹாய் மா குட் மார்னிங்" என்று நேத்ரா சொல்ல, நித்திலாவின் சிரிப்பு சுவிட்ச் போட்டதை போல நின்றது..!!

நேரம் பத்தை கடந்திருக்க, மிக அருகில் அடிக்கும் தன் அலைபேசி ஒலியை கொஞ்சம் கொஞ்சமாய் உள்வாங்கி பதறி எழுந்து அழைப்பை ஏற்று காதுக்கு கொடுத்தான் வைஷ்ணவ்.

"ஹ..லோ" தூக்கம் இன்னும் தெளியாமல் கொஞ்சம் உளறலை வெளிவந்த அவன் குரலை கேட்டவாறு கண் விழித்தான் மித்ரன்.நேற்றைய இரவு நேரம் ஆகிவிட்ட படியால் அதே ஹோட்டலில் டபுள் பெட் கொண்ட அறைக்கு மாற்றி கோட்னு அங்கேயே தங்கி விட்டனர் இருவரும். நள்ளிரவுக்கு மேல் தூங்கியதால் இந்த தாமதம்.

"டேய் இன்னும் தூங்கறயா நீ?" ஆச்சர்யமாய் வெளிவந்தது அந்த பெண் குரல்.

"ஆமாம் நைட் லேட்டா தானே தூங்கினேன், தூங்குறதுக்கு முன்னாடி உனக்கு மெசேஜ் பண்ணினேன் தானே? அப்புறம் என்ன கேள்வி?"

பேசிக் கொண்டிருந்தவனை பார்த்து 'யாரு?' என சைகையில் கேட்டான் புது நண்பன். சிரித்துக் கொண்டே போனை ஸ்பீக்கரில் போட்டான் வைஷ்ணவ்.

"எரும அது நைட்டா உனக்கு? மூணு மணிக்கு வந்திருக்கு டா உன் மெசேஜ், பாக்கி சோம்பேறி கழுதை"

"ஹேய் ஏன் இப்படி திட்ற? மித்ரனும் நானும் சேர்ந்து பேசிட்டு தூங்க லேட் ஆகிடுச்சு"

"ஓஹோ புது பிரென்ட் கிடைச்சதும்.. என்னை மறந்துட்ட உன் பழக்க வழக்கம் கூட மறந்துடுச்சுல்ல?"

"அப்படி இல்லடா நாய் குட்டி"

"ஒன்னும் நீ செல்லம் கொஞ்ச வேண்டாம்"

"டேய் என்னடா ப்ளீஸ் ஒரு நாள் தானே?"

"முடியாது மார்னிங் நான் எழுந்துக்க லேட் ஆனாலும் நீ 5.30 மணிக்கெல்லாம் எழுந்து என்னை எழுப்பிவிடுவ? இப்போ பாரு ஒரே நாள் ல"

"பாப்பு"

"பேசாதே அந்த நித்திலா எப்போ உன் லைஃப்ல வந்தாலோ எப்போ நீ அவளை மீட் பண்ணினாயோ அன்னைல இருந்து நீ நீயாவே இல்லை, என்னோட லட்டுவாவும் இல்லை போ"

"ஹேய் நான் சொல்றேன்ல அப்படி ஏதும் இல்லை"

"இல்லை ஐ ஹெட் ஹர், எனக்கு நீ என் லட்டுவா எப்பவும் வேணும், உன்னை விட்டு தர மாட்டேன்"

அவ்வளவு நேரம் அவர்கள் பேசுவதை கேட்டு அவள் யார் என்பதை முந்தைய இரவு வைஷ்ணவிடம் பேசியதை வைத்து கணித்திருந்தான் மித்ரன். ஒரு வித சங்கடத்துடனும் சிரிப்புடனும் உரையாடலை கேட்டவன் கடைசியில் அவள் நித்திலா மீது இருக்கும் வெறுப்பை கூற அதிர்ச்சியுடன் வைஷ்ணவை பார்த்தான்!!

உயிர் தேடல் தொடரும்

Episode # 04

Episode # 06

{kunena_discuss:1037}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.