(Reading time: 20 - 40 minutes)

ண்களால் தன் தேவதையைப் படமெடுத்தவன், அதை டெவளப் செய்து, பிரிண்ட் போட்டு, அழகாக ஃப்ரேம் போட்டுத் தன் இதயத்தில் மாட்டினான். இந்த போட்டோ வேளை எல்லாம் முடியும் வரை கண்களை மூடி இருந்தவன் அது முடிந்ததும் கண்களை திறக்க மெல்ல இமைகளை அசைக்க,  அதை உணர்ந்து கொண்டவள் சட்டென்று தன் எண்ணத்திற்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டு கடவுளை நோக்கி கண்களை மூடினாள்.

கண்களைத் திறந்தவன் அவள் இன்னும் சாமி கும்பிடுவதால் அப்படியே அமைதியாக நின்றான். சற்று நேரத்தில் கண்களை திறந்தவள் போகலாம் என்று கூறி இருவரும் மொத்த தெய்வத்தையும் வணங்கிவிட்டு, கடல் கரையில் சிறிது நேரம் காற்று வாங்கிவிட்டு வீடு வந்தனர்.

சிறிது நேரத்தில் விஷ்ணு கிளம்ப, இரவு உணவை முடித்துவிட்டு தன் படுக்கையில் வந்து படுத்தாள் அனு. மன நிறைவுக்காகக் கோயிலுக்கு சென்றவளுக்கு மனம் நிறைந்து போயிருந்தது, ஆனால் அது அவள் வேண்டிய நிறைவு அல்ல. தன் மன குதிரையை திபக்கை நோக்கிச் செலுத்த வழி சொல் என்று கோயிலுக்கு சென்றவளுக்குக் கிடைத்த வழி என்னவோ எதிர் வழிதான். அதான் அவள் மனம் என்னும் அழகிய குதிரை விஷ்ணுவை நோக்கி இன்னும் வேகமாகவே ஓடத் தொடங்கியது.

முன்பெல்லாம் விஷ்ணுவின் மேல் காதலா என்று நினைக்கும் போது எல்லாம் எங்கே திபக்கிற்கு துரோகம் செய்கிறோமோ என்ற எண்ணமும் சேர்ந்தே கூட வரும். ஆனால் இப்போது அந்த எண்ணம் எங்குப் போயிற்று என்றே தெரியவில்லை.

அடுத்து வந்த நாட்களில் விதையாய் அனுவின் மனதில் விழுந்த விஷ்ணு, ஒவ்வொரு இலையாய் துளிர் விட்டு ஒரு அழகிய ரோஜாச் செடியாய் முளைத்திருந்தான். (ரோஜாச் செடி என்று கூறியதற்கு 2 காரணங்கள், ஒன்று அழகிய ரோஜாவாக விஷ்ணு அவள் மனதில் பூத்திருந்தாளும், அதைச் சுற்றி திபக்கிற்கு துரோகம் என்ற முள் சூழ்ந்து குத்தத்தான் செய்தது. இரண்டாவது காரணம் காதலர்களுக்கு என்றுமே ரோஜாதானே தேசிய பூ……..”)

இப்படியாக 74 நாட்கள் சென்றாகி விட்டது. இன்னும் திருமணத்திற்கு 15 நாட்களே இருந்தது விஷ்ணுவின் கடைசி 15 நாட்களும் தான்.

அன்று நடக்கப் போவது எதுவும் தெரியாமல், புதிதாய் பூர்த்த மலர் போல் கண் திறந்தாள் அனு. கண் திறந்தவளின் உதடுகள் அழகாய் புன்னகையை உதிர்த்தது. காலையிலே அவள் மனம் ஏனோ ஆனந்தமாய் உணர்ந்தது. அதற்குக் காரணம் அவள் கண்ட கனவாகக் கூட இருக்கலாம்.

பட்டு வேட்டி சட்டை அணிந்து விஷ்ணு முன் நடக்க அழகிய குற புடைவை அணிந்து இவள் அவன் கரம் பற்றி பின் நடக்க இருவரும் யாக குண்டத்தை சுற்றி வந்தனர், இதுவே அனு தன் கனவில் கண்ட காட்சி.

தூக்கம் கலைந்து எழுந்தாலும் அவளால் அந்தக் கனவை விட்டு வெளியே வர முடியவில்லை. அவள் உதடுகள் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் புன்னகைத்துக் கொண்டே இருந்தது.

எழுந்து முகம் கழுவ சென்றவள், கண்ணாடியைப் பார்க்க, கண்ணாடியில் தெரிந்த அவள் உருவமே அவளைச் செல்லமாய் கேலி செய்வது போல் தோன்ற, பெண்மைக்கே உரித்தான வெட்கம் அவளை ஆட் கொண்டது. உடனே “சீ போடி” என்று தனக்கு தானே கூறிக் கொண்டு முகம் கழுவி கீழே இறங்கி வந்தாள்.

இறங்கி வந்தவளின் கண்ணில் பார்வதியுடன் பேசிக் கொண்டிருந்த விஷ்ணு தென்பட, ஒரு நொடி அவள் கண்ட கனவு கண் முன் வந்து சென்றது. உடனே அவளையும் அரியாமல் ஒரு வெட்கம் அவளை ஆட் கொண்டது. தன் எதிரில் இருந்த கண்ணாடியை பார்த்து உடனே தன் கூந்தலைச் சரி செய்து, தன்னை அழகு படுத்தினாள்.

இவள் வருவதைப் பார்த்த பார்வதி “ ஏன் டீ மணி எட்டு ஆகுது, இன்னொரு வீட்டுக்குப் போர பொண்ணு இப்படிதான் 8 மணி வரைக்கு தூங்குறதா” என்றார் அனுவைப் பார்த்து.

அதற்கு ஏதோ பதில் சொல்ல வாய் எடுத்தவள், அதற்குள் விஷ்ணுவும் தன்னை தான் கவனிக்கிறான் என்று தெரிந்து மௌனமானாள்.

அதற்குள் வேளைக்குக் கிளம்ப தயாரான ராஜ சேகர் வெளியே வர தன் மகளுக்காக மனைவியிடம் பதில் கூறினார். “விடு பார்வதி, எல்லாம் இன்னும் 15 நாள் தானே. கல்யாணம் முடித்து திபக் வீட்டுக்கு போயிட எப்ப தூங்குவா எப்போ ஏந்திரிப்பானு தெரியாது. நம்ம வீடு மாதிரி ஃபிரியா இருக்க முடியுமா” என்றார்.

கல்யாணம், திபக், என்றெல்லாம் கேட்டவுடன், அதுவரை கனவில் மிதந்த அவள்  உள்ளம் நிஜ உலகிற்கு வந்தது. தந்தை கூறியது போல் இன்னும் 15 நாட்கள்தன் இருக்கிறது என்று தோன்றும் போதே அவளைச் சோகம் வந்து தொற்றிக் கொண்டது. ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொல்லாமல் “அப்படி சொல்லுங்க மை டியர் டாடி” என்று கூறி அவரை அனைத்துக் கொண்டாள்.

“இவ கொட்டு போராதே உங்களால தான். அங்க போய் இவ இப்படி இருந்தா உங்கள ஒண்ணும் சொல்லமாட்டாங்க. தாய் சரியா வளர்க்கல னு என்ன தான் தப்பு சொல்லுவாங்க” என்று தாயிக்கே உரித்தான கவலையை வெளிக்காட்டினார் பார்வதி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.